தன்னம்பிக்கையுடன் வாழ காரணங்கள் உள்ளன! - சுந்தர்பிச்சை, கூகுள் நிறுவன இயக்குநர்
crn |
அண்மையில்
யூட்யூப் 2020ஆம் ஆண்டில் பட்டம் பெற்ற மாணவர்களுக்கான பிரிவு உபசார விழாவை நடத்தியது.
இந்த விழா காணொளி மூலம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, அவரது
மனைவி மிச்செல் ஒபாமா, அமெரிக்கச் செயலாளர் காண்டலிசா ரைஸ், முன்னாள் பாதுகாப்புச்செயலர்
ராபர்ட் எம் கேட்ஸ், கொரியன் பாப் குழு பிடிஎஸ் ஆகியோர் பங்கேற்றனர். இதில் பேசிய கூகுள்
இயக்குநர் சுந்தர் பிச்சை, “நாம் கடினமான சூழலை எதிர்கொண்டுள்ளோம். நீங்கள் பட்டம்
பெறும் சூழ்நிலை இப்படி அமைந்திருக்கும் என நினைத்துப் பார்த்திருக்க மாட்டீர்கள்.
இத்தகைய சவாலான சூழல்கள் நம் மனதின் நம்பிக்கையை குலைக்கின்றன. ஆனாலும் நீங்கள் பெற்ற
அறிவுடன் முன்னோக்கி நடக்கவேண்டும். பணி சார்ந்த அனுபவங்களை பெற வேண்டும்.
அமைதியின்றி
திறந்த மனதோடும், நம்பிக்கையோடும் இருங்கள். இத்தன்மையோடு செயல்பட்டால் உங்கள் வரலாறு
என்றுமே மறக்காது. ” என்று பேசினார். அதோடு வரலாற்றில் 1920இல் பெருந்தொற்று பாதிப்பு,
1970 வியட்நாம் போர், 2001இல் அமெரிக்கா மீதான தாக்குதல் என நடைபெற்றுள்ளது. அப்போதும்
மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். ”வரலாறு முழுக்க இதுபோன்ற சவாலான தருணங்கள் உள்ளன. ஆனாலும்
கூட இவற்றையெல்லாம் நாம் கடந்து வந்து நம்பிக்கையோடு இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
நீங்கள் திறந்த மனதோடு செயல்பட்டு உலகில் உங்களுக்கு பிடித்தமான விஷயத்தை செய்தால்
வெற்றி பெறமுடியும். நீங்கள் செய்யும் செயல், உங்கள் நண்பர், பெற்றோர், சமூகம் கூறியதாக
இருக்க கூடாது. உங்கள் மனம் உங்களுக்கு கூறியதாக இருக்கவேண்டும். உலகிலேயே உங்களுக்கு
பிடித்த ஒன்றாக அந்த செயல்பாடு மாறும்போது மாற்றங்கள் நடைபெறும். நான் அமெரிக்காவின்
ஸ்டான்போர்டுக்கு படிக்க வரும்போது, விமானத்திற்கு கட்டிய கட்டணம் எனது தந்தையின் ஓராண்டு
ஊதியம் என்பதை நான் மறக்கவில்லை. வரலாற்றில் நாம் நம்பிக்கை கொள்ள நிறைய காரணங்கள்
உள்ளன. நம்பிக்கையோடு இருப்போம்” என்று பேசினார் கூகுள் இயக்குநரான சுந்தர்பிச்சை.
கருத்துகள்
கருத்துரையிடுக