இடுகைகள்

கோமாளி மேடை எக்ஸ்ளூசிவ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ரெடி டூ தியானம்!

படம்
ரெடி டூ தியானம் !   Osho International Meditation Resort, Pune சர்ச்சை குரு ரஜ்னீஷ் தொடங்கிய தியான மையம் . உலகை வீடாக கருதும் புதிய மனிதனுக்கான காஸ்ட்லி இடம் . கருப்பு மார்பிள் தரை , உயர மரங்கள் என கேரண்டியான ஞானச்சூழல் . காலை 10 மணி தொடங்கி தினசரி 10 தியான வகுப்புகள் உண்டு . நீச்சல் குளம் , ஸ்பா , கஃபே என பைவ்ஸ்டார் சொகுசு உண்டு . பௌர்ணமி நாட்களில் இசை , படம் என களைகட்டுகிறது . ஹெச்ஐவி / எய்ட்ஸ் டெஸ்ட்டில் பாஸ் ஆனால் மையத்தில் கேட் திறக்கும் . குழந்தைளுக்கு அனுமதியில்லை . Auroville, Pondicherry அரவிந்தர் , மீரா அல்ஃபாஸா என இருவரின் ஐடியாவில் உருவான பல்வேறு கலாச்சார மனிதர்கள் வாழும் கம்யூன் அமைப்பு . 50 நாடுகளைச் சேர்ந்த 2,400 மனிதர்கள் வாழும் இடம் இது . 12 பூங்காக்கள் சூழ அமைந்துள்ள மாத்ரிமந்திர் நம் பிறப்பை குறியீடாக கொண்டது . மௌனமாக நம் சுயத்தை கவனிப்பதே இங்கு தியானம் . இன்டர்நெட் வசதியும் உண்டு . அனுமதி இலவசம் . ஆரோவில்லில் தங்கியிருக்க மாதவாடகை உண்டு . பெரும்பாலும் ஆராய்ச்சிக்காக இங்கு வந்து தங்குபவர்களின் எண்ணிக்கை அதிகம் . The Art of Living International C

உலகின் அழகான 10 சைக்கிள்கள்

படம்
உலகின் அழகான 10 சைக்கிள்கள் தொகுப்பு -மகாதேவ் அமெரிக்காவைச் சேர்ந்த எர்த் பாலிசி இன்ஸ்டியூட் எனும் சுற்றுச்சூழல் அமைப்பு எடுத்த ஆய்வில் 1950 - 2007 வரை சைக்கிள் தயாரிப்புகள் குறைந்திருக்கிறது அதேசமயத்தில் கார்களின் தயாரிப்பு வேகம் இரு மடங்காக கூடியிருக்கிறது . இதனால் எரிபொருட்களின் விலையும் நெரிசலும் அதிகமானதுதான் மிச்சம் . கடந்த 10 ஆண்டுகளில் சைக்கிள் கள் முன்பைவிட மெல்லியதாக உறுதியாகவும் பாதுகாப்பான மின்மோட்டார்களைக் கொண்டதாகவும் உருவாகியதோடு எளிதில் கிடைக்க கூடியதாகவும் , அழகானதாகவும் உள்ளன . பல்வேறு சைக்கிள் தயாரிப்பாளர்கள் , வடிவமைப்பாளர்கள் ஒன்றிணைந்து சூழலுக்கு இசைவான சைக்கிள்களை பல்வேறுவிதமாக தொடர்ந்து உருவாக்கி வருகிறார்கள் . அவற்றில் அழகான அம்சமான 10 சைக்கிள்களை பார்ப்போம் . பி . எஸ் . ஜி வுட் . பி . ட்யோமேடிக் சைக்கிள் ப்ரான்சைச் சேர்ந்த சைக்கிள் நிறுவனமான பிஎஸ்ஜி (BSG) வுட் . பி வரிசையில் உலோகங்கள் மற்றும் ஆஷ் பிளைவுட் ஆகியவை சேர்ந்த கலவையாக சைக்கிள்களை உருவாக்கி ஆனந்த அதிர்ச்சி தருகின்றனர் . அலுமினியம் பயன்படுத்துவதால் இதன் எடை 16 கிலோதான் . விலை