மகளின் திருமணத்தை நடத்த பள்ளி ஆசிரியர் படும் பாடுகள் - விஷ்மயம் - இன்னொசன்ட், திலீப், ஶ்ரீதுர்கா

 









விஷ்மயம்

திலீப் , ஶ்ரீதுர்கா, இன்னொசன்ட், ஜெகதி ஶ்ரீகுமார்



ஒரு பள்ளி ஆசிரியர், தனது கடன்களுக்கக நிலங்களை, அருகிலுள்ள குரூப்பு ஒருவருக்கு விற்கிறார். அவர் நிலத்தை வாங்கியதோடு சுற்றிலும் உள்ள மனிதர்களின் வீட்டிலுள்ள பொருட்களை திருடர்களை வைத்து திருடி வைத்து விற்று பணக்காரராக மாறுகிறார். அவரை எப்படி சுற்றிலும் உள்ள மக்கள் கண்டுபிடித்து திருத்துகிறார்கள் என்பதே கதை.

படத்தில் முக்கியமான  மகேஷ் நாராயணன் என்ற ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் பாத்திரத்தில் இன்னொசன்ட் நடித்துள்ளார். தனது மறைந்துபோன மனைவியை சாய்வு நாற்காலியில் அமர்ந்துகொண்டு நினைத்துப் பார்த்து சந்தோஷப்படுவதும், அவளது நினைவாக மகளுக்கு பிரச்னை இல்லாத இடத்தில் மணம் செய்து வைப்பதுமான கனவு அவருக்கு இருக்கிறது. அவர் மகளுக்கு ஏழு பவுன் தங்கத்தை சேர்த்து வைத்திருக்கிறார். அதை குரூப் திருடி வைத்து திருமணத்தை தடுக்கிறார். அதை ஆசிரியரும், அவரது மகன் தினகரன், ஊர் மக்களில் அவரது நண்பர்களும் சேர்ந்து திருடி எடுத்து வர திட்டமிடுகிறார்கள். திருடப்போன இடத்தில் தற்கொலை செய்துகொள்ள முயலும் ருக்மணி என்ற பெண்ணையும் பார்த்து, தடுத்து  அவளையும் தினகரன் கூட்டி வந்து விடுகிறான்.

இதற்குப் பிறகு அவர்களது குடும்பத்திற்கு ஏற்படும் பல்வேறு பிரச்னைகளை படம் விவரித்துப் பேசுகிறது.

படம் நெடுக் திருடுபோன நகையை மீட்பது என சென்றாலும், நகைச்சுவைதான் முக்கியமாக படத்தை பார்க்க வைக்கிறது. அந்த வகையில் ஹனீபா, ஜெகதி ஶ்ரீகுமார் ஆகியோர் நன்றாக நடித்திருக்கிறார்கள். படத்தில் திலீப்புக்கு, காதல் காட்சிகள் மிக குறைவு. பெண் தற்கொலை செய்துகொள்ளும் நேரத்தில் அதை தடுத்து தனது திருட்டுக்கு உதவி செய்யச் சொல்வதோடு, அவளது பிரச்னையையும் கேட்டு தனது வீட்டுக்கு தினகரன் கூட்டி வந்துவிடுகிறான். தனக்கு விருப்பமில்லாத, குணம் சரியில்லாதவனை மணப்பதற்கு இறப்பதே மேல் என முடிவெடுப்பவள் தினகரனை மணந்துகொள்ள சம்மதிக்கிறாள். அவனை தெய்வமாக நினைத்து காலில் விழப்போகிறாள். இதை அந்த கால கலாசாரம் போல நினைக்கலாம். நாயகியின் முகத்தை நாயகன் ஒருமுறை பிரியமாக தொடுவதோடு சரி.

மகளின் கல்யாணத்திற்கு பந்தல் போடுவதில் தொடங்கி மகன், மகள் என இருவரின் கல்யாணம் ஒரே இடத்தில் நடந்து முடிவதாக படம் நிறைவடைகிறது.

கோமாளிமேடை டீம் 

---------------------------------------------


Directed by Raghunath Paleri
Screenplay by Raghunath Paleri
Starring Dileep
Innocent
Sreedurga
K. P. A. C. Lalitha
Cinematography Venugopal
Music by Johnson

Production
company
CC Cine Vision

கருத்துகள்