ஏழை மக்களின் நோய்களைத் தீர்க்க உதவும் ஃபெமா! - மோகன் முத்துசாமி, உதயகுமாரின் புதிய முயற்சி

 








சென்னை வியாசர்பாடியைச்சேர்ந்தவர் மோகன் முத்துசாமி. இவர், தனது வீட்டருகே வாழ்ந்து வந்த சிறுமி, டெங்குவால் பாதிக்கப்பட்டு இறந்துபோனதைப் பார்த்தார். அச்சிறுமியை மருத்துவம் செய்து காப்பாற்றும் அளவுக்கு அவளது தந்தையிடம் பணமில்லை. இது மோகனை யோசிக்க வைத்தது. பின்னாளில் ஃபெமா எனும் அமைப்பை தனது நண்பர் உதயகுமாருடன் சேர்ந்து தொடங்க வைத்தது.

ஃபெமா என்ற தன்னார்வ அமைப்பு, ஏழை மக்களுக்கான மருத்துவ உதவிகளை, நோய்களை கண்டறியும் ஆய்வகத்தை நடத்தி வருகிறது. இங்கு 30 ரூபாய் கொடுத்து பதிவு செய்துகொண்டால் போதும். ஆலோசனை, மருந்துகள் இலவசமாக வழங்கப்படுகிறது. நீரிழிவு, உயர் ரத்த அழுத்த சோதனைகள் செய்யப்படுகின்றன.

சென்னை, திருவண்ணாமலை, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஃபெமா செயல்படுகிறது.  ஏழை, வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள மக்களுக்கான இலவச மருத்துவ சேவைகளை முதன்மை நோக்கமாக கொண்டு செயல்படுகிறது. நோய்களைப் பற்றிய விழிப்புணர்வுக்கு தெரு நாடகங்களை நடத்துகிறார்கள். கிளினிக்கிற்கு வரும் நோயாளிகள் தவிர, படுக்கையில் படுத்துவிட்ட நீண்டகால நோயாளிகளுக்கும் மருத்துவ சிகிச்சை, மருந்துகளை வழங்குகிறார்கள். வீட்டிலேயே மருத்துவம் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லும் நோயாளிகளுக்கு பொருளாதார நெருக்கடி இருக்கலாம் என்பதை உணர்ந்திருக்கிறார் மோகன். எனவே, அப்படிப்பட்ட நோயாளிகளுக்கு வீடுகளுக்கு சென்று மருத்துவ உதவிகளை வழங்குகிறார்கள்.

ராணிப்பேட்டையில் வாழ்ந்துவரும் இருளர் இன மாணவர்களுக்கு கல்வி கற்றுத்தரும் முயற்சியை ஃபெமா தொடங்கியுள்ளது. இவர்களுக்கு மாலையில் சிற்றுண்டி கொடுத்து கல்வி கற்றுக் கொடுக்கிறார்கள். இதனால், இந்த இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளியில் இடைநிற்கும் அளவு குறைய வாய்ப்புள்ளது.

ஷியாம் சுந்தர் – ராணிப்பேட்டை

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

கருத்துகள்