இடுகைகள்

திகில் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நாட்டை திகிலில் உறைய வைத்த கொலைகாரர்

படம்
 புத்திசாலியான குற்றவாளி முடிஞ்சா என்னைப் பிடி என சொல்லிவிட்டு குற்றங்களை செய்து விட்டு ஓடுபவர்களைத்தான் புத்திசாலி என காவல்துறை ஏற்கும். இதில் டாக்டர் ஹெச் ஹெச் ஹோல்ம்ஸ் என்பவரை இப்படிக் கூறலாம். இவர் ஸ்வீனி டாட் என்பவரை தனது ரோல்மாடலாக வரித்துக்கொண்டு வேலை செய்தார்.  ஸ்வீனி டாட் என்பவர் நாவிதராக வேலை செய்து வந்தார். அவரைப் பொறுத்தவரை முடிவெட்டுவது, ஷேவிங், அண்டர் ஷேவிங் என்பதெல்லாம் ஹாபி. முழுநேர வேலை, சேரில் உட்கார்ந்தவர்கள் அப்படியே கீழேயுள்ள அறைக்கு லிவரைத் தள்ளி கொண்டுபோய் சேர்த்து கொல்வதுதான். பிறகு அவர்களின் பணத்தை திருடிக்கொண்டு உடலை அழித்துவிடுவது.  இவரைப் பற்றிய செய்தியைப் படித்த ஹோல்ம்ஸ் உடனே தனது வழியைத் தேர்ந்தெடுத்துவிட்டார். இவர், வேடிக்கை மற்றும் லாபத்திற்காக கொலைகளை செய்யத் தொடங்கினார். ஹோட்டல் ஒன்றைக் கட்டி அதில் தான் கூட்டி வரும் இரைகளை சித்திரவதை செய்வதற்கான அறைகளை அமைத்தார். அலறல் கேட்காத சவுண்ட் ப்ரூப்  வசதி, சித்திரவதை அறைகள்,  உடலை வேக வைக்கும் ஸ்டவ் என வேற லெவலில் அமைத்தார். தனது காதலிகள், மனைவிகள், வணிக பங்காளிகள், குழந்தைகள் என ஏராளமானோரை தடயமே இல்லாமல் கொன்

தூக்குத்தண்ட்னைக் கைதியின் பழிவாங்கும் படலத்திற்கு உதவும் காக்கை சித்தர்! சிவரகசியம் - இந்திரா சௌந்தர்ராஜன்

படம்
                சிவரகசியம்   இந்திரா சௌந்தர்ராஜன் பூமிக்காத்தான் பட்டியில் கோவிலுக்குள் அமைந்திருக்கிறது ஊர் . இங்கு பௌர்ணமி தோறும் சித்தர்கள் பூஜை செய்து வருகிறார்கள் ரசமணீஸ்வரர் ஆலயத்தின் சிறப்பால் ஊரில் மழை வளம் குறைவதில்லை . தினமும் மழை பெய்கிறது . அங்குள்ள சிவ வனத்தில் சித்தர்கள் வாழ்கின்றனர் . இந்தசெய்தி காண்டீபன் என்ற பத்திரிகையாளர் வெளிநாட்டு ஆராய்ச்சியாளருக்கு கூற , வில்சன் எனும் ஆராய்ச்சியாளர் அங்கு வருகிறார் . இதனால் நேரும் விளைவுகள்தான் கதை . இதன் உப கதைகளாக தூக்குதண்டனை விதிக்கப்பட்ட தீவிரவாதி ராமண்ணா , பூமிக்காத்தான் பட்டியில் தொழிற்சாலை தொடங்கும் அர்ஜூன் ஆகியோர் கதை வருகிறது . தூக்குதண்டனை கைதி கதை மட்டுமே சுவாரசியமாக உள்ளது . மற்ற இரு கதைகளும் பெரிய அளவில் ஈர்க்கவில்லை . நாவலின் இன்னொரு பலவீனம் . கதையில் தொடக்கத்தில் கூறும் தகவல்கள் . சித்தர்கள் பற்றிய தகவல்களை ஆசிரியர் கூற நினைத்திருக்கிறார் . அதற்காக இன்னொரு புத்தகம் எழுவதும் அளவுக்கு தகவல்களை குவிப்பார் என்பதை வாசகரும் எதிர்பார்த்திருக்கமுடியாது . ஒருகட்டத்தில் இந்த தகவல்களைப் படித்தவிட்ட

பனாரஸ் போரில் இறந்து போன மருத்துவரின் நண்பர், மறுபிறப்பு எடுத்து வந்தால்? - எட்கர் ஆலன்போவின் மூன்று கதைகள் - மருதா பாலகுருசாமி

படம்
                எட்கர் ஆலன்போவின் மூன்று கதைகள் மருதா பாலகுருசாமி இதில் இடம்பெற்றுள்ள மம்மியுடன் ஒரு உரையாடல் , கரடுமுரடான மலைகளின் கதை , எலிநோரா என அனைத்து கதைகளும் அமானுஷ்யம் திகில் கலந்தவைதான் . இதில் எலிநோரா மூன்றாவது கதை . புல்வெளி , பனித்துளி என காதல் நெஞ்சமெங்கும் கொட்டுவது போலான கதை . இறந்துபோன காதலிக்கு செய்துகொடுக்கும் சத்தியத்தை காப்பாற்ற முடியாத காதலனின் கதை . ஆனாலும் நேர்மையாக காதலித்தால் போதும் என அதுவே சத்தியத்தை மீறியதற்கான விஷயத்தை நேர் செய்துவிடும் என்கிறார்கள் . கதையில் எழுதப்பட்ட கவித்துவமான வார்த்தைகளை பிரமாதமாக உள்ளன . காதலை மறக்கமுடியதாக மாற்றுகின்றன . மம்மியுடன் ஒரு உரையாடல் என்ற கதை எகிப்திலிருந்து கொண்டு வரப்பட்ட மம்மியின் உடலை சோதிப்பதில் தொடங்குகிறது . அதன் உடல் உள்ள பெட்டியை வர்ணிக்கும்போது , நமது மனதில் அதற்கான திகில் பனி சூழத்தொடங்குகிறது . ஆனால் அந்தளவு பயந்துவிட அவசியமில்லை என பிறகுதான் நாம் புரிந்துகொள்கிறோம் . காரணம் இந்த மம்மிக்கு இறப்பு நேர்ந்து பாடம் செய்யப்படவிலை . மூளையும் , குடலும் உள்ளன . எனவே இந்த மம்மி மனிதர்களுடன்

திரில்லர் படங்களை பார்ப்பது ஆரோக்கியத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும்! - ரீலா? ரியலா?

படம்
    ரியலா ? ரீலா ? 1. திகில் , திரில் திரைப்படங்களைப் பார்க்கும்போது நம் உடலிலுள்ள ரத்தம் உறையும் . ரியல் : திகில் , திரில் நிறைந்த படங்களை இரவில் பார்த்திருப்பீர்கள் . அப்போது உங்களை அறியாமல் இதயத்துடிப்பு அதிகரிக்கும் . வியர்க்கும் . ஆனால் உங்கள் ரத்தத்தில் ஏதாவது மாற்றங்கள் நடந்திருக்கும் என யோசித்திருக்கிறீர்களா ? திரைப்படக்காட்சி வழியாக படத்தோடு ஒன்றிப்போகும்போது , நம் உடலில் மாற்றங்கள் ஏற்படுகின்றன . அதன் விளைவாக ரத்தத்தில் உள்ள புரதமான ஃபேக்டர் 7 மாறுதலுக்கு உள்ளாகிறது . இதன் விளைவாக ரத்தம் தற்காலிகமாக ஜெல் போல மாறுகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள் . படங்கள் பார்ப்பவர்களுக்கு மட்டும்தான் என்றில்லை . பங்கி ஜம்ப் விளையாட்டை மேற்கொள்கிறவர்களுக்கும்கூட உடலில் இந்த மாற்றம் ஏற்படுகிறது என ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர் . ஆபத்து ஏற்படும்போது உடல் தன்னைக் காத்துக்கொள்ளும் வழிமுறைதான் இது . வேறொன்றுமில்லை . 2 . உயரமான கட்டடத்திலிருந்து சில்லறைகளை கீழே வீசி , மனிதர்களின் தலையில் விழுந்தால் அவர் இறந்துவிடுவார் . ரியல் : முட்டாள்கள் தின கண்டுபிடிப்புகளில் இதுவும் ஒன்று

மருத்துவமனைக்குள் பேய்! - நந்தினி நர்சிங் ஹோம் படம் எப்படி?

படம்
நந்தினி நர்சிங் ஹோம் - தெலுங்கு இயக்கம் - பிவி கிரி இசை- அச்சு, சேகர் சந்திரா சந்து ஊரில் எம்பிஏ படித்துவிட்டு வேலை தேடி நகருக்கு வருகிறார். வருகிற இடத்தில் மருத்துவமனையில் வேலை கிடைக்கிறது. அப்போது எம்பிஏக்கு பதில் எம்பிபிஎஸ் ரெஸ்யூமில் எழுத்துகள் மாற பிரச்னைகள் தொடங்குகிறது. ஜூனியர் டாக்டராக அவரைத் தேர்ந்தெடுக்கின்றனர். தன் நண்பர் மூலம் எப்படியோ சமாளித்து வேலை செய்கிறார். ஆனால் மருத்துவர் என்றால் அடிப்படையே தெரியாமல் உள்ளவர் எப்படி சமாளிக்கிறார்? அங்கு அவருக்கு மருத்துவமனை நிர்வாகி மீது காதல் வருகிறது. காசுதான் முக்கியம் முதல் காதல் காசுக்காக புட்டுக்கொண்டு விட்டது. இதுவும் அப்படி ஆக கூடாது என சந்து நினைக்கிறார். இதற்கிடையில் மருத்துவமனையில் மர்ம நிகழ்ச்சிகள் நடக்கத் தொடங்குகின்றன. அதனை சந்து உணர்ந்தாரா என்பதுதான் கதை. ஆஹா படத்தில் பெரும்பலம் வெண்ணிலா கிஷோர், சப்தகிரியின் காமெடிக் காட்சிகள்தான். மற்றபடி நாயகி, நாயகன் நடிக்க வாய்ப்பு குறைவு. படத்தின் பாடல்கள் கேட்க கேட்கத்தான் பிடிக்கும். மோசம் படத்தின் நீளம். தக்கனூன்டு கதையை வைத்துக்கொண்டு எவ்வளவு  தூரத்தி

திகில் படங்களின் மீது ஏன் ஆசை வருகிறது? உளவியல் பார்வை இதோ!

படம்
டாக்டர் எக்ஸ் சிலர் திகில் படம் பார்க்க ஏன் ஆசைப்படுகிறார்கள்? சாகச அனுபவ விரும்பிகளாக இருப்பார்கள். வேறென்ன, இப்போது பாருங்கள். என் அருகில் அமர்ந்துள்ள ஓவியர், எப்போதும் போகும் டீக்கடைக்கு போகாமல் தூரமாக போய் டீ குடித்துவிட்டு வேறு வழியாக ஆபீசுக்கு வருகிறார். என்ன ஆச்சுங்க சார் என்றால், போரடிக்குது ப்ரோ என்றார். ஆம். அதுதான். காரமான உணவு சாப்பிடுவது, ஸ்கை டைவிங் செய்வது, மலையில் கயிறு கட்டி மிஷன் இம்பாசிபிள் படம் காட்டுவது எல்லாமே இதையொட்டி ஏற்படுவதுதான். ஆபீஸ் வாழ்க்கையில் நீங்கள் என்ன சாகசத்தை அனுபவிக்க முடியும். அப்படி சாதிக்கும் வெறியில் தட்டினாலும் தலைமுறைக்கே உழைக்கும் டிவிஎஸ் பாரத் கீபோர்டைக் கொடுத்துவிடுவார்கள். ஒன்றும் செய்யமுடியாது. பொதுவாக ஆண்கள் பெண்களைத் தவிர வேறு யாருக்கும் பயப்படுவது கிடையாது. எனவே திகில் படங்களான ஈவில் டெட், கான்ஜூரிங் வகையறாக்களை ஊதித்தள்ளுவார்கள். ஆனால் டேட்டிங்கில் பெண்கள் பயத்தில் கட்டிப்பிடிக்க ஆள் வேண்டுமே? அதற்கு ஆண்கள் உதவுகிறார்கள். ஆண்கள் தம்மை பாதுகாவலராக காட்டிக்கொள்ளவும் இந்த சந்தர்ப்பங்கள் உதவுகின்றன என்கிறார் உளவியலாளரா