ஆழ்மன சக்தியை குற்றங்களை கண்டுபிடிக்க பயன்படுத்துகிறார்களா?

 






குற்றங்களை ஆவணப்படுத்துபவரின் வாழ்க்கை


குற்றங்களை ஆவணப்படுத்துபவரின் வாழ்க்கை என்பது இயல்பானதுதான். அவர்களுக்கும் குடும்பம், குழந்தைகள் உண்டு. சாதாரண மனிதர் படத்திற்கும், பார்ட்டிக்கும் செல்வதும் போன்ற பழக்கங்களை இவர்களிடம் எதிர்பார்க்க வேண்டாம். குற்றங்களை ஆவணப்படுத்துபவர், அவர்களுக்கேயான சில நண்பர்கள் குழுவை தேர்ந்தெடுத்து வைத்துக்கொண்டு பேசுவார்கள், சுற்றுலா செல்வார்கள். மற்றபடி பிறரைப் போல வாழ்க்கை இயல்பாகத்தான் இருக்கும். 

வீட்டிலுள்ள நூலகத்தில் சுந்தர ராமசாமி, நகுலன், ஜெயமோகன், எஸ்.ரா, போகன் சங்கர் ஆகியோர் ஒரு வரிசையில் இருந்தால் இன்னொரு வரிசையில் குற்றவாளிகளைப் பற்றிய ஏராளமான நூல்கள் இருக்கும் மேசை டிராயரில் கொலைகளைப் பற்றிய புகைப்படங்கள் தகவல்கள், பைல்கள் இருக்கும். இதுதான் வேறுபாடு.  பொதுவாக வேலைகளைப் பற்றி பேசுவது குறைவாகவே இருக்கும். நகைச்சுவை என்றாலும் கூட அவல நகைச்சுவையாகவே அமையும். சிலசமயங்களில் இதனைக் கேட்பவர்களுக்கு அதிர்ச்சியாகவே இருக்கும். ஆனால் தினசரி அதிர்ச்சியை சந்திப்பவர்களுக்கு இது பெரிதாக தோன்றாது. 

ஆழ்மன சக்தியை பயன்படுத்தலாமா

அப்படி ஒரு சக்தியை குற்றங்களை ஆவணப்படுத்துபவர் கொண்டிருந்தால் எதற்கு கொலைக்குற்றங்களை கஷ்டப்பட்டு ஆவணப்படுத்தவேண்டும்? கொலைகாரர், மயிலாப்பூரில் உள்ள வடுகு தெருவில் உள்ள அபார்ட்மென்டில் இருக்கிறார். அவரது பெயர் ராவில் தொடங்கும். கொலை நடந்தபோது கெனித் பார்க்கர் சட்டையும், ஃபேஷன் கம்ஃபோர்ட் ஜீன்சும் அணிந்திருந்தார் என்று எளிதாக தெரிந்துவிட்டால் எதற்கு கோப்புகளை கட்டிக்கொண்டு அழவேண்டும்?

மேலும் இந்த சக்தியை ஒருவர் கொண்டிருந்தால் எளிதாக அம்பானிக்கு போட்டியாக சம்பாதித்து விட முடியுமே?  கொலையாளியை குற்றங்களை ஆவணப்படுத்துபவர் தடயங்களின் மூலம்தான் கண்டுபிடிக்கிறார். இதற்காக மூளையில் வியர்வை சிந்த உழைக்கிறார் என்பதே உண்மை. ஆனால் இதனை குறுகிய நோக்கில் பார்ப்பவர்கள், உடனே ஏதோ ஜிம்மிக்ஸ் வேலைகளை செய்து பிரைம் ஃபோகஸ் சிஜி வேலைகள் செய்திருக்கிறார் என கிளப்பிவிடுகிறார்கள். இதெல்லாம் உண்மை கிடையாது. 

கல்வியா, வரமா

வரம் என்று ஏதும் கிடையாது. குற்றங்களை ஆவணப்படுத்துவதை கல்வி வழியாக எளிதாக கற்க முடியும். இதெல்லாம் அடிப்படைதான். அடோப் போட்டோஷாப் வகுப்புகளில் ஒருவர் ஒரு கருவியை எப்படி பயன்படுத்துவது என கற்கிறார். ஆனால் அதனை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என மாணவர் பின்னாளில் அறிந்துகொள்ளும்போது இதில் வல்லுநராக மாறுவார். எப்படி இன்போகிராப் என்றால்  ஆர். கார்த்திகேயன் என்ற கிராபிக் டிசைனர் பெயர் எப்படி பிரபலமானது? அதற்கு காரணம் அவர் ஃபவுண்டன் இங்க், பட்டம் என இதழ்களில் தான் கற்ற விஷயங்களை கூர்மையாக பயன்படுத்தியதுதான். இதுபோலத்தான் குற்றங்களை கண்டுபிடிக்க மனிதர்களின் உளவியல், பின்னணி காரணங்களை சரியாக ஊகிக்க வேண்டும். இதற்கெல்லாம் அடிப்படையாக குற்றங்களை ஆவணப்படுத்துவதில் உங்களுக்கு ஆர்வம் தேவை. அப்படி இல்லாதபோது அதனை படித்திருந்தாலும் கூட தக்க நேரத்தில் பயன்படாது. 

பாட் ப்ரௌன்







கருத்துகள்

பிரபலமான இடுகைகள்