என்னுடைய தனிப்பட்ட அரசியலை படத்தில் புகுத்துவது நியாயமல்ல! -இயக்குநர் அனுராக் காஷ்யப்








அனுராக் காஷ்யப் மோடிக்கு ...
மாலைமலர் 









பணமதிப்பு நீக்கம் பற்றிய படத்தை எடுக்க ஏன் இவ்வளவு தாமதம்?

2015ஆம் ஆண்டு எஃப்ஐசிசிஐ ஸ்கிரிப்ட் பஜாரில் இந்த இந்தக்கதை கிடைத்தது. திருமணமான தம்பதிகள் இருவரின் கதை இது. இதில் ஏதோ ஒன்று இல்லாதது போல தோன்றியது. அதற்காக பணமதிப்பு நீக்க நடவடிக்கையை இணைத்தோம். கதாபாத்திரம், கதை என எதிலும் நான் என்னுடைய அரசியல் பார்வை கருத்துகளை திணிக்க முற்படவில்லை.

ஏன் அப்படி கூறுகிறீர்கள்?

திரைப்பட இயக்குநர் என்பவர் காலத்தை பதிவு செய்பவர்தான். நான் இந்த படத்தின் கதாபாத்திரங்கள் எதிலும் அரசியலைக் கலக்கவில்லை. படத்தின் திரைக்கதை எழுத்தாளர் நிகித் பவேயிடம் இதுபற்றி முன்னமே கூறிவிட்டேன். படத்தின் முக்கிய கதாபாத்திரமான சரிதாவுக்கு மோடியையும் அரசியலையும் தெரியாது. அவளுக்கு வங்கியில் வெகுநேரம் காத்திருந்து பணம் மாற்றுவது விரக்தியைத் தருகிறது.

மன்மரிஸியான், முக்காபாஷ் ஆகிய படங்களைத் தொடர்ந்து சோக்டு என்ற படத்தை உருவாக்கியிருக்கிறீர்கள். இதிலும் திரைக்கதை எழுத்தாளர்களை பயன்படுத்தியிருக்கிறீர்கள். மூன்றுபடங்களிலும் இப்படி அமைந்தது தற்செயலானதா?

நான் முதலில் மாய வலையில் இருந்தேன். அதாவது இந்த அளவு வெளிப்படையாக இல்லை. அனுராக் காஷ்யப் படங்கள் என்றாலே இருண்மையான சாகச படங்கள், ரவுடிகளைப் பற்றிய படங்கள் என்று கூறிக்கொண்டு இருந்தார்கள். இப்போது என்னுடன் பணிபுரியும் திரைக்கதை எழுத்தாளர்கள் படத்தின் படப்பிடிப்பு, படத்தொகுப்பு என பல்வேறு பணிகளிலும் என் கூடவே இருக்கிறார்கள். இது படத்தை, காட்சிகளை மேலும் கூர்மையாக்க உதவுகிறது. நானும் திரைக்கதை எழுதுபவன் என்பதால் அவர்களை எளிதாகப் புரிந்துகொள்ள முடிகிறது.

இணையத்தில் வெளியிடப்படும் படங்கள் தொடர்பாக பன்னடுக்கு திரையங்க உரிமையாளர்கள் கண்டனங்கள் தெரிவிக்கிறார்களே?

பெருந்தொற்று பரவிவரும் மோசமான காலகட்டம் இது. நாம் காலத்தோடு பயணித்தாகவேண்டும். இந்த நேரத்தில் திரையரங்குகளில் படத்தை வெளியிடுவதை விட இணையத்தில் வெளியிட்டால் நிறைய பார்வையாளர்களை சென்று அடைய முடியும். நெட்பிளிக்ஸ் அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. நாங்கள் அந்த வாய்ப்பை சரியானதாக நினைக்கிறோம். பயன்படுத்தி வருகிறோம்.

இந்தியா டுடே

சுஹானி சிங்

 

 


கருத்துகள்