குழந்தைகளை கொன்றொழித்த கர்ப்பிணி மையங்கள் - விக்டோரியா கால கொடுமை


 

பேபி ஃபார்மிங் என்றொரு காலம் மேற்குலகில் இருந்தது. தமிழில் குழந்தை விவசாயம் என்று சொன்னால் கண்றாவியாக இருப்பதால், குழந்தை உற்பத்தி அல்லது உருவாக்கம் என சொல்லலாம். தருமொழி, பெறுமொழி பிரச்னையால் இப்படி மாற்றிக்கொள்வோம். 

மேற்கு நாடுகளில் டீன் ஏஜ் காலங்களில் பெண்கள் தனியாக சுற்றத் தொடங்குவார்கள். தனக்கான இணையைத் தேர்ந்தெடுப்பார்கள், செக்ஸ் வைத்துக்கொள்வதும் கூட சகஜமானது. செக்ஸ் இயற்கையானதும்தானே? செக்ஸ் வைத்துக்கொண்டு குழந்தை உருவாகி அதை வளர்த்தெடுக்கும் திடமான மனம் கொண்ட பெண்கள் மேற்குலகில் உண்டு.

பொதுவான இந்தியச் சமூகத்தில் திருமணம் செய்யாமல் குழந்தை பெற்றெடுத்தால் தே*** என்று கூறுவார்கள். இங்கு நான் தமிழில் கூறுவதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொள்ளுங்கள். அதே சூழல் மேற்கு நாடுகளிலும் அப்போது இருந்தது. இப்படி ஒரு அவமானம் நமக்கும் குடும்பத்திற்கும் வரக்கூடாது என விக்டோரியா கால ஆட்கள் நினைத்தனர். எனவே, கல்யாணம் ஆகும் முன்னரே வயிற்றை தள்ளிக்கொண்டு வாந்தி எடுத்த வாரிசுகளை தனியாக இருக்கும் கர்ப்பிணி இல்லங்களில் சேர்த்து பராமரித்தனர். இதற்கு அந்த இல்லங்களுக்கு குறிப்பிட்ட அளவில் காசு கட்ட வேண்டும். பெற்றோர், பிள்ளை வெளிநாட்டுக்கு, மாகாணத்திற்கு படிக்க போய்விட்டான்  என உறவுகளிடம் பொய் சொல்லி கௌரவத்தை காத்துக்கொள்வார்கள். இளந்தாரி பயல்கள் இப்படி இருப்பதில் திரிவதில் ஆச்சரியம் என்ன?

கர்ப்பிணி பெண்கள் குழந்தை சௌக்கியமாக பெற்றுக்கொண்டு உடல்நிலை தேறியதும் வீடு வந்து விடுவார்கள். குழந்தையை அதன் அப்பா வந்து வளர்ப்பாரா என்ன? அந்த தமிழ் சினிமா கதைக்கு அங்கு சந்தை வாய்ப்பில்லை. இல்லத்து ஆட்கள் கறுப்பு சந்தையில் குழந்தையை, வளர்ப்புக்கு யாரேனும் கேட்டால் விற்றுவிடுவார்கள். சிலசமயங்களில் குழந்தையை உடனே காசு செய்ய முடியாது. உயிரோடு வைத்து பராமரிக்க வேண்டுமா என நினைக்கும் மகான்கள், உடனே அக்குழந்தையை கொன்றுவிடுவார்கள்.

தாய், பெற்றோர், சமூகம் புறக்கணித்த குழந்தைகளை யார் வந்து காப்பாற்ற போகிறார்கள்? குப்பை போல தூக்கி எறிய வேண்டியதுதான். இப்படி கொல்லப்பட்ட குழந்தைகள் ஏராளமானவை.

படம் - பின்டிரெஸ்ட்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்