இடுகைகள்

ஆலியா பட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சினிமா டூ தொழிலதிபர் - இரு குதிரை சவாரி - அனுஷ்கா சர்மா, ஆலியா பட், பிரியங்கா சோப்ரா

படம்
  அனுஷ்கா சர்மா 2008ஆம் ஆண்டு ஷாரூக்கானின் ரப்னே பனா டி ஜோடி படத்தில் அறிமுகமானார். யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனத்தில் ஒப்பந்தமாகி டஜன் கணக்கிலான படங்களில் தெறமை காட்டினார். 2013ஆம் ஆண்டு க்ளீன் ஸ்லேட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தை தொடங்கினார். இதனை, அனுஷ்காவின் சகோதரர் கவனித்துக்கொள்கிறார். அனுஷ்கா நடிப்பதை மட்டும் பார்க்கிறார். அனுஷ்கா தயாரிப்பாளர் மட்டுமல்ல படங்களை உருவாக்கும் கதை, திரைக்கதை, படப்பிடிப்பு என அனைத்து செயல்முறையிலும் பங்கேற்று வருகிறார். 2015ஆம் ஆண்டு வெளியான என்ஹெச் 10 படம் இப்படித்தான் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. 2017இல் பில்லாரி, 2018இல் பரி ஆகிய திரைப்படங்கள வெளியாயின.  பேய்க்கதை, திகில் ஆகிய படங்களையே விரும்பி தயாரிக்கிறார். பல்ப்புல் -2020, பாதாள்லோக் 2020 ஆகிய இரண்டு ஓடிடி சீரிஸ்களும் அனுஷ்காவுக்கு நல்லப் பெயரை வாங்கிக்கொடுத்தன. இப்போது நுஸ் எனும் துணிகளை வடிவமைத்து விற்கும் நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.  2018, 2019ஆம் ஆண்டுகளில் ஃபார்ச்சூன் இதழில் 50 சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலிலும், ஃபோர்ப்ஸ் ஆசியா 30 அண்டர் 30 பட்டியலிலும் இடம்பிடித்தார்.  ஆலியா பட் பொது அறிவு கேள்விகள

2020 இல் கற்றுக்கொண்டதை இந்த ஆண்டில் நடைமுறைப்படுத்த வேண்டும்! ஆலியா பட், இந்தி நடிகை

படம்
                ஆலியாபட் இந்தி நடிகை 2020 ஆம் ஆண்டில் நிறைய சவால்களை சந்தித்துள்ளோம் . இக்காலகட்டத்தை எப்படி சமாளித்தீர்கள் ? நான் பெருந்தொற்று காலத்தை எழுதுவதில் செலவிட்டேன் . இது மனிதர்களுக்கும் பூமிக்கும் கூட எளிதான கால கட்டம் அல்ல என்பது உண்மை . இந்த ஆண்டில் கற்ற விஷயங்களை அடுத்த ஆண்டில் பயன்படுத்தி பார்க்கவேண்டும் என்பதே எனது ஆசை . 2021 இல் நீங்கள் நடித்த பிரம்மாஸ்திரா , கங்குபாய் கதியாவடி என்ற இரு முக்கியமான படங்கள் வெளிவரவிருக்கின்றன . ஆர்ஆர்ஆர் என்ற படம் 2022 இல் வெளியாகவிருக்கிறது . பெரிய பட்ஜெட் படங்களில் நடித்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? நான் படத்தை தேர்நெதடுப்பது கதை மற்றும் எனது கேரக்டர் சார்ந்து மட்டும்தான் . இவற்றோடு இயக்குநரின் படங்கள் பேசும்படியாக இருந்தால் படம் பெரிதாக தோன்றும் . படங்கள் என்பது முழுக்க இயக்குநரின் தோளில்தான் உள்ளது . அவர் எப்படி கதையை சொல்லவேண்டும் என நினைக்கிறாரோ அதைப்பொறுத்து படம் பெரியதாகவே பட்ஜெட்டிலோ அமையும் . ஆடைகளுக்கான பிராண்டு எப்படி உருவாக்கவேண்டும் என்று தோன்றியது ? நாம் பயன்படுத்த