வைரத்திற்கு அடுத்தபடியாக உள்ள கடினமான பொருள்!
அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி மோகா அளவுகோல் எதற்கு பயன்படுகிறது? கனிமங்களை அவற்றின் கடினத்தன்மை அடிப்படையில் வகைப்படுத்த மோகா அளவுகோல் உதவுகிறது. 1812ஆம் ஆண்டு, ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கனிமவியலாளர் பிரடரிச் மோஹ்ஸ் மோகா அளவுகோலை கண்டுபிடித்தார். மென்மையான கனிமங்கள் தொடங்கி கடினமானவை வரை வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. கனிமங்களை நிறங்கள் அடிப்படையில் தரவரிசைப்படுத்தியது யார்? இதைச்செய்ததும் கூட ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர்தான். ஆபிரகாம் காட்லோப் வெர்னர் என்பவர், நிறங்கள் அடிப்படையில் கனிமங்களை தரம் பிரித்து அவற்றை படங்களாக வரைந்து விளக்கியவர் இவரே. வைரத்திற்கு அடுத்து கடினமான பொருள் என எதைக் கூறலாம்? போரோன் நைட்ரைட் என்ற பொருளைக் கூறலாம். இது கடினமான செராமிக். வைரத்திற்கு அடுத்த நிலையில் இப்பொருள் இடம்பிடிக்கிறது. ஸ்ட்ராடெஜிக் மினரல்ஸ் என்றால் என்ன? ஒரு நாட்டின் பாதுகாப்பு தொழில்துறைக்கு அவசியம் தேவைப்படும் கனிமங்களை ஸ்ட்ராடெஜிக் மினரல்ஸ் என்று குறிப்பிடுவார்கள். தோராயமாக எண்பது கனிமங்களை ஒரு நாடு எப்போதுமே குறைவற வாங்கி சேமித்து வைத்திருக்கும். உதாரணமாக குரோமியம், பல்லாடிய...