17. பத்திரிகையாளர்களை வழக்குகள்,ரெய்டு மூலம் மிரட்டிய அதானி - மோசடி மன்னன் அதானி!

 
அதானி என்டர்பிரைசஸ், அதானி க்ரீன், அதானி ட்ரான்ஸ்மிஷன், அதானி க்ரீன் எனர்ஜி ஆகிய நிறுவனங்களில் பங்குகளை விற்பனை செய்வது, பங்குத்தரகர்கள் பங்களிப்பு என்று பார்த்தால் பெரிதாக ஏதுமே இருக்காது.

‘’நாங்கள் அதானி குழுமத்தின் பங்குகளை,  உண்மையான பணப்புழக்கம் இன்மை, வட்டி இன்மை, துறையிலேயே 16 மடங்கு அதிக மதிப்பு ஆகியவை காரணமாக கைவிட்டோம்’’ என பங்குத்தரகர்  கூறினார். இவர் அதானி ட்ரான்ஸ்மிஷன் பங்குகளைக் கைவிட்டதை அடுத்து கூறிய வாக்கியம்தான் இது.

அதானி போர்ட் என்ற நிறுவனத்தைத் தவிர்த்து வேறு நிறுவனங்களின் பங்குகளை ஆராய எந்த நிறுவனங்களும் முன்வரவில்லை என்பதே உண்மை. இதற்கு குழுமத்தின் முதலீட்டு நிதி அளவே காரணம்.

Adani company

Analyst covering per Bloomberg jan 23

Indian Company with similar market cap, Number of analysts covering

Adani green energy

1

Bajaj finance: 33 analysis

Adani enterprises

2

Larsen & Toubro: 44 analysis

Adani Transmission

2

HCL technologiesL 46 analysis

Adani Total gas

1

ITC: 37 analysts

Adani ports

22

Mahindra & Mahindra: 48 analysts

Adani wilmar

7

Dr. Reddy’s : 48 analysts

Adani power

1

Britannia 41 analysis

 

உள்நாட்டில் இயங்கும் ஒரு  மியூச்சுவல் ஃபண்ட் மேலாளர் கூட அதானி குழுமத்தின் பங்குகளை வாங்குவதற்கு முயலவில்லை.

2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், உள்நாட்டு மியூச்சுவல் ஃபண்ட் மதிப்பு 180 பில்லியன் டாலர்களைக் கொண்ட ஈக்விட்டியாக மாறியது. ஆனால், அதானி குழும நிறுவனங்களில் உள்நாட்டில் உள்ள பங்குத்தரகர்களில் ஒருவர் கூட ஈக்விட்டி பங்கில் ஒரு சதவீதமேனும் வாங்கவில்லை.

 

Adani company

Domestic Mutual fund above 1% equity

Comments

Adani Transmission

No

19 mutual funds aggregate of 0.13% of equity

Adani Green Energy

No

19 mutual funds aggregate of 0.13% of wquity

Adani Enterprises

No

31 mutual funds owning aggregate of 1.19% of equity

Adani Total gas

No

20 mutual funds owning aggregate of 0.13% of equity

 

(2022 டிசம்பர்  மாத பங்குகள் அடிப்படையில்…)

அதானி குழுமத்தின் மேற்கண்ட நிறுவனப் பங்குகளை, பங்குத்தரகர்கள் வேண்டுமென்றே தவிர்த்திருக்கிறார்கள் என்றே ஆய்வு தெரிவிக்கிறது.

அதானி குழுமம் மீதான விமர்சனங்கள்

‘’விமர்சனங்களை எதிர்கொள்வதில் திறந்த மனம் கொண்டவனாக இருக்கிறேன். செய்தியை கூறுபவரை விட செய்தி முக்கியமானது. நான் எப்போதும் பிறரின் பார்வைக்கோணத்தை பார்க்க முயற்சி செய்துகொண்டே இருப்பேன். நான் எடுக்கும் முடிவுகள் எப்போதும் சரியானவை; நான் எப்போதும் சரிதான் என்று கூறவில்லை. விமர்சனங்கள் என்னை நானே மேம்படுத்திக்கொள்ள உதவுகின்றன ‘’

இந்தியா டுடேவில் கௌதம் அதானி அளித்த நேர்காணல் (ப.9)

கௌதம் அதானி , விமர்சனங்கள் எங்கிருந்தாலும் அதை ஏற்பதாக தன்னை மேம்படுத்திக்கொள்ள உதவுவதாக கூறியிருகிறார்.

ஆனால் அவர் பேச்சுக்கு மாறாக, யூட்யூபர்கள், பத்திரிகையாளர்கள், சூழல் போராட்டம் பற்றி கருத்துகளை பதிவிடும் டவிட்டர் பதிவர்கள் ஆகியோரின் மீது கூட அதானி குழுமம் சட்டரீதியான நடவடிக்கையை எடுத்து வருகிறது.

 2020ஆம் ஆண்டு, அதானி குழுமம் இந்திய சட்டத்துறை அமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதியது. அதில், அதானி குழுமம் ஆஸ்திரேலியாவில் சுரங்கத் தொழிலை  செய்வதில் ஏற்படும் சூழல் பாதிப்புகளை மக்கள் சமூகவலைதளத்தில் பதிவிடுவதை தடுக்க கோரியது.  நிறுவனம் பற்றிய எதிர்மறையான பதிவுகளைப் பற்றி சட்ட அமைச்சகம் விசாரிக்க வேண்டுமென கோரியது.

‘’ நாட்டின் புகழ்பெற்ற வணிக குழுமத்தைத் திட்டமிட்டு போலிச்செய்தியால் அவதூறு செய்து அதனைக் கெடுக்க ட்விட்டர் பதிவர்கள் முயல்கிறார்கள்.  அமைப்பு ரீதியாக அதை அழிக்க முயல்கிறார்கள்’’ என அதானி குழுமம் கூறியது.உலகின் பெரும்பணக்காரர் ஒருவர் சமூக வலைதளப் பதிவுகளை முடக்க கோருவது வினோதமாக இருந்தாலும், அதானி குழுமத்திற்கு இந்த நடவடிக்கை புதிதானது அல்ல. 2021ஆம் ஆண்டு, யூட்யூபர் ஒருவர் மீது அதானி குழுமம் தனது நிறுவனம் பற்றிய தவறான வீடியோக்களை வெளியிட்டதாக புகார் கூறி,  நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுத்தது.

2017ஆம் ஆண்டு அதானி குழுமம் செய்த வரிமோசடிகளை எழுதி மக்களுக்கு உண்மைகளைச் சொன்ன பத்திரிகையாளர், அதானி குழுமத்தின் புகாரின் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வரி மோசடியில் வைர ஏற்றுமதி இறக்குமதி, வரியற்ற பொருளாதார மண்டலத்தை உருவாக்குவது தொடர்பான நிதி முறைகேடுகளும் உள்ளடங்கும்.

உலக ஊடகங்களைக் கண்காணிக்கும் ரிப்போர்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் அமைப்பு, வரி மோசடிக் கட்டுரைகளை எழுதிய பரஞ்சோய் குகாவுக்கு ஆதரவாக நின்றது. அதானி குழுமம், தனது செல்வாக்கை வைத்து நீதித்துறையை தவறாகப் பயன்படுத்துகிறது என குற்றம்சாட்டியது.

‘’ அதானி குழுமத்தின் புகாரின் பேரில் பரஞ்சோய் தாகுர்தா ஜனவரி 19ஆம் தேதி கைது செய்யப்பட்டிருக்கிறார். அதானி குழுமம், நீதித்துறையை முறைகேடாக தனது நோக்கத்திற்குப் பயன்படுத்துகிறது. பத்திரிகையாளர் பரஞ்சோய் குகா தாகுர்தாவை அனைத்து வழக்குகளில் இருந்து விடுவிக்க ரிப்போர்டர்ஸ் வித்தவுடன் பார்டர்ஸ் அமைப்பு கேட்டுக்கொள்கிறது.

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான கட்டுரையில் கூறப்பட்ட வரி ஏய்ப்பு தகவல்கள் சரியாக உள்ளன என குடிமை நீதிமன்றம் கூறியுள்ளது. இப்போது குஜராத்தில் உள்ள கட்ச் நீதிமன்றத்தைப் பயன்படுத்தி பத்திரிகையாளர் குகா மீது  துன்புறுத்தும் விதமாக நடவடிக்கை எடுப்பது தவறானது ’’ என தனது அறிக்கையில் ரிப்போர்டர்ஸ் வித்தவுட் பார்டர் அமைப்பு கூறியது.

ஆஸ்திரேலியாவில் உள்ள அதானியின் சுரங்கத்திற்கு எதிராக போராடிய சூழல் செயல்பாட்டாளரின் வீடு, காவல்துறை மூலம் ரெய்டு செய்யப்பட்டது. பிறகு, அவர் தனது ஒன்பது வயது மகளை பள்ளிக்கு கூட்டிச்செல்லும்போது, அதானி குழுமத்தினரால் நியமிக்கப்பட்ட தனியார் நிறுவன டிடெக்டிவ் ஒருவர் அவரைப் பின்தொடர்ந்தார்.

ஆஸ்திரேலியாவில் செயல்பட்டு வரும் ஃபோர் கார்னர்ஸ் என்ற தொலைக்காட்சி சேனல்  அதானி பற்றிய ஆவணப்படம் (Digging into Adni) ஒன்றை உருவாக்கி வெளியிட்டது. உடனே அதானி குழுமம், தொலைக்காட்சி சேனல் மீது தீவிரமான சட்ட நடவடிக்கை எடுப்பதாக மிரட்டியது.

‘’ தொலைக்காட்சி சேனல், நாங்கள் கொள்கைக்கு எதிராக, சட்டத்தை மீறி செயல்படுவதாக கூறியுள்ளது. எனவே, நாங்கள் அந்த நிறுவனம் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவிருக்கிறோம்’’ என்று அதானி குழுமம் அறிக்கையில் கூறியது.

 2021ஆம் ஆண்டு, அதானி குழுமம் எகனாமிக் டைம்ஸ் நாளிதழ் மீது அவதூறு வழக்கைத் தொடர்ந்தது. மொரிஷியஸ் நாட்டிலுள்ள அதானி குழுமத்தின் பங்குகளை வாங்கியுள்ள நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் செயல்படாமல் முடக்கி வைக்கப்பட்டதாக செய்தி வெளியிட்டதற்காகவே, அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

அதானிவாட்ச் என்ற குழு, அதானி குழுமத்தினர், அதானியைப் பற்றிய செய்தியை எழுதும் பத்திரிகையாளர்களை குஜராத்தில் உள்ள தொலைதூரமான இடத்திற்கு வர உத்தரவிட்டு  சந்திப்பது வழக்கம் என்று கூறியது.

ஹிண்டன்பர்க் அமைப்பு, ஊடகங்களை தம்மைப் பற்றிய செய்திகளை வெளியிடாதபடி தடுக்கும் நிறுவனங்களை கடுமையாக சாடுவது வழக்கம்.. பங்குச்சந்தையில் பல்வேறு விதமான கருத்துகளும், பார்வைகளும் இருப்பது முக்கியம். எடுக்கும் முடிவுகளை குடிமக்களுக்கு தெரிவிக்கவேண்டும்.

நேர்மையாக, நிலையாக செயல்பட்டு வரும் நிறுவனங்கள் பிறர் எழுப்பும் எந்த கேள்விக்கும், எழுதும் விமர்சனங்களுக்கும், பதிவிடும் ட்விட்டர் பதிவுகளுக்கும் பயப்பட வேண்டியதில்லை. ஏதாவது விஷயங்களை மறைத்து வைக்கும் நிறுவனங்களே உண்மையைச் சொல்லுபவர்களைக் கேலி, கிண்டல் செய்வது, சட்ட நடவடிக்கைகளை எடுப்பது ஆகியவற்றைச் செய்யும்.  

வெளிப்படைத்தன்மையைக் கொண்ட வளர்ச்சி

வெளிப்படையாக அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளை செய்து வருகிறது. பெருநிறுவனங்கள் இப்படி முறைகேடுகளை செய்யும்போது நம் தொழில் அமைப்பு முறை உடைந்து நொறுங்கிவிடும். தனது பெருநிறுவனம் பற்றி கருத்துகளைக் கூறும் உண்மைகளைப் பேசும் குடிமக்கள் பலரையும் தனது அதிகாரத்தை, பணத்தைப்  பயன்படுத்தி நசுக்கி வருகின்றனர்.  ஹிண்டன்பர்க் அறிக்கை இந்த வகையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்பலாம்.

விமர்சனம் மற்றும் வெளிப்படைத்தன்மையை கௌதம் அதானி வரவேற்கிற மனிதராக உள்ளார். அந்த வகையில் அவர் கீழுள்ள 88 கேள்விகளுக்கு பதில் அளிப்பார் என மக்கள் நம்பலாம். 

1.கௌதம் அதானியின் இளைய சகோதரர், ராஜேஷ் அதானி. 2004-2005ஆம் ஆண்டு இவர் மீது வருவாய்த்துறை புலனாய்வு ஆணையகம் (டிஆர்ஐ) வைர ஏற்றுமதி இறக்குமதி பரிவர்த்தனை தொடர்பாக வழக்கு தொடர்ந்தது. போலியான ஆவணங்கள், சுங்க வரி ஏய்ப்பு. சட்டவிரோத நிலக்கரி இறக்குமதி ஆகிய பிரச்னைகளுக்காக இருமுறை கைது செய்யப்பட்டுள்ளார். இவரது குற்ற வரலாறு இப்படி நீண்டிருக்கிற நிலையில், அதானி குழுமத்தில் நிர்வாகத் தலைவராக பதவி உயர்வு அளிக்கப்பட்டது ஏன்?

2.கௌதம் அதானியின் மைத்துனர், சமீர் வோரா. வைர வணிகத்தில் செய்த மோசடிக்காக டிஆர்ஐயால் குற்றம்சாட்டப்பட்டார். ஆணையங்களுக்கு பல்வேறு போலியான தகவல்களை கொடுத்த வழக்கிலும் குற்றவாளி. இப்படி குற்ற வரலாறு இருக்கும்போது, அதானி (ஆஸ்திரேலியா) நிறுவனத்தில் செயல் தலைவராக பதவி உயர்வு அளிக்கப்பட்டது ஏன்?

3. டிஆர்ஐ, அதானி நிறுவனம் வாங்கிய மின் உற்பத்திப் பொருட்களைப் பற்றிய விசாரணையை செய்தது. அப்போது வினோத் அதானி நிறுவனப் பங்குதாரர் மட்டுமே. வேறு எந்த பதவியிலும் இல்லை என கூறப்பட்டது.

2009ஆம் ஆண்டு அதானி பவர் பங்கு வெளியீட்டின்போது, வினோத் அதானி, ஆறுஅதானி குழும நிறுவனங்களில் தலைவர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்படியெனில், முன்னர் விசாரணையில் டிஆர்ஐயிடம் அதானி குழுமம் கூறிய வினோத் பற்றிய தகவல்கள் அனைத்தும் பொய்யானவையா?

4. அதானி குழுமத்தில் வினோத் அதானியின் பொறுப்பு, பதவி என்ன? அதானி குழுமம் செய்துள்ள வணிகப் பரிவர்த்தனைகள், ஒப்பந்தங்கள் ஆகியவற்றில் அவரின் பங்கு என்ன?

5. மொரிஷியஸ் நாட்டில் உள்ள ஏபிஎம்எஸ் இன்வெஸ்ட்மென்ட், கிரெஸ்டா ஃபண்ட், எல்டிஎஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஃபண்ட், எலாரா இந்தியா ஆப்பர்சூனிட்டிஸ் ஃபண்ட், ஓபல் இன்வெஸ்ட்மென்ட் ஆகிய நிறுவனங்கள் அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்குகளை வாங்கியுள்ளன. இதன் மொத்த மதிப்பு 8 பில்லியன் டாலர்கள். இவ்வளவு பெரிய முதலீட்டு நிதியை இந்த நிறுவனங்கள் கொண்டுள்ளது எப்படி? முதலீட்டு நிதியைப் பெற்றதற்கான அடிப்படை ஆதாரம் என்ன?

6. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி செபி, அதானி குழுமத்தின் வெளிநாட்டு நிதி  பற்றி விசாரணை செய்யவுள்ளது. அதானி குழுமம், விசாரணை நடப்பது பற்றியும், அதுபற்றிய தகவல்களையும் பகிர முடியுமா?

7. ஒழுங்குமுறை அமைப்புகளிடம் விசாரணைக்குட்பட்ட வேறு தகவல்களையேனும் தர முடியுமா?

 8. மான்டேரோஸா இன்வெஸ்ட்மென்ட் ஹோல்டிங்க்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பல்வேறு நிறுவனங்களின் மொத்த மதிப்பு 4.5 பில்லியன் டாலர்களாகும். இதனை ஒரே பங்காக மாற்றி அதானி குழுமம் வைத்துள்ளது. மான்டேரோஸா நிறுவனத்தின் இயக்குநர், வைர வணிக மோசடியில் ஈடுபட்ட ஜதின் மேத்தாவுடன் சேர்ந்து மூன்று நிறுவனங்களுக்கு தலைவராக ஒரே நேரத்தில் செயல்பட்டுள்ளார்.

இந்த ஜதின் மேத்தாவின் மகன், வினோத் அதானியின் மகளைத் திருமணம் செய்துள்ளார். மான்டேரோஸா நிறுவனம், அதன் நிதி, அதானி குடும்பம் ஆகியவற்றுக்கு இடையில் உள்ள தொடர்பு என்ன?

9.அதானி குழும நிறுவனங்களுக்கும், வினோத் அதானியின் நிறுவனங்களுக்கும், அவர் ஜதின் மேத்தாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களுக்கும் உள்ள உறவு என்ன?

10.அதானி குழுமத்திற்கு நெருக்கமான குடாமி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவர் சாங் சுங் லிங். மான்டேரோஸாவில் அதிகளவு முதலீடு செய்துள்ள நிதி நிறுவனம், குடாமி ஆகும். மான்டேரோஸாவின் நிதி, அதானி என்டர்பிரைசஸ் மற்றும் அதானி பவர் ஆகிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதானி குழும நிறுவனங்களின் முக்கிய பங்குதாரராக, மொரிஷியஸ் நாட்டில் உள்ள மான்டேரோஸா  நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் இருந்து பட்டியலிடப்பட்ட அதானி குழும நிறுவனங்களுக்கு செல்லும் நிதி பற்றி விளக்கமாக கூறமுடியுமா?

11.அதானி குழுமத்தில் முதலீடு செய்யும் மான்டேரோஸா நிறுவனத்திற்கான நிதியாதாரம் என்ன?

12.எலாரா நிதி நிறுவனத்தின் முன்னாள் பணியாளர், நிறுவனம் 3 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான அதானி குழுமப் பங்குகளைக் கொண்டுள்ளது. 99 சதவீத நிதியை அதானி குழுமம் கட்டுப்படுத்துகிறது. இப்படியான நிதி அமைப்பு உருவாக்கப்பட்டதே உரிமையாளர் பெயரை மறைப்பதற்குத்தான் என்று கூறினார். இதுபற்றி கௌதம் அதானி என்ன கூற நினைக்கிறார்?

 13.எலாரா நிறுவனத்தின் இயக்குநர், பங்கு முறைகேடுகளில் ஈடுபட்ட தர்மேஷ் தோஷியுடன் வர்த்தக உறவுகளை வைத்திருக்கிறார் என்பதை இணையத்தில் கசிந்த மின்னஞ்சல்கள் வெளிப்படுத்தின. பங்குத்தரகரான கேட்டன் பரேக்கின் கூட்டாளிதான் தர்மேஷ் தோஷி. தோஷி மோசடியாளர் என்று தெரிந்தும் கூட எலாரா நிறுவனம் அவருடன் வணிகத் தொடர்பு வைத்திருக்கிறதா? அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட நிறுவனப் பங்குகளை வைத்திருக்கும் எலாராவின் உறவு பற்றி கௌதம் அதானி என்ன கூற விரும்புகிறார்?

 14.அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள எலாரா நிறுவனத்தின் நிதியாதாரம் என்ன?

15. அதானி குழுமம், ஏமிகார்ப் என்ற நிறுவனத்துடன் உலகளவில் வணிக பரிவர்த்தனைகளை செய்து வருகிறது. இந்த நிறுவனம், ஏழு முதலீட்டு நிறுவனங்களை உருவாக்கி இயக்கி வருகிறது. மேலும் உருவாக்கிய பதினேழு போலி நிறுவனங்களை வினோத் அதானி நிர்வாகம் செய்கிறார். மொரிஷியஸ் நாட்டில் உள்ள மூன்று நிறுவனங்கள் அதானி குழும பங்குகளை வாங்கியுள்ளன.

அமெரிக்காவில் நடந்த 1எம்டிபி எனும் மோசடியில் ஈடுபட்டு நிறுவனங்களில் ஏமிகார்ப்பும் ஒன்று. ஏமிகார்ப் இந்தளவு குற்ற செயல்பாடுகளில் ஈடுபட்ட வரலாற்றைக் கொண்டிருக்கும்போது அதானி குழுமம், அதனுடன் இணைந்து வணிகம் செய்வது ஏன்?

16. சைப்ரஸ் நாட்டைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனம், நியூலியாயினா. அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் 95 சதவீத பங்குகளை, நியூலியாயினா வைத்துள்ளது. இதன் மதிப்பு 420 மில்லியன் டாலர்களுக்கும் அதிகம். இந்த நிறுவனத்தை ஏமிகார்ப் இயக்குகிறது. அதானி குழுமத்தில் முதலீடு செய்வதற்கான நிதி நியூலியாயினாவிற்கு எப்படி கிடைத்தது? அதன் நிதியாதாரம் என்ன?

17. ஓபல் இன்வெஸ்ட்மென்ட் லிட். நிறுவனம், அதானி பவர் நிறுவனத்தில் 4.69 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது. இந்த நிறுவனம், ட்ரஸ்ட்லிங் என்ற சிறு நிறுவனத்தின் மூலம் ஒரே நாளில் மொரிஷியஸ் நாட்டில் தொடங்கப்பட்டது.   ட்ரஸ்ட்லிங், வினோத் அதானிக்கு சொந்தமானது. இதைப் பற்றி கௌதம் அதானி என்ன விளக்கம் கொடுக்கப் போகிறார்?

18. ஓபல் இன்ஸ்வெஸ்மென்ட் நிறுவனம், அதானி குழும நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதற்கான நிதியை எங்கிருந்து பெற்றது?

19. ட்ரஸ்ட்லிங்க்  நிறுவனத்தின் இயக்குநர், தனக்கு கௌதம் அதானியுடன் உள்ள உறவை வெளிப்படையாக கூறியிருக்கிறார். இவர், அதானி குழுமத்திற்கு போலி நிறுவனங்களை உருவாக்கி உதவியதாக டிஆர்ஐ மூலம் குற்றம்சாட்டப்பட்டவர். அதானி குழுமத்திற்கும் ட்ரஸ்ட்லிங்க் இயக்குநருக்கும் உள்ள வர்த்தக தொடர்புகள் என்ன? டிஆர்ஐ குற்றம்சாட்டிய ஆவணங்கள் பற்றி அதானியின் பதில் என்ன?

20.  மேற்சொன்ன வெளிநாட்டு நிறுவனங்கள், அடிப்படையில் அதானியை உரிமையாளராக கொண்டவை. அதானி குழுமத்தின் பங்கு வணிகப் பரிவர்த்தனை அளவு ஆண்டுக்கு 30-47 சதவீத அளவுக்கு உள்ளது. இப்படி பெரியளவில் முறைகேடாக வணிகப் பரிவர்த்தனை நடைபெறுவது எப்படி? வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் மூலம் அதீதமான அளவில் வணிகப் பரிவர்த்தனைகள் நடக்கிறது என கௌதம் அதானி விளக்குவாரா?

21. இந்த முறையில் வணிகம் நடைபெறுவது, நிதிகொண்ட நிறுவனங்கள்  பங்குபெறுவது பங்குச்சந்தையை முழுமையாக அழிக்கும் அல்லது முறைகேடுகளை ஏற்படுத்தும். இதற்கு அதானி என்ன பதில் சொல்லப்போகிறார்?

22.2019ஆம் ஆண்டு, அதானி க்ரீன் எனர்ஜி நிறுவனம், இரண்டு முறை தனது பங்குகளை விற்றது. பொதுப்பங்குதாரர்களின் எண்ணிக்கை 25 சதவீதத்திற்கு மேல் இருக்கவேண்டுமென்ற விதி சார்ந்து பங்குகளின் வணிக பரிவர்த்தனை நடைபெற்றது.   இதுபற்றி ஹிண்டன்பர்க் அறிக்கையில் கூறப்பட்டுள்ள மொரிஷியஸ், சைப்ரஸ் ஆகிய நாடுகளிலுள்ள நிறுவனங்களுக்கு விற்கப்பட்டது. அந்த நிறுவனங்களுக்கு  என்ன அளவில் பங்குகள் விற்பனை செய்யப்பட்டது என அதானி கூற முடியுமா?

23. இந்தியாவில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் தங்கள் பங்குகளை வைத்துள்ள நிறுவனங்கள் பற்றிய தகவல்களை வாரம்தோறும் வெளியிடுகிறார்கள். இந்த வகையில் அதானி குழுமம், தங்கள் நிறுவனங்களின் பங்குகளை வாங்கியுள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் பற்றி முழுமையான தகவல்களை அளிக்க முடியுமா?

 24. அதானி குழுமம், தனது நிறுவன பங்குகளை விற்க மோனார்ச் நெட்வொர்த் கேபிடல் எனும் சிறு நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்தது. இதற்கு முன்னரே இந்த நிறுவனத்தோடு இணைந்து கௌதம் அதானியின் சகோதரர் விமான நிறுவனம் ஒன்றை வாங்கினர். அதானி குழுமத்திற்கும், மோனார்ச் கேபிடல் நிறுவனத்திற்குமான உறவு பற்றி அதானி விளக்குவாரா?

25. முன்னர், பங்கு முறைகேட்டில் ஈடுபட்டதால் செபி அமைப்பால் தடைசெய்யப்பட்ட மோனார்ச் நெட்வொர்த் கேபிடல்  எனும் சிறு நிறுவனத்தோடு இணைந்து பங்குகளை விற்பது ஏன்? இதற்கு பதிலாக புகழ்பெற்ற தரகு நிறுவனங்களை தேர்ந்தெடுத்திருக்கலாமே? 


Thanks

Mr.R.Muruganantham

tenor.com

கருத்துகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

செக்ஸ் இண்டஸ்ட்ரி சீக்ரெட் என்ன?

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

மலம் பச்சையாக இருக்கிறதா? கவனம் தேவை

நான்காவது காட்சி