இளம் வயதினருக்கான நூல்கள் 1993-2000
தி கிவ்வர்
லூயிஸ் லோவ்ரி
பனிரெண்டு வயதான ஜோனாஸ் பிரச்னை, வெறுப்பு, வலி இல்லாத உலகத்தில் வாழ்ந்து வருகிற பாத்திரம். மெல்ல அவனுக்கு நினைவுகள் கிடைக்கும்போது அவனது வாழ்க்கை மாறுகிறது. வண்ணமும், காதலும் இல்லாத வாழ்க்கை பல கேள்விகளை எழுப்புகிறது. இதனை அவன் அறிந்துகொள்வதுதான் நாவலின் கதை.
1997
எல்லா என்சேன்டட்
கெயில் கார்சன் லெவைன்
ஒழுக்கமாக வாழ வேண்டும் என்று கட்டுப்பாடுடன் வளர்க்கப்படும் எல்லா, எப்படி தன்னைத்தானே உணர்ந்துகொண்டு வாழ்கிறாள், தனக்கான அடையாளத்தை கண்டுபிடிக்கிறாள் என்பதுதான் கதை.
1998
ஹோல்ஸ்
லூயிஸ் சாச்சர்
க்ரீன் லேக் எனும் பகுதியில் தவறு செய்த சிறுவர்களை அடைத்து வைத்துள்ளனர். ஸ்டேன்லி யெல்னட்ஸ் என்ற பதினான்கு வயது சிறுவன், தான் செய்யாத தவறுக்கு அங்கு தண்டனை பெற்று வருகிறான். அவனும் நண்பர்களும், அங்கிருந்து தப்பிக்க குழி ஒன்றை தோண்டுகின்றனர். அதன் வழியாக அவர்கள் அங்கிருந்து தப்பினார்களா இல்லையா என்பதுதான் கதை.
1999
ஆங்கஸ் தோங்க்ஸ் அண்ட் ஃபுல் ஃபிரான்டல் ஸ்னாக்கிங்
லூயிஸ் ரென்னிசன்
இளைஞர்களுக்கான கிளாசிக் நூல் இது. பதினான்கு வயது ஜார்ஜியாவின் காதல், பள்ளி வாழ்க்கையை பேசுகிறது நூல். இளம் வயதில் ஒருவர் சந்திக்கும் சவால்கள், அதனை எப்படி சமாளித்து வருகின்றனர் என்பதுதான் இந்த நூலின் முக்கியமான அம்சம்.
1999
மான்ஸ்டர்
வால்டர் டீன் மையர்ஸ்
பதினாறு வயதான ஸ்டீவ் கொலை செய்த குற்றத்திற்காக விசாரிக்கப்படுகிறான். இந்த கொலைக்கு பின்னணியில் உள்ள காரணங்களைத் தேடுகிறது நாவல். அமெரிக்காவில் உள்ள கருப்பினத்தவர்களின் வாழ்க்கை, இனவெறி ஆகியவற்றைப் பற்றி பேசுகிற நூல் இது.
Time magazine
கருத்துகள்
கருத்துரையிடுக