கேரளத்தில் கோவிட் -19 நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தியது கடினமான பணி! - சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. சைலஜா





vadivelu GIF by Tamil Memes
ஜிபி








கே.கே. சைலஜா, சுகாதாரத்துறை அமைச்சர், கேரளம்

இந்தியா நோய்த்தொற்று பிரச்னையிலிருந்து வெளியே வர என்ன செய்யலாம்?

அனைத்து மாநிலங்களும் பொது மருத்துவம் சார்ந்த திட்டங்களுக்கு அதிக நிதியை ஒதுக்கவேண்டும். கேரளம் இந்த பிரச்னையை எளிதாக சமாளித்ததற்கு காரணம், 1957ஆம் ஆண்டு இங்கே வலிமையாக அமைக்கப்பட்ட பொது மருத்துவமனைகள், மற்றும் அதற்கான வசதிகள்தான். அதனால்தான் நோய்த்தொற்று ஏற்பட்டபோது வேகமாக நடவடிக்கைகளை எடுத்து சமாளித்தோம். மேலும் மாவட்ட மருத்துவமனைகளில் கூட 350 படுக்கைகளுக்கு மேல் படுக்கை வசதிகளை முன்னமே தயாரித்து வைத்திருந்தோம்.

நோய்த்தொற்று ஜூலை ஆகஸ்டில் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அதற்கு தயாரிப்பான முன்னேற்பாடுகளோடு இருக்கிறீர்களா?

மக்கள் இப்போது நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ள இடங்களிலிருந்து வெளியே வந்துகொண்டிருக்கிறார்கள். அதனால் நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது, நாங்கள் அடுத்து அதிகரிக்கும் எண்ணிக்கையை 25 ஆயிரம் என்று கணித்துள்ளோம். மகாராஷ்டிரம் போல அதிக எண்ணிக்கையில் நோயாளிகள் அதிகரித்தால் கஷ்டம். அப்படி அதிகரிக்காமல் இருக்க நாங்கள் முயன்று வருகிறோம்.

கேரளம் சிறிய மாநிலம் என்பதால் எளிதாக நோய்த்தொற்றை கட்டுப்படுத்திவிட முடிந்ததா?

860 சதுர கி.மீ தொலைவில் 34 மில்லியன் மக்கள்(ஒரு மில்லியன் – பத்து லட்சம்) வசிக்கின்றனர். இதனை எப்படி சிறிய இடம் எளிதாக கட்டுப்படுத்திவிட்டோம் என்று கூறுகிறீர்கள்? மக்களின் குறைவான இறப்பிற்கு காரணம், கேரளத்தின் நிலப்பரப்பு அளவு காரணம் என்று கூற எந்த அறிவியல் ஆதாரங்களும் கிடையாது.  கேரளத்தில் முதல் நோயாளி ஜனவரி 30 அன்று கண்டறியப்பட்டார். அமெரிக்காவில் நியூயார்க்கில் மார்ச் மாதம் முதல் நோயாளி கண்டறியப்பட்டார். அங்கு இன்று 20 ஆயிரம் பேருக்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெருந்தொற்று பிரச்னையோடு பருவகால நோய்களையும் இனிவரும் காலத்தில் சமாளிக்க வேண்டியிருக்குமே?

டெங்கு, மலேரியா, காய்ச்சல் தொடர்பான நோய்களை எதிர்கொள்ள தயாராகவே இருக்கிறோம். அதற்கான நடவடிக்கைளை முடுக்கி விட்டுள்ளோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக தொற்றுநோய்களால் ஏற்படும் மரணங்களை பெருமளவு குறைத்துவிட்டோம்.

நன்றி: அவுட்லுக், ப்ரீத்தா நாயர்

 

 


கருத்துகள்