தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களை பெருந்தொற்று காலத்தில் தந்திரமாக அமல்படுத்துகிறது அரசு!




chennai high court notice to state central government on migrant ...
இந்தியன்எக்ஸ்பிரஸ் தமிழ்



இந்தியாவின் முக்கியமான வணிக அமைப்பு, அகில இந்திய வணிகர் சங்கம்(AITUC). இதன் பொதுச்செயலாளரான அமர்ஜீத் கௌர் அவர்களுடன் வேலைவாய்ப்புகள், தொழிலாளர்கள், நிறுவனங்களின் நிலை ஆகியவற்றைப் பற்றி உரையாடினோம்.

பெருந்தொற்று காலத்தில் வேலைவாய்ப்புகள், உயிர்பிழைத்திருத்தல் என பல்வேறு விஷயங்களே கடினமாக இருக்கிறதே? இதில் எப்படி வேலைகளுக்கான பாதுகாப்பை நாம் கோருவது?

கடினம்தான். நாம் இந்த நேரத்தில் பாதிப்புக்கு காரணமாக அரசியல், மதம், இனம் ஆகியவற்றை பிடித்துக்கொண்டிருக்க கூடாது. சமூகத்தின் இழைகளை பலப்படுத்துவதுதான் இப்போதைய தேவை. தொழிலாளர்கள் 150 ஆண்டுகளாக போராடித்தான் தொழிலாளர்கள் சட்டம், ஓய்வூதிய நிறுவனங்கள் ஆகியவை உருவாக்கப்பட்டன.

தற்போதைய காலகட்டத்தில் தொழிற்சங்கங்கள், வணிக சங்கங்கள் தங்களை புதுப்பித்துக்கொள்ளவேண்டும் என்று நினைக்கிறீர்களா?

இன்று பல்வேறு துறைகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட வணிக சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை ஒருங்கிணைவது முக்கியம். இம்முறையில் ஒரு துறைக்கு ஒரே ஒரு சங்கம் இருக்கவேண்டும். அப்போதுதான் அரசு தொழிலாளர்களுக்கு எதிராக செயல்படும்போது, கேள்விகளை எழுப்ப வேண்டும். மேலும் இங்கு கேள்விகளைக் கேட்காமல் அமைதியாக இருந்தால் அனைவருக்கும் நல்ல விஷயங்கள் என்பதே குறைந்துவிடும். அரசு தவறான செயல்பாடுகளை செய்யும்போது அதனை தடுத்து நிறுத்தும்படியான கேள்விகளை தொழிலாளர்கள் கேட்கவேண்டும். அதுதான் நாட்டிற்கு நலம் தரும்.

பொதுமுடக்கம் முடிந்தபிறகு உங்கள் செயல்பாடுகள் என்னவாக இருக்கும்?

தொழிலாளர்களின் பணி இழப்பு, ஒப்பந்தப்பணி பிரச்னைகள், சம்பளமற்ற விடுமுறை அளிப்பது என நிறைய பிரச்னைகள் உள்ளன. மத்திய அரசு பெருந்தொற்று காலத்தைப் பயன்படுத்தி பல்வேறு தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களை இயற்றியுள்ளது. ஒரு நாடு ஒரு சட்டம் என்பது போல அனைத்து மாநிலங்களிலும் தொழிலாளர்களின் பணிநேரத்தை பன்னிரெண்டு நேரமாக மாற்றியது அநீதியானது. ராஜஸ்தான் தனது பணியாளர் சட்டத்தை அறிவித்து பின்னர் பின்வாங்கியுள்ளது. பொருளாதார நடவடிக்கையை முடுக்க இதுபோன்ற சட்டங்கள் அவசியமில்லை. தொழிலாளர்களை எப்போது வேண்டுமானாலும் நியமிக்கலாம், நீக்கலாம், தொழிலாளர்களின் சம்பளத்தை வெட்டிவிட்டு அதிக லாபம் என்ற அணுகுமுறையை  இந்த சட்டங்கள் எளிதாக்குகின்றன.

உடனே முன்னுரிமை கொடுத்து செயல்படவேண்டிய செயல்பாடுகள் என்ன?

தொழிலாளர்கள் சட்டத்தின் சீர்திருத்தத்தை தடுத்து நிறுத்தவேண்டும். அடுத்து, பசியில் நிர்கதியாக நிற்கும் தொழிலாளர்கள் இருக்கும் இடத்திலேயே ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு உதவியாக அனைத்து இடங்களிலும் பயன்படுத்தும்படியான குடும்ப அட்டையை அளிக்கவேண்டும். இதனால் புலம்பெயர் தொழிலாளர்கள் பயன் பெறுவார்கள். 

டைம்ஸ் ஆப் இந்தியா

தாரு பாஹ்ல்


கருத்துகள்