போதைமருந்து கும்பலின் வணிகம் சிறக்க நரபலி கொடுத்த மத தலைவர்!
கான்ஸ்டான்ஸோ – அடாஃபோ டி ஜீசஸ்
1962ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1ஆம் தேதி பிறந்தவர்,
அடால்ஃபோ. மியாமியில் வாழ்ந்தவர்கள், க்யூப நாட்டை பூர்விகமாக கொண்டவர்கள். அடால்ஃபோ
குழந்தையாக இருக்கும்போது அவரின் அம்மா, புவர்டோ ரிகா சென்று இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.அடால்ஃபோவுக்கு
மொத்தம் மூன்று சகோதரர்கள். இவர்கள் அனைவருமே வெவ்வேறு தந்தைகளுக்குப் பிறந்தவர்கள்.
கத்தோலிக்கராக
மாறி வழிபடத் தொடங்கியது அவரின் குடும்பம். இரண்டாவது தந்தை இறந்தபோது, குடும்பம் பொருளாதார
ரீதியாக சற்று நல்ல நிலையில் இருந்த து. மியாமிக்கு வந்த அடால்ஃபோவின் அம்மா, ஆடு,
கோழி ஆகிவற்றின் தலைகளை அறுத்து வைத்து தாந்த்ரீக சடங்குகளை செய்யத் தொடங்கினார். இதனால்
ஊரார் அவரை சூனியக்காரி என கூறத் தொடங்கினார். அடால்ஃபோவின் அம்மா, அவருக்கு புதிய
மதமான சான்டெரியாவை அறிமுகம் செய்தார். அந்த மதத்தை தழுவியவர், மெல்ல காட் ஃபாதராக
மாறினார். அவர், போதைமருந்து குழுக்களோடு தொடர்பு வைத்து வசதியாக வாழ்ந்தார். ‘’நம்
ம தத்தை நம்பாத ஆட்களை போதைப்பொருளை வைத்து கொல்லலாம். அவர்கள் முட்டாள்தனத்தை வைத்து
பணம் சம்பாதிக்கலாம்’’ என்றார்.
அடால்ஃபோவுக்கு எதிர்காலத்தை கணிக்கும் சக்தி உண்டு
என அவரது அம்மா நம்பினார். 1981ஆம் ஆண்டு, அமெரிக்க அதிபர் ரீகன் சுட்டுக்கொல்லப்பட்டதை
அடால்ஃபோ முன்னரே அறிந்து கூறினார் என்றார்.
ஆனால் அடால்ஃபோ, ரம்பத்தை திருடினார். வேறு ஒரு பொருட்களையும் திருடியதாக குற்றம்
சாட்டப்பட்டார். ஆண்களுடன் உறவு கொள்ளும் விருப்பத்தைக் கொண்டிருந்தார்.அடால்ஃபோவும்
அவரது அம்மாவும் பொருட்களை திருடுவது, பிறரின் சொத்துகளை சேதப்படுத்துவது ஆகியவற்றுக்காக
கைதான வரலாறு கொண்டவர்கள்.
பிறகு மெக்சிகோ
நாட்டிற்கு சென்றவர், அங்கு தன்னால் எதிர்காலத்தைப் பற்றி கணித்து கூறமுடியும். எதிரிகளால்
நெருக்கடியை சந்திக்கும் ஆட்களை முறியடிக்க முடியும் என்று மலையாள மாந்த்ரீகர்கள் போல
விளம்பரம் கொடுத்தார். பூஜைகளின் நோக்கமே காசு சம்பாதிப்பதுதான். கோழி, ஆடு, வரிக்குதிரை,
சிங்கத்தின் குட்டிகள் ஆகியவற்றை வெட்டி பூஜை
செய்வதற்கு விலைபட்டியல் ஒன்றை உருவாக்கினார்.
கணிப்பு என்பதை அடால்ஃபோ, போதைப்பொருட்கள் விற்கும்
ஆட்களிடம் சொல்லி குறிப்பிட்ட நாட்களில் மட்டும் கடத்தலை செய்தனர். போதைக்குழுக்கள்,
அடியாட்கள் ஆகியோர் கூட காவல்துறையில் மாட்டவில்லை. இப்படி அடால்ஃபோ ஒரு ஆண்டில் கணிப்புகளுக்காக
மட்டும் 40 ஆயிரம் டாலர்களை கட்டணமாக வாங்கியிருந்தார்.
மெக்சிகோவின் முக்கியமான குழுக்களை கைக்குள் கொண்டு
வர அடால்ஃபோ அவரது மூன்று சீடர்கள் மூலம் பிணங்களை எடுத்து வந்து மாந்த்ரீகம் செய்தார்.
இவரது புகழ் பரவியது. இதனால் மெக்சிகோவின் முக்கியமான போதைப்பொருள் குழுவான கால்ஸாடா
குடும்பத்தின் ஆதரவு, அடால்ஃபோவுக்கு கிடைத்தது. அதை வைத்து மெக்சிகோவின் காவல்துறை,
போதைப்பொருட்கள் தடுப்புக் குழுவிலுள்ள ஆட்களை
பக்தி என்ற பெயரில் வளைத்தார். 1987ஆம் ஆண்டு நகருக்கு 60 ஆயிரம் டாலர்கள் கொடுத்ததோடு. பென்ஸ் காரையும் வாங்கி தன்னை பெரிய ஆளாக வெளிக்காட்டினார்.
ரத்தம் சிந்தாமல் பூஜை செய்தால் என்ன கிடைக்கும்?
தனது நெருங்கிய, தொழில் கூட்டாளிகள் என தேடிப்படித்து மொத்தம் 23 பேர்களை சித்திரவதை
செய்து கொன்றார். இவர்களது உடல்களை வைத்து மாந்த்ரீக பூஜைகளை செய்தார் கால்ஸாடா குடும்பத்துடன்
சேர்ந்து முதன்மையான பங்காளியாக நினைத்தார். ஆனால, அந்த குடும்பம் அடால்ஃபோவை, தொழிலில் உங்களை சேர்க்க முடியாது என கூறிவிட்டது.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, அந்த குடும்பத்தைச்
சேர்ந்த ஏழு பேர்கள் மர்மமாக இறந்தனர். இந்த
உடல்களை காவல்துறை ஜூம்பாங்கோ ஆற்றின் கரையில் கண்டுபிடித்தது. உடல்களில் உறுப்புகள்
நிறைய காணாமல் போயிருந்தன. விரல்கள், பாதம், காதுகள் வெட்டப்பட்டு இருந்தது. ஒரு உடலில்
முதுகெலும்பே இல்லை. அனைத்து உடல்களும் நெடுநேரம் சித்திரவதை செய்யப்பட்ட தடயங்கள்
இருந்தன.
198ஆம் ஆண்டு, அடால்ஃபோ, சகோதரர்கள் இருவர் சேர்ந்த
நடத்தும் போதைப்பொருள் குழுவிடம் அறிமுகம் செய்துகொண்டார். அப்போது மெக்சிகோ நாட்டை
பூர்விகமாக கொண்ட கல்லூரி மாணவி சாரா ஆல்டிரெட், அடால்ஃபோவுக்கு அறிமுகமானார். அப்போது
அவர், போதைப்பொருட்களை கடத்தி வந்த சோசாவை காதலித்து வந்தார். அடால்ஃபோ, சாராவைப் பற்றி
சோசோவுடன் பேசித் தெரிந்துகொண்டார். அதற்குப்பி றகு சாரா அடால்ஃபோவுடன் ஒன்றாக சேர்ந்தார்.
தலைவி வந்துவிட்டதால் இவர்தான் காட் மதர் என்று அழைக்கப்பட்டார். நரபலி கொடுக்க கொண்டு
வருபவர்களை சித்திரவதை செய்வதே இவருடைய வேலை.
எல்லாம் செட் ஆகிவிட்டது. அப்புறம் என்ன பூஜையை கிராண்டாக
தொடங்கிவிடலாம்தானே? இதற்காக ரான்சோ சான்டா எலினா என்ற பாலைவனப் பகுதியை அடால்ஃபோ தேர்ந்தெடுத்தார்.
1988ஆம் ஆண்டு போதைப்பொருள் வியாபாரியான ஹெக்டர், விவசாயி காஸ்டில்லோ ஆகியோரை துப்பாக்கியால்
சுட்டுக் கொன்றார். ஆனால் கூட தான் நடத்திய பூஜையில் அவருக்கு திருப்தி இல்லை. அதற்குப்
பிறகும் அடால்ஃபோ, நிறைய நரபலிகளைக் கொடுத்தார். நரபலியின்போது, கொல்லப்படுபவர்கள்
அலற வேண்டும் என அவர் நினைத்தார். அப்படி ஒருவர் கத்தாதபோது, அவருக்கு கொலையில் திருப்தி
ஏற்படவில்லை.
மெக்சிகோ நாட்டு காவல்துறை ஆண்டுதோறும்,போதைப்பொருள்
தடுப்பு பிரசாரத்தை செய்து வருகிறது. இதன் காரணமாக சாலையில் தடுப்புகளை வைத்து வாகனங்களை
சோதித்தனர். அப்போது ஒரு கார் இவர்களது சோதனையில் நிற்காமல் சென்றது. அதை காவல்துறை
பின்தொடர்ந்து அடால்ஃபோவின் நரபலி பூஜை நடக்கும் இடத்தை அடைந்தனர்.
அங்கு, சிலந்து, தேள், கருப்பு பூனை, ஆமையின் ஓடு,
எலும்புகள், மானின் கொம்புகள், மனித மூளை ஆகியவை இருந்தன. சிஷ்யர்களைப் பிடித்து விசாரித்ததில்,
அடால்ஃபோவின் ஆடம்பர வீடு பற்றிய தகவல் கிடைத்தது. வீட்டில், ஓரினச்சேர்க்கை நூல்கள்
கிடைத்தன. சடங்குகளை செய்யும் இடம் ஒன்றும் அமைக்கப்ட்டிருந்தது. பாலைவனப் பகுதியில்
செய்த சோதனையில் பதினைந்து சிதைக்கப்பட்ட உடல்கள் கிடைத்தன. இரண்டுபேர் போதைப்பொருள்
தடுப்பு பிரிவைச் சேர்ந்தவர்கள். மீதியுள்ளவர்களை அடையாளம் தெரியவில்லை.
காவல்துறையிடமிருந்து தப்ப அடால்ஃபோ, சாரா, சிஷ்யர்கள் ஆகியோர் சிறிய வீட்டில் தங்கியிருந்தனர்.
சாரா இங்கே இருந்து நைச்சியமாக தப்பி செல்ல துண்டு பேப்பரில் தன்னைப் பற்றி எழுதி வெளியே
வீசினார். ஆனால் அதை எடுத்தவர் படித்துவிட்டு சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை. காவல்துறை
வந்து துப்பாக்கிசூடு நடத்தியது. தப்ப முடியாது என அடால்ஃபோவிற்கு தெரிந்தவுடன் தனது
சிஷ்யர்களின் ஒருவரை தன்னை சுட்டுக்கொல்லச் சொன்னார். இப்படியாக நரபலி மந்திரவாதி இறந்துபோனார்.
அந்த அறையில் இருந்த மற்றவர்கள், காவல்துறையால் பிடிபட்டு அறுபது ஆண்டுகளுக்கும் மேல்
சிறைதண்டனை அனுபவித்தனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக