இடுகைகள்

சாண்டில்யன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குப்த ராஜ்யத்தைக் காப்பாற்றப் போராடும் நாயகன்- சாண்டில்யன்

படம்
மெரினாபுக்ஸ் மலைவாசல் - சாண்டில்யன் வானதி பதிப்பகம் ரூ.200 1969 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நாவல் 2016 ஆம் ஆண்டுடன் 36 ஆவது பதிப்பை எட்டியுள்ளது. அப்படி இந்த நூலில என்ன உள்ளது?  சுவாரசியம் தவிர வேறு எதுவும் இல்லை. உடையார் நாவல் வந்தபின்தான் மக்களைப் பற்றிய வரலாற்று புனைவுகள் சிறிதேனும் அதிகரித்து உள்ளன.  முதலில் எழுதிய வரலாற்றுப் புனைவுகள் அனைத்தும் மன்னரின் குடும்பம், அவரின் காதல்கள், சிற்பக்கலை ஆகியவற்றை தாண்டி வந்தாலே பெரிய விஷயம். சாண்டில்யனின் நாவல், குப்தர்களின் வாழ்க்கையைப் பேசுகிறது. குப்தர்களின் மன்னரான ஸ்கந்தகுப்தர் நோயால் நலிவடைந்து கிடக்க, நாட்டின் பொருளாதாரம் காலியாகி கிடக்கிறது. காரணம், ஹூணர்களுடன் செய்த அடுக்கடுக்கான போர்கள். படைக்கு பணம் வழங்க முடியாமல், நாணய மதிப்பையே குறைத்து உத்தரவிட்டு நோய்மையால் தடுமாறுகிறார் ஸ்கந்தகுப்தன்.  அவரின் சித்தி மகன் பூரகுப்தன், வாரிசுரிமை என்பதைத் தாண்டி  சக்ரவர்த்திக்கான எந்த அம்சங்களும் இல்லாதவன். அவனை விட அவனை சக்ரவர்த்தி ஆக்க அவனது தாய் ஆனந்திதேவி முயற்சிக்கிறார். இதற்காக ஹூணர்களிடம் சேர முயற்சிக்கிறார். குப்தர்களின