14. வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் திட்டமிட்ட மோசடி - மோசடி மன்னன் அதானி

 
















அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் கணக்கு தணிக்கைகளை டெலோய்ட் அல்லது எர்னஸ்ட் அண்ட் யங் ஆகிய கணக்கு தணிக்கை நிறுவனங்கள் பார்த்து ஒப்புதல் அளித்துள்ளன.

Adani Power limited

SRBC & Co LLP

Adani Ports & SEZ Limited

Deloitte Haskins & Sells LLP

Adani Transmission Limited

Deloitte Haskins & Sells LLP

Adani Green energy limited

Joint Auditors SRBC & Co LLP and Dharmesh parikh & Co LLP

 

இந்த நிறுவனங்கள் ஒப்புதல் அளித்த கணக்கு தணிக்கை விவகாரங்களிலும் நிறைய சிக்கல்கள் உள்ளன. 2022ஆம் ஆண்டு அதானி பவர் நிறுவனத்தின் கணக்கு இதற்கு உதாரணம். எஸ்ஆர்பிசி என்ற நிறுவனம் கணக்கு தணிக்கை செய்து ஒப்புதல் அளித்துள்ளது. ‘தகுதி பெற்றிருக்கிற நிறுவனம்’ என்று கூற முடிந்ததே தவிர நேரடியான அல்லது தகுதி இல்லை என்ற கருத்தை அளிக்க முடியவில்லை. (ப.206)

‘’பொருட்கள் சார்ந்த பலவீனம் நிறுவனத்தின் உள்ளே நிதி சார்ந்த ஆவணங்களில் காணப்படுகிறது. நிறுவனத்தின் நிதிநிலையைக் கூறுவதிலும் பலவீனம் நிலவுகிறது’’ என கணக்குத் தணிக்கையாளர் கூறியிருக்கிறார். குஜராத்தின் முந்த்ராவில் உள்ள மின்சார உற்பத்தி நிலையத்தில் உள்ள சில சொத்துகள் மதிப்பு பற்றித்தான் குறிப்பிட்டார்.

‘’முந்த்ரா மின் உற்பத்தி நிலையத்தின் ஒட்டுமொத்த நிகரமதிப்பு குறைந்துபோனதற்கு காரணம் அதில் ஏற்பட்ட தொடர்ச்சியான நஷ்டம்’’ என கணக்கு தணிக்கையாளர் குறிப்பிட்டுள்ளார். நிதி சார்ந்த மோசமான நிலை காரணமாக நிறுவனத்தின் சொத்து மதிப்பை 700 மில்லியன் டாலர்களாக அதானி குழுமம் காட்டியது. (ப.131)

அதானி பவர் நிறுவனம் கடன் பிரச்னைகளால் தொடர்ச்சியாக நஷ்டத்தை சந்தித்து வந்த நிறுவனம். ஆனால் அதன் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 23 சதவீதமாக காட்டப்படுகிறது. அதானி பவர் லாபத்தில் இயங்குகிறது என காட்டுவதற்கு அதன் ஊதிப் பெருக்கப்பட்ட பங்கு மதிப்பு உயர்வைக் கைகாட்டினர். ஆனாலும், உண்மையில் நிறுவனம் நஷ்டத்தில்தான் போராடிக் க்கொண்டிருந்தது. கணக்குத் தணிக்கையாளர் இதை நேரடியாக சுட்டிக்காட்டவில்லை.

‘நல்நோக்கம் கொண்ட வளர்ச்சி’ என்பதுதான் அதானி குழுமத்தின் சுலோகன். ஆனால் இப்படி சுலோகனை வைத்துக்கொண்டாலும் அரசிடமிருந்து ஊழல், மக்களின் வரிப்பணத்தை திருடியது, பட்டியலிட்ட நிறுவனங்களிலிருந்து நிதியை மடை மாற்றியது என பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வந்தது. மத்திய புலனாய்வு அமைப்பு, வருவாய்த்துறை புலனாய்வு ஆணையகம், மாநில அரசின் விசாரணை அமைப்புகள் என பல்வேறு அமைப்புகள், அதானி குழுமத்தை விசாரணை வளையத்தில் வைத்திருந்தன.

பல்வேறு வழக்கு விசாரணைகளில் அதானி குழமம் வெளிநாட்டு நிதியை பெற்று வந்தது, அரசு பணியாளர்களுக்கு லஞ்சம் கொடுத்தது, கணக்குகளை மாற்றி எழுதி முறைகேட்டில் ஈடுபட்டது, மோசடி ஆகிய குற்றங்கள் நிரூபணமாகி இதுபற்றிய தகவல்கள் வெளியே வந்துள்ளன.

அரசு விசாரணையின்படி, 17 பில்லியன் டாலர்களை அதானி குழுமம் முறைகேடு செய்துள்ளது தெரியவந்துள்ளது.

அதானி குழுமம் செய்யும் நிதி முறைகேடுகளுக்கென தனி செயல்முறை உண்டு. அதானி குழுமத்தில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் உள்ள நிதி, அதானியின் கட்டுமான நிறுவனங்களுக்கு மாற்றப்படும். இதன் வழியாக, அதீத விலைப்பட்டியல், சட்டவிரோதமாக பொருட்களை எடுத்துச்செல்வது, பொருட்கள் விற்பனை, சேவையை தவறுதலாக அடையாளப்படுத்துவது ஆகிய விதிமீறல் செயல்களை அதானி குழுமம் செய்கிறது.

ஒருமுறை நிதி பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டுவிட்டால், அந்த நிதி அப்படியே வெளிநாடுகளிலுள்ள நிறுவனங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிறுவனங்களை வினோத் அதானி நிர்வாகம் செய்கிறார். இவர் கௌதம் அதானியின் சகோதரர்.

அதானி குழுமத்தின் முறைகேடுகள் தொடர்பான விசாரணையில் வங்கி அறிக்கைகள், மின்னஞ்சல், சாட்சிகள், விலைப்பட்டியல் ஆகியவை இடம்பெற்றிருந்தன. ஆனால் முறைகேடு பற்றிய விசாரணை, அரசின் பிற அமைப்புகளால் தடுக்கப்பட்டன அல்லது தாமதிக்கப்பட்டன.

விசாரணைக் காலம் 2004-2006    

அதானி எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம், வைரங்களை அதானி குழுமத்தில் உள்ள நிறுவனங்களுக்கு இடையில் அதிக மதிப்பைக் கூறி விற்று மோசடி செய்து ஏற்றுமதி மதிப்பை அதிகரித்து காட்டியது. இதுதொடர்பாக வருவாய்த்துறை புலனாய்வு ஆணையகம், சுங்கவரி அமைப்பு ஆகியவை அதானி எக்ஸ்போர்ட்ஸ் மீது வழக்குத் தொடர்ந்தன.

2017ஆம் ஆண்டு குற்றங்களைப் பற்றிய ஆவணங்கள் வெளியிடப்பட்டன. ‘’அதானி எக்ஸ்போர்ட்ஸ் லிட். அகமதாபாத், தற்போது அதானி என்டர்பிரைசஸ் லிட். இந்த நிறுவனம் மோசடி செய்து தனது பங்கு மதிப்பை அதிகரித்து காட்டியது. மேலும் தனது வைரங்களை அதிக மதிப்பிற்கு ஏற்றுமதி செய்ததாக போலியாக காட்டி டார்கெட் பிளஸ் எனும் அரசு திட்ட சலுகைகளைப் பெற்றது.’’ (ப..2)

ஏற்றுமதி கடன் தொடர்பான டார்கெட் பிளஸ் எனும் அரசின் திட்டத்தை அதானி குழுமம் தவறாகப் பயன்படுத்தியது. குறிப்பிட்ட அளவு ஏற்றுமதி செய்த தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமேயான சிறப்பு வரிச்சலுகைகளை டார்க்கெட் பிளஸ் எனும் திட்டத்தில் அரசு வழங்கியது.

 2004-2005 காலகட்டத்தில் வெளியான இந்த குற்றச்சாட்டு மூலம், அதானி குழுமம் அரசிட் திட்டத்தை தவறாகப் பயன்படுத்தி செய்த மோசடி மதிப்பு 151 மில்லியன் டாலர்களாகும்.

‘’வைரங்களை வெட்டி பாலீஷ் செய்து அதை விற்றது முன்னதே திட்டமிட்டு செய்த மோசடியாகும். இந்த வகையில் அரசை ஏமாற்றி ஏற்றுமதிக்கான பலன்களை அதானிகுழுமம் பெற்றுள்ளது. ‘’ ப.28

 

2004-2005, 2005-2006 ஆண்டுகளில் அரசின் விசாரணை நடைபெற்றது.

‘’அதானி எக்ஸ்போர்ட்ஸ் லிட். அதன் ஐந்து குழும நிறுவனங்கள் இணைந்து மூன்றுமுறை செய்த மோசடியில் மொத்தமாக ஈடுபட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை 34.’’ ப.72





அதானி குழுமத்தின் நிறுவன கட்டமைப்பு, பல்வேறு அடுக்குகளாக நிறுவனங்களை உருவாக்கியது, வெளிநாட்டு நிறுவனங்களின் உருவாக்கம் என அனைத்துமே புரிந்துகொள்ள சற்று சிக்கலானது. அதானி குழும நிறுவனங்களின் வங்கி பரிவர்த்தனைகள், மின்னஞ்சல்கள், நிறுவனங்களைப் பற்றிய சாட்சிகள், ஊழியர்களின் வங்கி புத்தகங்கள் என அனைத்துமே அவர்களின் நிறுவனங்களுக்குள் செய்த பல்வேறு பரிவர்த்தனைகளைக் கொண்டவை. அதை புலனாய்வு அமைப்பின் விசாரணை ஆவணங்கள் உறுதி செய்தன. (ப.26, 49)

அரசின் சுங்கவரி அமைப்பு மூலமாக நடைபெற்ற விசாரணையில், அதானி நிறுவன ஊழியரின் கணினியில் ஒரு வரைபடம் ஒன்று சிக்கியது. இதில், வெளிநாட்டிலுள்ள நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக எப்படி வடிவமைக்கப்பட்டுள்ளன என்பது விளக்கப்பட்டிருந்தது.

‘’அதானி என்டர்பிரைசஸ் லிட். குழும நிறுவனங்களில் எந்த இடத்திலும் நேர்மையான வெளிப்படையான அணுகுமுறை, செயல்பாடு காணப்படவில்லை. ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய நாடுகளிலுள்ள நிறுவனங்களுக்கு இந்தியாவிலிருந்து பணம் சென்று பல்வேறு நிறுவனங்களுக்கு பரிவர்த்தனையாகி பிறகு அதானி என்டர்பிரைசஸ் மற்றும் அதன் குழும நிறுவனங்களுக்கு வருகிறது’’ (ப.77, 36-39)

துபாயில் உள்ள ஜி.ஏ. இண்டர்நேஷனல் என்ற நிறுவனத்தை வினோத் அதானி நிர்வகித்து வந்தார். இந்த நிறுவனம் வைர வணிகத்தில் ஈடுபட்டு, பெரும் வணிகத்தை பெற்று வந்தது. இதுபற்றிய ஆவணங்களும் விசாரணையில் கிடைத்தன. ப.20, 63, 71-72, 92-93

கௌதம் அதானியின் பிற குடும்ப  உறுப்பினர்களான ராஜேஷ் அதானி, மைத்துனர் சமீர் வோரா ஆகியோரும் வைர வணிகத்தில் மோசடிகளை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டனர். வருவாய்த்துறை புலனாய்வு ஆணையகத்தின் ஆவணத்தில்,

‘’ அனைத்து வித கொள்கை முடிவுகளும், தங்கம், வைரம் ஏற்றுமதி, இறக்குமதி பரிவர்த்தனைகளும் ஏஇஎல் மற்றும் பிற நிறுவனங்களின் வணிகங்கள் சமீர் வோரா, நிர்வாகத் தலைவர் ராஜேஷ் அதானி, ஆகியோரால் எடுக்கப்பட்டது என தெரிய வருகிறது ’’ (ப.6) என கூறப்பட்டிருந்தது.

சில நிறுவனங்களை வைத்துக்கொண்டு குழும நிறுவனங்களுக்கு இடையில் வட்ட வடிவில் பரிவர்த்தனைகளை செய்து, அரசின் ஏற்றுமதி சலுகைகளை தவறாக பயன்படுத்திய அதானி குழுமம். இதுபற்றி சாட்சி ஒருவர் கூறும்போது,

‘’ஏற்றுமதி இறக்குமதி நிறுவனங்களை, சமீர் வோராதான் அனைத்து நிறுவனங்களுக்கும் மேலாக இருந்து கவனமாக நடத்தி வந்தார் ‘’ என்றார். (ப. 7)

சமீர் வோரா, அரசு அமைப்புகளை பல்வேறு தவறான தகவல்களைக் கொடுத்து ஏமாற்றியதாக குற்றம்சாட்டப்பட்டார். குற்ற வழக்குகளில் சிக்கிய ராஜேஷ் அதானி, சமீர் வோரா என இருவருக்குமே அதானி குழுமத்தில் முக்கியமான உயர்பதவிகள் வழங்கப்பட்டது.

அதானி குழுமம் தொடர்பான விசாரணை ஐந்தரை ஆண்டுகளுக்கும் மேலாக இழுத்தது. 239 பக்க சுங்க வரி கமிஷனரின் ஆவணத்தில், குழுமம் பற்றிய பல்வேறு குற்றச்சாட்டுகளை அடையாளம் காட்டியிருந்தனர். ப.1

2013ஆம் ஆண்டு, அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு, இந்திய அரசின் சுங்க வரி கமிஷனர் 4.6 மில்லியன் டாலர்களை அபராதமாக விதித்தார். வைரங்களை விற்ற ஐந்து பிற நிறுவனங்களுக்கு தலா 3,70,000 டாலர்கள் அபராதமாக விதிக்கப்பட்டது. ராஜேஷ் அதானிக்கு 1,85,00 டாலர்கள் அபராதமும், சமீர் வோராவின் பங்கிற்கு 1,38,000 டாலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டது. ப.220.221,222

ஆனால், 2015ஆம் ஆண்டு சுங்கவரி தீர்ப்பாணையம், இந்த விவகாரத்தில் தலையிட்டு வரி ஏய்ப்பு வழக்கில் சாட்சிகளை ஆதாரங்களை விலக்கி வழக்கை தள்ளுபடி செய்தது. ‘’நடப்பு வழக்கில் வருவாய்த்துறை அதிக மதிப்பு, வட்டவடிவிலான வணிகம் நடைபெற்றதை முறையாக நிரூபிப்பதில் தோற்றுவிட்டது’’ என கூறியது. ப. 18,21

தீர்ப்பாணையம், அதானி குழுமத்தில் நடைபெற்ற அனைத்து பரிவர்த்தனைகளும் நேர்மையாக நடைபெற்றன என்று கூறியது. மோசடி செய்யும் நோக்கத்தில் வணிகம் நடைபெறவில்லை என்று சொல்லி பல்லாண்டுகளாக நடந்த விசாரணையை ஒழித்துக்கட்டியது. இதேபோலத்தான் பிற அரசு அமைப்புகளின் விசாரணைகளும் முடக்கப்பட்டன.

 நன்றி 

திரு.இரா.முருகானந்தம்

 டெனர்.காம்

பிளடிவுட், கோபோ இசைக்கலைஞர்கள்


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்