வளர்த்த அப்பாவைக் காப்பாற்ற, பெற்றெடுத்த அப்பாவிடம் பணத்தை கொள்ளையடிக்கும் மகன்!
மா நானா சூப்பர் ஹீரோ சுதீர்பாபு, சாயாஜி ஷிண்டே தெலுங்கு எப்போதுமே ஜிம் பாய் போல உலாவும் சுதீர்பாபு, இம்முறை சண்டைக் காட்சிகளே இல்லாத படத்தில் நடித்திருக்கிறார். ஆனால், படத்தில் நெகிழ்ச்சியான எந்த ஒரு காட்சியும் இல்லை. அனைத்துமே மிக மேலோட்டமாக உள்ளது. ஒரு தந்தை கையில் காசு இல்லை என்பதால் பிள்ளையை மதர்தெரசா என்ற அனாதை இல்லத்தில் விட்டுவிட்டு சிறைக்கு சென்றுவிடுகிறார். அந்த குழந்தையை இன்னொருவர் எடுத்து வளர்க்கிறார். அவர்தான் வளர்ப்புதந்தை சாயாஜி ஷிண்டே. ஆனால் என்ன துரதிர்ஷ்டமோ, அவர் வாழ்க்கை குழந்தை வந்த பிறகு தலைகீழாகிறது. மனைவி இறக்கிறார். வேலை போகிறது. பங்குச்சந்தை வீழ்ச்சியடைய கடன்காரராகிறார். வளர்ப்பு பிள்ளை ஜானியை கரித்துக்கொட்டுகிறார். மகன்தான் அப்பா செய்யும் பித்தலாட்டங்களுக்கு கடன் வாங்கி காசு கட்டுகிறார். ஜானி மெக்கானிக் கடை ஒன்றை வைத்திருக்கிறார். அதை வைத்தே பிழைப்பு ஓடுகிறது. இந்த நிலையில் பெற்ற அப்பா, மகன் ஜானியைத் தேடி வருகிறார். அப்போது ஜானி, அவர் தனது அப்பா என தெரியாமலேயே அவருக்கு கார் ஓட்டுகிறார். சில நூறு மைல்கள் ஒன்றாக பயணிக்கிறார்கள். அந்த சமயம், வளர்த்த அப்பா சீன...