குற்றவாளியைப் பற்றிய தகவல்களை சேகரிப்பது எப்படி?
நீதி கிடைக்குமா?
தனிப்பட்டவருக்கு, சமூகத்திற்கு என நீதி கிடைக்க கொலை வழக்குகளில் தாமதமாகும். குறிப்பிட்ட வழக்குக்கு என சில மாதங்களை ஒதுக்கி வேலை செய்வார்கள். மற்றபடி ஏராளமான வழக்குகள், குற்றங்கள் நகரத்தில் நடக்கும்போது குறிப்பிட்ட வழக்கில் மட்டும் கவனம் செலுத்துவது என்பது கடினம். பா.ரா சொல்வது போல பல்வேறு வழக்குகளைக் கூட இன்ஸ்பெக்டர் கையாள முடியும். அந்த நேரத்தில் அந்த வழக்கு என எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இதில் குற்றங்களை நிரூபிப்பது மிகவும் கடினம். சாட்சிகள் பிறழ்வு , சாட்சிகளே இல்லாமல் இருப்பது, ஆதாரங்களில் அழிவது, பல்வேறு வழக்குகளை இணைத்து பார்க்காமல் வழக்குகளை பதிவது என நிறைய பிரச்னைகள் உள்ளன.
குற்றவாளியைப் பற்றிய தடயங்கள்
1940-1956 ஆம் ஆண்டு காலகட்டத்தில் நியூயார்க் நகரத்தில் வெடிகுண்டு பீதி நிலவியது. அங்கு தி மேட் பாமர் என்ற மர்ம நபர், மரப்பெட்டியில் குண்டுகளை நிரப்பி கூடவே குறிப்பு ஒன்றையும் எழுதி வைத்துவிட்டு சென்றிருந்தார். காவல்துறை வேகமாக செயல்பட்டு குண்டுகளை வெடிப்பதற்கு முன்பே கையகப்படுத்தியது. குறிப்பில் கான் எடிசன் க்ரூக்ஸ் இது உனக்காகவே என்று எழுதியிருந்தது. இதில் ஒரு குண்டு வெடித்து ஆறு பேர் காயம்பட்டனர். இதனால் ஊடகங்கள் மூலமாக மக்கள் கருத்து உச்சம் பெற்றது. குண்டு வைத்த குற்றவாளியை பிடித்தே ஆக வேண்டும் என கோஷம் போடத் தொடங்கினர். காவல்துறை இதற்கென தனி உளவியலாளர் ஒருவரை, பணிக்காக அழைத்தது. அவரும் பல்வேறு தடயங்களைப் பார்த்துவிட்டு குற்றவாளி மத்திய வயது கொண்டவர் எடிசன் கம்பெனியில் வேலைபார்த்த முன்னாள் பணியாளராக இருக்கலாம். ஏன், அவர் இப்படிதான் உடை அணிவார் என்ற வரையில் தகவல்களை சொன்னார்.
அவர்பெயர்தான் டாக்டர் ஜேம்ஸ் ஏ ப்ரஸ்ஸல். இவர் குற்றவாளிகளைப் பற்றிய தகவல்களை ஆவணப்படுத்திய முதல்வர். போலீசார் இதை வைத்து ஜார்ஜ் மெடெஸ்கி என்பவரை பாத்ரூமிலேயே மடக்கி பிடித்து கைது செய்தது. அதிரடி காட்டி கைது செய்தாலும் அவர் உடை அணியக்கூட நேரம் கொடுத்தது.
குற்றவாளி எழுதி வைத்திருந்த குறிப்பு, அவர் அமெரிக்கர் அல்ல என்பதை அடையாளம் காட்டியது. அவர் வெளிநாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு குடியேறியவர். அவர் வெடிகுண்டுகளை செய்கிறார் என்றால் குண்டு செய்ய 101 வழிகள் என்ற நூலை மணிமேகலை பிரசுரத்தில் வாங்கி படிக்கலாம என யோசிக்கும் அளவுக்கு மூளைக்காரர். சுயமாக கற்றால் மட்டும்தான் இப்படியெல்லாம் விதவிதமாக யோசிக்க முடியும். வேற்று நாட்டிலிருந்து அமெரிக்காவற்கு குடியேறி வந்தவர், எங்கு வசிப்பார்கள் என ப்ரூஸ்ஸ்ல் கண்டுபிடித்தார்.
டபுள் பிரெஸ்டட் சூட் என்பது அன்று வசதியானவர்கள் அணியும் உடையாக இருந்தது. அதாவது ஒரு ஜென்டில்மேனுக்கான உடை. மெடெஸ்கி எங்கே தங்கியிருப்பார் என்று தெரிந்தாலும் அவர் தனது சகோதரிகளுடன் தங்கியிருப்பார் என்று மருத்துவர் கூறினார். ஏன்? செலவுகளைக் குறைக்கத்தான்.
pat brown
கருத்துகள்
கருத்துரையிடுக