குற்றங்களை செய்வதில் முதலிடம் யாருக்கு?












குற்றங்களை ஆவணப்படுத்துதல்


குற்றங்களை ஆவணப்படுத்துவது என்பது கடினமானது. சில வழக்குகள் மிக நீண்டு பல ஆண்டுகளாக கோப்பில் இருக்கும். குற்றவாளிகளை பிடிக்கவே முடியாது. இதற்கு காரணம், வழக்குகளை காவல்துறையினர் சரியானபடி இணைத்து பார்க்காத துதான். இதன்படி பார்த்தால் முந்நூறு பேர்களை கொன்ற கொலம்பியாவைச் சேர்ந்த பெட்ரோ லோபஸ் முன்னாடி வருவார். கொலைகளை செய்த தில் இவருக்கு தங்கப் பதக்கம்தான் தரவேண்டும். இதற்கடுத்து,  ஹென்றி லீ லூகாஸ், ஓட்டிஸ் ஆகிய இருவரும் இருநூறு பேர்களை கொன்று இரண்டாவது இடத்தில் இருக்கிறார்கள். இவர்களை காவல்துறை விசாரித்தபோது, தாங்கள் ஏழு பேர்களை மட்டுமே கொன்றதாக சொன்னார்கள். அடித்து கேட்டாலும் அப்படித்தாங்க சார் என்றார்கள்.  

ஜெர்மனியைச் சேர்ந்த ப்ரூனோ லுட்கே, ரஷ்யாவைச் சேர்ந்த ஆண்ட்ரேய் சிக்காட்லோ முறையே 85, 52 என ஆட்களை போட்டுத்தள்ளியவர்கள். இவர்களுக்கு அடுத்து அமெரிக்காவைச் சேர்ந்த ஜெரால்டு ஸ்டானோ வருகிறார். இவர் 41 பேர்களை கொன்றார். இவருக்கு அடுத்து தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந மோசஸ் சிட்கோல் என்பவர் 38 பேர்களைக் கொன்றுள்ளார். இவர்களுக்கு அடுத்துதான் கேரி ரிட்ஜ்வே, ஜான் வேய்ன் கேசி ஆகியோர் வருகிறார்கள் 

இவர்களை வேகமாக பிடித்திருந்தால் கொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை கொஞ்சம் குறைத்திருக்கலாம். வழக்கு விசாரணை முறைகளை சற்று மாற்றி புதுமையாக யோசிப்பதை முயலும்போது மாற்றம் நடக்கும். 

வித்தியாசமான கொலைகாரர்

கீத் ஜெஸ்பர்சன் என்பவர்தான் வித்தியாசமான கொலைகாரர். சிரிச்ச மூஞ்சிக்கார கொலைகாரர். இவர் தான் செய்த கொலைகளைப் பற்றி நாட்டிலுள்ள முக்கியமான குற்றங்களை ஆவணப்படுத்துபவர்களுக்கு கடிதம் எழுதுவார்.அதில் பூனையின் மியாவ் என்பதை எழுதி விட்டு தனது கொலைச்சம்பவங்களை எழுதுவார். மேலும், அதில் கீத் தனது முகத்தையும் வரைவார். 

கவர்ச்சியான கொலைகாரர்

வேறு யாரை சொல்ல முடியும்? டெட் பண்டியை கூறலாம். இவரைப் பார்த்தவர்கள், என்ன செய்தார் என்று அறிந்தவர்கள் கூட டெட்டை கவர்ச்சியானவர் என்று கூறியிருக்கிறார்கள். 


வசீகரமான கொலைகாரர்

பால் பெர்னார்டோ, ஹோமோல்கா என்ற ஜோடியை இப்படி கூறலாம். பால் பெர்னார்டோ பார்த்தாலே கண்களை எடுக்க முடியாத அழகு கொண்டவர். பிராட் பிட் போன்ற சாயல் கொண்டவர். இதனால்தான் இவரைத் தேடி கர்லா ஹோமோல்கா என்ற காதலி வந்தார். பிறகு பாலோடு சேர்ந்து நிறைய பள்ளிச்சிறுமிகளை சித்திரவதை செய்து கொன்றார். கனடாவில் முக்கியமான கொலைகார ஜோடி இது. 

வசீகரத்தை கொலைகார ர்களிடம் எப்படி எதிர்பார்ப்பது? பெரும்பாலான ஆட்கள் மிகவும் சுமாராகவே இருப்பார்கள். குமுதாவைத் தேடும் சுமார் மூஞ்சி குமார்கள்தான். இன்னும் சிலர் மிகவும் கொடூரமான சூனியக்காரி லுக்கில் போஸ் கொடுத்து போட்டோ எடுத்திருக்கிறார்கள். 

மனிதநேயமில்லாத சீரியல் கொலைகாரர்கள்

கொலை என்பதை எந்த குற்றவுணர்ச்சியுமே இல்லாமல்தான் சீரியல் கொலைகாரர்கள் செய்கிறார்கள். இதில் டாப் பொசிஷனை யாருக்கு கொடுப்பது?  இந்த வகையில் சிறுவர்களை கொல்பவர்களையும், மனித இறைச்சியை சாப்பிடுபவர்களையும் உள்ளே கொண்டு வரலாம். ஒருவரைக் கொன்று சாப்பிடுவது என்பதை நிச்சயம் இறுகிய மனது கொண்ட ஒருவர்தான் செய்ய முடியும். இதற்கு எடுத்துக்காட்டாக  கொலைகார ஜோடியைப் பார்ப்போம். 

1970களில் லாரன்ஸ் பிட்டேகர், ராய் நோரிஸ் என்ற இருவரும் இளம் பருவ சிறுமிகளை பொய் சொல்லி தங்களது வேனில் கடத்துவார்கள். இவர்களை உள்ளே கொண்டு வந்ததும் ஆடியோர ரெக்கார்டரை ஆன் செய்து விடுவார்கள். இது அச்சிறுமி வல்லுறவு செய்யப்பட்டு உடல் உறுப்புகளை கோடாரியால் வெட்டப்படும்வரை சுழன்றி அவர்களின் அலறல்களை பதிவுசெய்யும்.  இந்த கொலைகார ர்களை மனிதநேயமில்லாதவர்கள் என்று உறுதியாக கூறலாம். 


பாட் ப்ரௌன்


கருத்துகள்