இந்திய எல்லையில் சீனா செய்வது நண்பனின் முதுகில் குத்தும் துரோகச்செயல்! - ஏ.கே. அந்தோணி



india china border dispute ak antony interview on ladakh indian ...
இந்தியன் எக்ஸ்பிரஸ்



ஏ.கே. அந்தோணி

முன்னாள் ராணுவத்துறை அமைச்சர்

இந்திய வீரர்கள் பலியாவதை தடுத்திருக்க முடியுமா?

சீனர்கள் நாம் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கும்போது தாக்கியிருப்பது நம்பிக்கை துரோகம். நமது ராணுவத்தை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தினால் நம் வீரர்கள் பலியாவதை தடுக்கலாம்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது 43 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு சீனர்கள் இந்தியாவின் இடத்தை ஆக்கிரமித்தனர். 600க்கும் மேற்பட்ட முறை அத்துமீறல் நடந்தது என பாஜக தலைவர் ஜே.பி. நட்டா கூறியுள்ளாரே?

அது தவறான தகவல். 1962ஆம் ஆண்டுதான் சீனா முன்னேறி தாக்கி இந்தியப் பகுதிகளை ஆக்கிரமித்தது. அதற்குப் பிறகு எங்களுடைய ஆட்சியில் அதுபோன்ற சம்பவங்கள் நடக்கவில்லை.

சீனாவை எப்படி சமாளிப்பது?

இந்தியா 1962இல் இருந்த நிலையில் இல்லை. இன்று நம்மிடம் திறன் வாய்ந்த ஆயுதப்படைகள் உள்ளன. அவர்களை வைத்து தாக்கி பதிலடி கொடுக்கவேண்டும். காங்கிரஸ் அரசு இரண்டாவது முறை ஆட்சியில் இருந்தபோது, சுமார், டெப்சங் ஆகிய பகுதியில் முன்னேற முயன்றனர். ஆனால் அதனை முழுமையான செயலாக செய்யவில்லை. அப்போது சீனா தென்சீனக்கடலில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்திக்கொண்டிருந்தது. பின்னர், தைவான், ஹாங்காங் ஆகிய பிரச்னைகளில் மாட்டிக்கொண்டது. அவர்கள் தாக்குவதும் பின்னர் பின்வாங்குவதுமான சூழ்ச்சியை நாம் கவனமாக அறிந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

சீனா திடீரென தாக்குதல் நடத்தியது ஏன்?

சீனா இப்படி நம்பிக்கை துரோகம் செய்யும் என யாரும் எதிர்பார்க்கவில்லை என்பதுதான் உண்மை. காரணம், சீன அதிபர் அண்மையில்தான் மகாபலிபுரத்திற்கு வந்து பிரதமரோடு உரையாற்றிவிட்டு சென்றார். இந்திய அரசு நம் இறையாண்மைக்கு பாதிப்பு வராமல் சீனாவின் நடவடிக்கையை கட்டுப்படுத்த வேண்டும்.

லடாக்கிலுள்ள நிலைமை பற்றி முன்னாள் ராணுவ அமைச்சராக என்ன நினைக்கிறீர்கள்?

சீனர்கள் அவர்கள் பகுதியில் கட்டுமானங்கள் செய்கிறார்கள். அதை நாம் ஆட்சேபிக்கவில்லை. ஆனால் இவர்கள் கல்வான் பள்ளத்தாக்கில் திடீரென தாக்குதல் நடத்தியது உண்மையில் எனக்கு அதிர்ச்சியளித்தது. அங்கு சாலை வசதிகளை அமைத்துக்கொடுக்கும் பணி காங்கிரஸ் அரசின் காலத்தில் தொடங்கியது. இந்த மேம்பாட்டு பணிகளை சீனா ஆட்சேபிக்கவில்லை. ஆனால் இப்போது தனது எதிர்ப்பை இருபது பேர்களை கொன்று தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் அரசு தன்னை மட்டுமே எதிர்க்கிறது சீனாவை எதிர்க்கவில்லை. நட்பு பாராட்டுகிறது பிரதமர் மோடி கூறியுள்ளாரே?

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ள போது கம்யூனிஸ்ட் கட்சி சந்திப்புகளுக்கு சென்றது உண்மைதான். பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு அக்கட்சி பிரதிநிதிகள் அங்கு சென்றுவருகிறார்கள். இந்தியாவில் தனி ஒரு முதல் அமைச்சராக சீன பிரதமரை நான்கு முறையும், பிரதமராக 19 முறையும் இந்தியாவுக்கு அழைத்தவர் இந்திய பிரதமர் மோடிதான். ராணுவத்தை தாக்கி வீரர்களை அந்நாட்டினர் கொன்றுள்ள சூழலில் நமது இறையாண்மை பக்கமே காங்கிரஸ் கட்சி நிற்கும். காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியமும் அதுவேதான்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்

மனோஜ் சிஜி


கருத்துகள்