இடுகைகள்

மக்கள் சீன குடியரசு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பரஸ்பர வளர்ச்சிக்காக ஆப்பிரிக்க நாடுகளோடு இணைந்து நடைபோடும் சீனா - மக்கள் சீன குடியரசு 75 ஆண்டுகள்

படம்
      மக்கள் சீன குடியரசு - 75 ஆண்டுகள் உலக நாடுகள் சிறப்பாக இயங்கினால்தான் சீனா நன்றாக செயல்பட முடியும். சீனா நன்றாக செயல்படும்போது, முழு உலகமும் இன்னும் மேம்படும் என 2023ஆம் ஆண்டு சீன அதிபர் ஷி ச்சின்பிங், மூன்றாவது பாதை மற்றும் சாலை திட்டத்தின் உரையில் கூறினார். சீனாவில் 1.4 பில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இவர்களோடு, பல்வேறு சவால்களை சந்தித்து பயணிப்பது சாதாரண காரியமல்ல. 2049ஆம் ஆண்டு சீன நாட்டை புத்துயிர்ப்பு செய்வதுதான் லட்சியமாக கொண்டு சீன அரசு இயங்கி வருகிறது. அந்த ஆண்டில் மக்கள் சீன குடியரசு, தனது நூற்றாண்டைக் கொண்டாடும் நாள். மக்கள் சீன குடியரசு நிலப்பரப்பு ரீதியாக, மக்கள்தொகை ரீதியாக பெரிய நாடு. இப்படி பல்வேறு சவால்களைக் கொண்ட நாடு எப்படி ஒரே திசையில் பயணிக்கிறது என ஆச்சரியமாக உள்ளது. 1978ஆம் ஆண்டு சீனாவில் நடந்த பொருளாதார மாற்றங்கள், சீர்திருத்தங்கள் முக்கியமான சாதனைகள் என்று கூறவேண்டு்ம். அவை அனைத்து பிரிவு மக்களுக்கும் வளமை சேர்ப்பதாக மாறியுள்ளது. இதன் கூடவே கிராம, நகர வளர்ச்சி போதாமைகள், காற்று, நீர் மாசுபாடு, கோவிட், ரஷ்யா உக்ரைன் போர்  ஆகிய சவால்களையும...