இடுகைகள்

கோதையூர்மேல் திங்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பாத்திமா ராணியின் திகைப்பூட்டும் அஞ்சல் பயணம்!

படம்
  பாத்திமா ராணி, தினசரி தபால்களை கொண்டு சேர்க்க காட்டு வழியே சென்று கொண்டிருக்கிறார். இவர் கோதையூர் மேல்திங்கள் பகுதி போஸ்ட் மாஸ்டராக பணிபுரிகிறார். அங்குள்ள புனல் மின்சார நிலையத்திலுள்ளவர்களுக்கு வரும் தபால்களை காட்டைத் தாண்டி சென்று கொடுத்து வருகிறார். களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் இவர் கடந்து செல்லும் காட்டில் உள்ளது.  இவர் தனது பணியை செய்யும்போது எதிரில் சிறுத்தை, காட்டெருமை, யானை, காட்டுப்பன்றி ஆகியவை எதிர்ப்படுவது சகஜமானது. மழைப்பொழிவு அதிகம் என்பதால், பனி சூழ்ந்த சூழலில் வழியே தெரியாதபோது அங்குள்ள விலங்குகளை எப்படி அடையாளம் காண்பது என பலருக்கும் திகைப்பாக இருக்கும். அதையும் புனல் நிலைய மக்களே உதவி செய்து வழிகாட்டி வருகின்றனர். அவர்களது அறிவுரை மூலம் யானை ஒரு இடத்தில் இருக்கிறதா என அடையாளம் கண்டு கொண்டுகொள்கிறார் ராணி.  ஒருசமயம் இப்படி செல்லும்போது, புலிக்குட்டி ஒன்று வழியில் விளையாடிக்கொண்டிருக்க, அருகில் தாய்ப்புலி இருப்பதை ராணி உணர்ந்தார். எனவே, மரத்தின் அருகில் சென்று அரைமணி நேரம் காத்திருந்துவிட்டு பிறகே தனது வேலையை தொடர்ந்திருக்கிறார். இல்லையெனில் தாய்ப்புலியின் தாக