இடுகைகள்

கன்னடம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மணல் மாஃபியா தலைவனை கைது செய்ய முயலும் சிபிஐ அதிகாரி!

படம்
  மஃப்டி - கன்னடம் மஃப்டி (கன்னடம்) சிவராஜ்குமார், ஷான்வி, ஶ்ரீமுரளி ரோகணூர் என்ற ஊரில் உள்ள பாரதி ரத்தினவேல் என்ற மாஃபியா தலைவனை பிடிக்க அரசு முயல்கிறது. இதற்காக ஜனா என்ற சிபிஐ அதிகாரி, அண்டர்கவராக செல்கிறார். அவருக்கும் பாரதி ரத்னவேல் குழுவுக்குமான உறவு எப்படி அமைந்தது என்பதே கதை. மணல், மண், கனிமங்கள் என அனைத்தையும் அள்ளி வணிகம் செய்து ரோகணூர் என்ற ஊரில் பெரும் மாஃபியா தலைவனாக இருப்பவர் பாரதி ரத்னவேல். அவரை பிடிக்க அரசியல் கட்சிகள் அழுத்தம் தர சிபிஐ களமிறங்குகிறது. ஆனால், இந்த முயற்சியில் ஈடுபட்ட அதிகாரிகள் பலரும் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள். தீயிட்டு கொளுத்தப்படுகிறார்கள். காணாமல் போகிறார்கள். எனவே, சிபிஐயே திணறுகிறது. இந்த நேரத்தில் ஜனா என்ற அதிகாரியை   நியமித்து அண்டர்கவராக இரு என்று கூறுகிறது. அவரும் மெல்ல பாரதி ரத்னவேலின் மாஃபியா குழுவில் சேர்ந்து மெல்ல உயர்கிறார். துறைமுகத்தில் ரவுடியாக இருப்பவர், மெல்ல பாரதி ரத்னவேலின் ரோகணூர் பகுதிக்கு செல்கிறார். அங்கு சென்று அவரைப் பற்றி ஆதாரங்கள் சேகரிக்கத் தொடங்குகிறார். அதாவது, அவர் செய்யும் குற்றங்கள், தொழில்கள் பற்றியவை. பாரதி

பாடநூல்களில் ஜனநாயகத்தன்மை குறைகிறது! - கர்நாடக அரசு பாடநூல்களில் ஏற்படும் புதிய மாற்றம்

படம்
  எழுத்தாளர் தேவனூர் மகாதேவா கர்நாடகத்தில் உள்ள 10ஆம் வகுப்பு பாட நூல்களில் சில எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கப்பட்டு புதிய எழுத்தாளர்கள் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். எப்போதும்போல இதை எப்படி நீக்கலாம், அவருடையதை எப்படி சேர்க்கலாம் என விவாதங்கள் கிளம்பியுள்ளன. இப்போது கன்னடம் மற்றும் சமூக அறிவியல் நூல்களில் இடம்பெற்ற எழுத்தாளர்களைப் பார்ப்போம்.  எழுத்தாளர்களின் படைப்புகளுக்கான மதிப்பீட்டு கமிட்டி தலைவர் எழுத்தாளர் ரோகித் சக்ரதீர்த்தா.  பானன்ஜே கோவிந்தாச்சார்யா (சுகான்சனா உபதேஷா) சமஸ்கிருத கல்வியாளர். இவர் 2020ஆம் ஆண்டில் காலமாகிவிட்டார். 13ஆம் நூற்றாண்டு த த்துவ அறிஞர் ஸ்ரீ மாதவாச்சாரியாவின் பல்வேறு படைப்புகளை மொழியாக்கம் செய்திருக்கிறார். சமஸ்கிருத இலக்கிய படைப்புகளை மொழியாக்கம்செய்து கன்னட இலக்கியத்திற்கு வழங்கியுள்ளார். இந்த வகையில் 150 நூல்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் கன்னடர்கள், துளுவர்கள் ஆகிய இனக்குழுக்களுக்கு இடையில் பிரபலமானவை. புராணங்களை பேசுவது, எழுதுவது ஆகியவற்றில் கைதேர்ந்த எழுத்தாளுமை.  சதாவதானி கணேஷ் (ஷ்ரேஷ்ட பாரதிய சின்டனேகலு) இவர் சமஸ்கிருத கவிஞர், கல்வியாளர்

உண்மையான காதலைக் கண்டுபிடிக்கும் காதலனின் கதை! - லவ் மாக்டைல் - கன்னடம்

லவ் மாக்டைல் - கன்னடம் - 2020 இயக்கம் , வசனம் , தயாரிப்பு : டார்லிங் கிருஷ்ணா இசை - ரகு தீக்ஷித் பால்ய வயதிலிருந்து கல்யாணம் வரை ஒருவன் சந்திக்கும் காதல்கள்தான் கதை . ஆதி தான் நாயகன் . அவர் காரில் மைசூரு செல்லும் வழியில் ஒரு இளம்பெண்ணை சந்திக்கிறார் . அவளிடம் தகராறு செய்பவர்களை கனல் கண்ணனாக மாறி புரட்டி எடுக்கிறார் . அப்புறம் என்ன யூசுவல்தான் . அந்தப்பெண் உங்களுக்கு பெண்தோழி இருக்கா ? என கேட்டு வழிய , அவர் தனது காதல் கதையைச் சொல்லத் தொடங்குகிறார் . படத்தில் நினைத்துப் பார்க்க முடியாத ட்விஸ்டுகள் , சுவாரசியங்கள் என்று எதுவும் கிடையாது . பள்ளியில் படிக்கும்போது தொடங்கும் காதல் , திருமணத்தின்போது நிறைவடைகிறது . எது உண்மையான காதல் என ஆதி உணர்வதுதான் முக்கியமான பகுதி . ஆஹா படத்தில் எல்லோருமே தங்களுக்கான பகுதியை நன்றாக செய்திருக்கிறார்கள் . நாயகன் ஆதி , தனது பகுதியை முதலில் குறும்பாகவும் , பின்னர் திருமணத்திற்கு பிறகான காட்சிகளில் முதிர்ச்சியாகவும் நடித்திருக்கிறார் . ஆதியின் மனைவியாக வரும் நிதிம்மா கொள்ளை அழகு . அழகாக இருந்தால் என்ன சாபமோ , கருப்பை புற்றுநோய் வந்து சாகி

குற்றவாளியும், நல்லவனும் ஒரே உருவத்தில்! - முடிஞ்சா இவனப் புடி!

படம்
முடிஞ்சா இவனப்புடி இயக்கம்: கே.எஸ்.ரவிக்குமார் கதை: டி.சிவக்குமார் ஒளிப்பதிவு ராஜரத்தினம் இசை: இமான் கதை: சத்யம் நேர் வகிடு எடுத்து சீவிய நல்ல மனிதர். இவருக்கு எதிராக ஜெல் போட்டு வாரிய தலை, தொப்பி சகிதமாக ஊர்ப் பெருசுகளின் பணத்தைக் கொள்ளையடிக்கும் சாமர்த்தியசாலி சிவம். இருவரும் ஒருவரா, வேறு வேறா என்று காவல்துறை ஸ்கெட்ச் போட்டு கண்டுபிடிப்பதுதான் கதை. ஆஹா கிச்சா சுதீப் நன்றாக நடித்திருக்கிறார். என்ன அவர் பேச்சில்தான் தடுமாற்றமாக இருக்கிறது. தன்னுடைய குரலில் பேசுகிறாரா அல்லது ரஜினி போல மிமிக்ரி ஏதாவது செய்கிறாரா என்று கண்டுபிடிப்பதிலேயே படம் பாதி போய்விடுகிறது. நித்யா மேனன் இந்த படத்திற்கு என்ன செய்யமுடியுமோ அதை செய்கிறார். பிரகாஷ்ராஜின் போர்ஷன் சிறியதுதான் என்றால் கவனிக்க வைக்கிறார்.    ஐயையோ இதுபோல பணத்தைக் கொள்ளையடிக்கும் படம் என்றால், எப்படி கொள்ளையடிக்கிறார்கள் என்பதை கொஞ்சமேனும் டீட்டெய்லாக சொல்லுவார்கள். இதில் படம் தொடங்கும்போது நடக்கும் கொள்ளையைத் தவிர்த்து வேறெங்கும் சிவத்தின் புத்திசாலித்தனத்திற்கு எந்த சாட்சியும் இல்லை. மேலு