இடுகைகள்

எல்ஜிபிடி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மகனின் திருமணத்தின்போது அம்மாவின் அந்தரங்கம் வெளியே கசிந்தால்... மஜா மா - மாதுரி தீட்சித்

படம்
  மஜா மா இந்தி மாதுரி தீட்சித், கஜராஜ் ராவ், சைமன் சிங்   அமெரிக்காவில் வேலை பார்க்கும் இளைஞருக்கு காதல் பூக்கிறது. ஆனால் ஒப்பீட்டளவில் காதலியின் பெற்றோர் வசதியானவர்கள். அதேசமயம் பையன் மட்டுமல்லாமல் அவன் மணம் செய்துகொள்ளும் குடும்பம் பாரம்பரியமாக கலாசாரம் கொண்டதாக அமைய வேண்டும் என பெண் வீட்டார் நினைக்கிறார்கள். ஆனால் இந்த நேரத்தில் மணமகனின் அம்மா லெஸ்பியன் என்ற உண்மை தெரிய வருகிறது.. இதனால் நடக்கும் சமூக, குடும்ப களேபரங்கள்தான் கதை. எல்ஜிபிடியினரின் கதையை தைரியமாக எடுத்து இயக்கி அவர்களின் பிரச்னைகளை கூற முனைந்த இயக்குநருக்கு மனமார்ந்த பாராட்டுகள். பல இயக்குநர்களும் பிற்போக்கில் புராணம், இட ஒதுக்கீடு, வன்முறை என செல்லும்போது சமூகத்தில் சிறுபான்மையினராக உள்ளவர்களின் உணர்ச்சிகளை, வாழ்க்கையை சொல்ல முயன்றிருக்கிறார் மஜா மா இயக்குநர். இந்த படமே, மாதுரி தீட்சித்தின் நடிப்பை நம்பியுள்ளது. அவரும் தனது பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார். அப்பா, மகன், மகள் என தான் பலமென நம்பிய குடும்ப உறுப்பினர்கள் பலரும் அவர்களின் சுயநலத்தை மட்டுமே மனதில் வைத்து நடந்துகொள்வதைப் பார்த்து விரக்தி கொள்க

சீரியல் கொலைகாரர்கள் குழந்தைகளை தேர்ந்தெடுப்பது ஏன்?

படம்
  எப்படி பாதுகாப்பாக இருப்பது? சீரியல் கொலைகார ர்களைப் பொறுத்தவரை இருட்டான பார்க்கிங், தனியாக நடைப்பயிற்சி செய்பவர்கள் என்று பார்த்துத்தான் பெண்களை தாக்குவார்கள். இதனால் பெரும்பாலான பொது இடங்களில் உடற்பயிற்சிகளை செய்யலாம். முடிந்தவரை தற்காப்பு பயிற்சிகளை கற்றுக்கொள்வதும் நல்லது. முந்தைய கட்டுரையில் சொன்னது போல உடல் வலுவான பெண்களை சீரியல் கொலைகாரர்கள் தேர்ந்தெடுப்பதில்லை. காரணம், அவர்களை கையாள்வது கடினம் என்பதுதான்.  ஆண்களை கொல்லுவது எப்போதுமல்ல பெரும்பாலும் ஆண்களை மட்டுமே கொல்லுவது என்பது அனைத்து சீரியல் கொலைகார ர்களின் விஷயத்திலும் நடைபெறுவதில்லை. ஒரினச்சேர்க்கையாளர்கள் இந்த விவகாரத்தில் அதிகம் கொல்லப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் ஒரினச்சேர்க்கையாளர்கென தனி கிளப்புகள் செயல்படுகின்றன. இங்கு செல்லும் ஒருவர் எளிதாக தனக்கு தேவையான இணையை தேர்ந்தெடுக்க முடியும். மத ரீதியான நாடுகளில் தன்பாலின ஈர்ப்பு சட்டப்படி தவறு என்று கூறலாம். ஆனால் வளர்ந்த உலக நாடுகள் இதனை ஏறத்தாழ ஏற்றுக்கொண்டு விட்டனர்.  தன் பாலின ஈர்ப்பாளர்களை எளிதாக அழைத்துச்சென்று அவர்களின் வீட்டிலேயே கொன்று விட்டு சென்ற சீரியல் கொலைகார

உலக நாடுகள் வெளியேறியவுடனே மாற்றுப்பாலினத்தவரை வேட்டையாடுவதே தாலிபனின் திட்டம் ! - நேமத் சதத்

படம்
                நேமத் சதத் அமெரிக்க எழுத்தாளர் .      ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர் . தனது ஓரினச்சேர்க்கை தன்மையை வெளிப்படையாக அறிவித்த முதல் ஆப்கானியவர் இவர்தான் . 2013 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்கன் பல்கலைக்கழகத்தில் ஓரினச்சேர்க்கையாளர் என்று உண்மை தெரிந்ததால் உடனே ஆசிரியர் பணியை விட்டு விலக்கப்பட்டார் . தற்போது ஆப்கானிஸ்தானிலுள்ள மாற்றுப்பாலினத்தவர்களுக்காக பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார் . ஆப்கானிஸ்தானிலுள்ள மாற்றுப்பாலினத்தவர்களுக்கு எப்படி உதவப்போகிறீர்கள் ? நான் ஆப்கனிலுள்ள 125 மாற்றுப்பாலினத்தவர்களை பட்டியல் போட்டு வைத்துள்ளேன் . அவர்களுக்கு அமெரிக்காவில் அடைக்கலம் தருவதற்கான விசாக்களை ஏற்பாடு செய்து தரவுள்ளேன் . இதனை இரு வழிகளில் செய்ய உள்ளேன் . முதலாவது ஆப்கனிலுள்ள தன்னாரவ தொண்டு நிறுவனத்தில் மூலம் மாற்றுப் பாலினத்தவர்களை அங்கிருந்து அனுப்பி வைப்பது . மற்றொன்று நாடாளுமன்ற உறுப்பினர் , ஸ்காட் பீட்டர் மூலம் சட்டத்துறையில் பேசி மாற்றுப் பாலினத்தவர்கள் பாதுகாப்பாக மீட்பது என முடிவு செய்துள்ளேன் . இரண்டு வாரங்களில் அத்தனை பேர்களையும

காதல் அகராதியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வார்த்தைகள் என்னென்ன?

படம்
            இன்று உலகில் புழங்கும் காதல் வார்த்தைகளை அறிவோமா ? 143 முதல் பிளேம்ஸ் வரை பல்வேறு காதல் வார்த்தைகளை காதல் உலகம் பார்த்து வந்துதது . இப்போது என்னென்ன வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள் என்பதை பார்ப்போமா ? ஃபிளியாபேக்கிங் டிவி ஒன்றில் ஒளிப்பரப்பாகும் ஃபிளியாபேக் சீரிஸின் பெயர் . மோசமான காதல் வாழ்க்கையைக் குறிக்க இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள் . கோட் கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் சிறந்த காதல் பார்ட்னரை குறிக்க இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள் . அபோகலிப்சிங் நமது வழியில் வரும் எந்த உறவையும் கைவிடாமல் அதனை கடைசி உறவாக நினைத்து நடந்துகொள்வது . கோவிட் காலத்தில் பலரும் கற்றுக்கொண்ட விஷயம் இது . பியூ / பூ / பே ஆண்டுதோறும் சிறியதாகிக்கொண்டு செல்லும் பார்ட்னரின் செல்லப்பெயர் . காதலிலிருந்து திருமண வாழ்க்கைக்கு சென்றாலும் அப்படியே பின்பற்றலாம் தப்பில்லை . எமோ சின்ன பிரச்னை என்றாலும் கரைந்தழுது மதிமுக வைகோ போல நடந்துகொள்பவர்களை இந்த வகையில் சேர்த்துக்கொள்ளலாம் . எல்லாவற்றிலும் கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக இருக்கும் நபர்களை ஹேண்ட

யூத இனத்தைச் சேர்ந்த மூன்று போராட்டக்காரர்கள்! இன ஒழிப்புக்கு எதிர்ப்பு, மரங்களைக் காக்கும் முயற்சி, எல்ஜிபிடியினருக்கான கஃபே!

படம்
                  தாலியா வுடின் இவர் சூழல் மற்றும் சமூக நீதிக்காக போராடி வருகிறார் . ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார் . தற்போது இவர் மரத்தில் வசித்து வருகிறார் . இங்கிலாந்து அரசு அதிவேக ரயில் சேவைக்காக இருப்புப்பாதை அமைக்கவிருக்கிறார்கள் . காலன் வேலி எனும் அந்த இடத்தில் பிற சூழலியலாளர்களுடன் இணைந்து தொன்மையான மரங்கள் வெட்டப்படுவதை தடுக்கும் முயற்சியில் தாலியா ஈடுபட்டுள்ளார் . லண்டனுக்கு வெளியிலுள்ள இந்த இடத்தில் கடந்த ஐந்து மாதங்களாக மரங்கள் வெட்டப்படுவதை தடுத்து வருகிறார்கள் . தாலியா வுடனின் பெற்றோர் இருவருமே சூழலியல் போராட்டக்கார ர்கள் . இதனால் இளம் வயதில் சூழல் தொடர்பான அக்கறை தாலியாவுக்கு வந்துவிட்டது . சூழலியல் தொடர்பான அக்கறை தனியாக எதையும் கற்பது போல இல்லை . அது என்னுடைய வாழ்வினூடே இருந்து வந்தது . நான்குவயதில் தாலியாவின் தந்தை நுரையீரல் புற்றுநோய்க்கு பலியானார் . இத்தனைக்கும் அவர் புகைப்பழக்கம் இல்லாதவர் . இதனால் தாலியா காற்று மாசுபாடு பற்றிய கவனம் கொண்டார் . இங்கிலாந்தில் மட்டும் 64 ஆயிரம் பேர் காற்று மாசுபாட்டிற்கு பலியாகிறார்கள் . இவரத

மாற்றுப்பாலினத்தவர்கள் பற்றி கிளிஷேக்கள் மாறவேண்டும்! - விவேக் தெஜூஜா

படம்
நேர்காணல் விவேக் தெஜூஜா ஓரினச்சேர்க்கையாளர் பற்றி நிறைய சுயசரிதைகள் இன்று வருகின்றன. இதன் பிரயோஜனம் என்ன? மக்களின் சிந்தனைகளை மாற்றும் என நம்புகிறீர்களா? டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பு 377 சட்டத்திருத்தம் பற்றி வந்ததும் நான் எழுதிய நூல் இது. ஆனால் இதனை பதிப்பிக்க பதிப்பாளர்களை அணுகியபோது, அவர்கள் இதில் ஆபாசமான கிராபிக் படங்கள் உள்ளன என்று கூறிவிட்டனர். நான் அடுத்த பதிப்பாளரிடம் நகர்ந்துவிட்டேன். இப்படியே நிராகரிப்புகளாக சென்று கொண்டிருந்தது . இன்று நீங்கள் கேட்டதுபோல் சொற்களைத்தான் நான் அதிகம் கேட்கிறேன். ஆனால் இன்று இவை இம்முறையில் அதிகம் பேசப்பட்டாலும், நாளை நிலைமை மாறும். சமூகத்தில் மாற்றுப்பாலினத்தவரின் குரலும் கேட்கும். அதற்கு நூல்கள் முக்கியமான வழியாக கருதுகிறேன். நீங்கள் உங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட நிலைமைகள் குறித்து எழுதியிருக்கிறீர்கள். அதாவது உங்களது பாலினத் தன்மையை ஏற்காதது பற்றி...  இன்று நிலைமை மாறியிருக்கிறதா இல்லையா? நான் என் குடும்பத்தை விட்டு பதினெட்டு வயதில் வெளியேறினேன். அப்போது எனக்கு பிடித்த ஒன்றை மறுக்கிறார்களே என்று கடுமையான வெறுப்பும் விரக்தியும்

LGBTயினரை ஆதரிக்கும் போஸ்ட்வானா!

படம்
theconversation.com ஓரினச்சேர்க்கையாளர்களை ஆதரிக்கும் போஸ்ட்வானா! அண்மையில் போஸ்ட்வானா நாட்டு உயர் நீதிமன்றம், ஓரினச்சேர்க்கையாளர்களை குற்றவாளிகளாக்கும் சட்டத்தை அகற்றியுள்ளது. இந்த தீர்ப்பு வரும் ஜூன் முதல் அமலுக்கு வரவிருக்கிறது. கென்யாவில் இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, வரும் மே மாதம் வெளியிடப்பட விருக்கிறது.  காலனிய ஆட்சிகாலச் சட்டப்படி, ஓரினச்சேர்க்கையாளர்களின் உறவு, சட்டம் 164 படி தண்டனைக்குரிய குற்றம். இதற்கு ஏழு ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்க முடியும். இயற்கைக்கு புறம்பான செயல்பாடுகள் பிரிவில் ஐந்து ஆண்டுகள் தண்டனை விதிக்க முடியும்.  போஸ்ட்வானாவின் சட்டங்கள் அப்படியே இந்தியச்சட்டங்களைப் போன்றதே. 1830 ஆம் ஆண்டு தாமஸ் பாபிங்டன் மெக்காலே, இந்திய சட்ட கமிஷன் மூலம் ஓரினச்சேர்க்கை சட்டத்தை இயற்றினார். இந்தியா மற்றும் போஸ்ட்வானா சட்டங்கள் இங்கிலாந்து மன்னர் எட்டாம் ஹென்றியின்(1533) சட்டத்தைப் பின்பற்றி இயற்றப்பட்டது. 1960 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற போஸ்ட்வானா, 2003 ஆம் ஆண்டுதான் சட்டங்களை நவீனப்படுத்த தொடங்கியது.  பிரிட்டிஷின் காலனி நாடுகளாக இருந்த பல்வேறு ந