சீரியல் கொலைகாரர்கள் குழந்தைகளை தேர்ந்தெடுப்பது ஏன்?

 





எப்படி பாதுகாப்பாக இருப்பது?


சீரியல் கொலைகார ர்களைப் பொறுத்தவரை இருட்டான பார்க்கிங், தனியாக நடைப்பயிற்சி செய்பவர்கள் என்று பார்த்துத்தான் பெண்களை தாக்குவார்கள். இதனால் பெரும்பாலான பொது இடங்களில் உடற்பயிற்சிகளை செய்யலாம். முடிந்தவரை தற்காப்பு பயிற்சிகளை கற்றுக்கொள்வதும் நல்லது. முந்தைய கட்டுரையில் சொன்னது போல உடல் வலுவான பெண்களை சீரியல் கொலைகாரர்கள் தேர்ந்தெடுப்பதில்லை. காரணம், அவர்களை கையாள்வது கடினம் என்பதுதான். 

ஆண்களை கொல்லுவது எப்போதுமல்ல

பெரும்பாலும் ஆண்களை மட்டுமே கொல்லுவது என்பது அனைத்து சீரியல் கொலைகார ர்களின் விஷயத்திலும் நடைபெறுவதில்லை. ஒரினச்சேர்க்கையாளர்கள் இந்த விவகாரத்தில் அதிகம் கொல்லப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் ஒரினச்சேர்க்கையாளர்கென தனி கிளப்புகள் செயல்படுகின்றன. இங்கு செல்லும் ஒருவர் எளிதாக தனக்கு தேவையான இணையை தேர்ந்தெடுக்க முடியும். மத ரீதியான நாடுகளில் தன்பாலின ஈர்ப்பு சட்டப்படி தவறு என்று கூறலாம். ஆனால் வளர்ந்த உலக நாடுகள் இதனை ஏறத்தாழ ஏற்றுக்கொண்டு விட்டனர். 

தன் பாலின ஈர்ப்பாளர்களை எளிதாக அழைத்துச்சென்று அவர்களின் வீட்டிலேயே கொன்று விட்டு சென்ற சீரியல் கொலைகாரர்கள் உண்டு. இந்த விஷயத்தைப் பொறுத்தவரை அவர்களும் விலைமாதுக்களைப் போன்றவர்கள்தான். காவல்துறையும் இவர்களைப் போன்றவர்களை பெரிதாக கண்டுகொள்வதில்லை. 

ஓரினச்சேர்க்கையாளர்கள் தங்களைப் போலவே உள்ளவர்களை கொலை செய்வதை விரும்புவதில்லை. இவர்கள் பெண்கள் அல்லது சாதாரண ஆண்களை கொலை செய்ய நினைக்கிறார்கள். இதற்கு காரணம், இயல்பான உலகில் இவர்கள் எண்ணத்திற்கு எந்த மதிப்பும் இல்லாமல் தோற்றுப்போய் இருப்பதுதான். இதனால் பெண்களை அல்லது ஆண்களை கொல்வதன் மூலம் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக நினைக்கிறார்கள். 

 குழந்தைகள் பலியாவதற்கு காரணம்!

முப்பது வயது பெண்ணை மிரட்டி பணிய வைப்பதை விட எட்டுவயது சிறுவனை எளிதாக மிரட்டிவிடமுடியும். மேலும் இவர்களை எளிதாக கடத்திவிட முடியும். வீட்டிற்கு வெளியில், விளையாட்டு மைதானம், பள்ளி என பல்வேறு இடங்களில் சிறுவர்கள் கிடைப்பார்கள். 

சீரியல் கொலைகாரர்களுக்கும், பெடோபிலோ எனும் குழந்தைகளை பாலியல் ரீதியாக பயன்படுத்துபவர்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. இவர்கள் குழந்தைகள் உண்மையை வெளியே சொல்லாதவரை அவர்களை கொல்ல நினைப்பதில்லை. சீரியல் கொலைகாரர்கள், சிறுவர்களை கடத்தும் நோக்கமே அவர்களைக் கொல்வதுதான். இதில் கூடுதலாக அவர்களை சித்திரவதை செய்து, வலியில் அலறுவதை ரசித்துக் கொல்வார்கள். 

உதாரணமாக வேய்ன் வில்லியம்ஸ் என்பவர், சிறுவர்களை, இளம் வயதினரை கடத்திக் கொன்று வந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அவர் கொன்றவர்களின் உடல்கள் கிடைக்க, காவல்துறையின் கவனம் இந்த வழக்கில் திரும்பியது. இதனால் சமூகத்தில் ஒதுக்கப்பட்ட விலைமாதுக்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரை குறிவைத்து கொன்றார். இதனால் அவர் பிடிபடுவது தள்ளிப்போனது. தனது ஆசையையும் கைவிடாமல் அவர் நிறைவேற்றிக்கொண்டார். 

தங்களது விருப்பமான இரை கிடைக்காதபோதுதான் பெரும்பாலானோர் குழந்தைகளையும், இளம் வயதினரையும் தேர்ந்தெடுத்து கொல்கிறார்கள். கிடைக்கிற வாய்ப்பை ஏன் இழக்க வேண்டும் என்பதுதான் இதன் பொருள். 

பாட் ப்ரௌன்.





  

கருத்துகள்