இரண்டு கதை சொல்லிகளின் பழக்க வழக்கங்கள் - செகன் கருணதிலகா, ஜேனிஸ் பாரியட்

 



கவிஞர் ஜேனிஸ் பாரியட்

எழுத்தாளர் செகன் கருணதிலகா






கதை சொல்லிகளின் பழக்க வழக்கங்கள்

செகன் கருணதிலகா

புக்கர் பரிசு வென்ற எழுத்தாளர்

படிப்பது…

நான் ஒரே நேரத்தில் நிறைய நூல்களைப் படிப்பேன். செவ்வியல் இலக்கியம், கட்டுரைகள், என்னுடைய துறை சாராத நூல்கள், இப்போது அசோக் ஃபெர்ரியின் தி அன் மேரேஜபிள் மேன், ஆர்மிஸ்டிட் மௌபினின் மோர் டேல்ஸ் ஆப் தி சிட்டி ஆகியவற்றை படித்து வருகிறேன். எலிசபெத் கில்பெர்டின் கமிட்டட் – எ ஸ்கெப்டிக் மேக்ஸ் வித்  மேரேஜ், அன்னா ரோஸ்லிங் ரோன்லண்ட்டின் ஃபேக்ட்புல்னெஸ், ஹன்ஸ் ரோஸ்லிங்க், ஆலா ரோஸ்லிங்க், இரா லெவினின் ரோஸ்மேரி பேரி ஆகியோரது நூல்களை படித்து முடித்தேன்.

எழுதும்போது..

 மெழுகுவர்த்தியை ஏற்றிக்கொண்டு எழுதுவேன். என்னைச் சுற்றிலும் கத்தரிப்பூ, மெஜந்தா நிற விளக்குகள் எரியும்.  செவ்வியலான இசையைக் கேட்பேன். எழுதி முடித்தவுடன் ஒரு கிளாஸ் ஒயின் குடிப்பேன். ஒரு கிளாஸ் என்பதைத்  தாண்டினால் எழுத்து வேலைகளை செய்ய முடியாது.

எப்போதும் பிடித்த நூல்கள்

குழந்தையாக இருக்கும்போது தி குரோனிக்கல்ஸ் ஆஃப் நார்னியா. அகதா கிறிஸ்டியின்  அண்ட் தென் தேர் வேர் நன் நூல்.

படிக்கும் நூல்களின் வகை

துப்பறியும் நாவல்கள், பேய் நாவல்களை மகிழ்ச்சிக்காக படிக்கிறேன். காதல் புனைவுகளை படிப்பேன். காதல் நாவல்களை எளிதாக புரிந்துகொள்ள முடிகிறதே என நான் சொன்னபோது, என் மனைவி ஜோம்பி படங்களில் கூட அனைத்தும் தெரிந்துவிடுகிறதே  என கூறினார். அந்த படங்களில் நோய் தொற்றி இறப்பதுதானே  அதன் முடிவு. உங்கள் துறை சாராத நூல்களை வாசிக்கலாம். நன்றாக இருக்கும்.

சிறந்த மொழிபெயர்ப்பு நூலாக நீங்கள் வாசித்தது

இலங்கை தமிழரான சோபா சக்தியின் படைப்புகள்

படிப்பதில் ஏற்படும் தடை

ஒரு நூலை படிப்பதில் தடை ஏற்பட்டால் வேறு நூலை எடுத்து படியுங்கள். நான் தினசரி காலை ஒருமணி நேரம் படிக்கிறேன். நேரத்தை திட்டமிட்டுக்கொண்டு படியுங்கள்.

அதிகம் கவனிக்கப்படாத வாசிக்கப்பட வேண்டிய எழுத்தாளர்

கார்ல் முல்லர். அவரது பர்கெர் தொடர்வரிசை நூல்கள்.

கிரியேட்டிவ் செயல்பாடு

 இரவு எட்டுமணிக்கு படுத்து விடுவேன். அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து எழத தொடங்குவேன். காலை எட்டு மணி வரை எழுதுவேன். அப்போது யாருடைய சத்தமும் இருக்காது. போனும் ரிங் அடிக்காது. இதை தினசரி செய்வது கடினமாக இருக்கும். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில்….


https://www.shehanwriter.com/

-----------------------------------------------------


ஜேனிஸ் பாரியட்

எழுத்தாளர், கவிஞர்

படித்துக்கொண்டிருப்பது…

மெரின் ஷெல்டிரெக்கின் என்டேஞ்சல்ட் லைஃப். ஷிர்லி ஜாக்சனின் நூல்களை படிக்கவும் ஆர்வம் கொண்டிருக்கிறேன்.

எழுதும்போது செய்வது..

எழுதும் மேசையில் மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பேன். அதில் வரும் மணம் நன்றாக இருக்கும். உங்களைச் சுற்றியுள்ள காற்றை இசைவாக மாற்றும்.

எப்போதும் பிடித்த நூல்கள், கதைகள்

என்னுடைய பாட்டி சொன்ன கதைகள். பின்னாளில், பிரனாய் லாலின் இண்டிகா.

 பிடித்த நூல் வகை…

பல்வேறு நூல் வகைகளுக்குள் எழுத்தாளராக, வாசகராக சென்று வர விரும்புகிறேன்.

பிடித்த மொழிபெயர்ப்பு நூல்

காலித் ஜாவேத்தின் தி பாரடைஸ் ஆப் புட் நூல்.

அதிகம் கவனிக்கப்படாத எழுத்தாளர்

நான் அப்படி ஒருவரை சொன்னால் அவர்கள் வருத்தப்படுவார்கள். எனவே, இறந்துபோனவர்களைச் சொல்லுகிறேன். சோசோ தாம்.

படிக்கும் போது ஏற்படும் தடை

நான் எழுதிக்கொண்டிருக்கும்போது இன்னொருவரின் நாவலைப் படிப்பதில்லை. நான் எழுதும் பாத்திரங்களின் குரல்களை குறிப்பிட்ட காலம் நூல் எழுதி முடிக்கும் வரை கேட்க விரும்புகிறேன். அந்த நேரத்தில் பிற எழுத்தாளரின் பெயர்களைக்கேட்க விரும்புகிறேன்.

நூலை எழுத தொடங்குவது எப்படி?

குளத்தில் கல்லை தூக்கிப் போட்டவுடன் அலைகள் உருவாகிறது அல்லவா? அதுபோல நூலை எழுதுவதற்கு எனக்கு அதன் தலைப்பு முக்கியம். பிறகுதான் தலைப்புக்கு கீழே எழுதவேண்டுமே என்ற எண்ணம் உருவாகும்.



-----

https://janicepariat.com/

இந்து ஆங்கிலம்.


கருத்துகள்