கொலையாளியை பிடிக்க உதவும் டிஎன்ஏ!

 







சீரியல் கொலைகாரர்களை  பிடிக்க முடியாதா?

பிடிக்க முடியாது என்று இல்லை. ஒருவர் செய்தாரா என்று உறுதி செய்தால்தானே அவரைப் பிடிக்க முடியும். இதனால் மதிப்புக்குரிய காவல்துறையினர் சீரியல் கொலைகார ர்களை உடனே வலைவீசி பிடிக்க முடிவதில்லை. 

ஒருவர் கொலை செய்திருக்கிறார் என்றால் குறைந்தபட்சம் அவரை சந்தேகப்படக்கூட சில காரணங்கள் ஏதாவது தேவை. எதுவுமே இல்லாமல் ஒருவரை எப்படி சந்தேகப்பட்டு கைது செய்யமுடியும். இதில் சீரியல் கொலைகார ர்கள் சற்று புத்திசாலிகள்தான். முந்தைய பகுதியில் போலீஸ்காரர் வேலைக்கு போகும் வழியில் பெண்களை பிடித்து கட்டி வைத்துவிட்டு மாலையில் வந்து வல்லுறவு செய்வதை கூறியிருந்தோம் அல்லவா? இதனை அலிபி என்பார்கள். நான் இந்த கடத்தல், கொலை நடந்த நேரம் இங்கு இருந்தேன் என ஆதாரத்தை அவர்கள் பதிவு செய்துவிட்டால் அவர்களை நாம் சந்தேகப்படமுடியாது. 

இப்படிப்பட்டவர்களை சந்தேகப்பட்டாலும் கூட அவர்கள், விசாரணையில் நல்லவர்களாகவே நடிப்பார்கள். உடல்களை மறைத்து வைப்பவர்களையும் காவல்துறையினர் கண்டுபிடித்து குற்றவாளிக் கூண்டில் ஏற்றமுடியாது. நெடுங்காலம் உடல் பதுக்கி வைக்கப்பட்டிருந்தால் அதில் உள்ள தடயங்கள் அழிந்துவிடும். மீண்டும் அதனை ஆராய்ந்து கொலையாளியை பிடிப்பது என்பது நூடுல்ஸ் மசாலாவில் பீன்ஸை தேடும் கதைதான். 

டிஎன்ஏ ஆதாரம்

சீரியல் கொலைகார ர்களை டிஎன்ஏ வைத்து பிடிப்பது வெப் சீரிஸ்களில், சினிமாக்களில் பார்த்திருப்பீர்கள். ஆனால் இது கடினமானது. இதற்கு கொலையாளியின் எச்சில், ரத்தம், விந்தணு என இவற்றில் ஏதேனும் ஒன்று தேவை. மேலும் ஒருவர் சந்தேகப்பட்டியலில் இருந்தால் அவரை இச்சோதனை முடிவுகளை வைத்து சோதிக்கலாம். அப்படி இல்லாதபோது இந்த சோதனை முடிவுகள் பெரிய பயனைத் தராது. 

ஆர்எஃப்எல்பி, பிசிஆர், எஸ்டிஆர் என மூன்று சோதனைகள் டிஎன்ஏக்களை கண்டுபிடிக்க நடத்தப்படுகின்றன. நடக்கும் கொலைகளை இணைத்துப் பார்க்கும் புத்திசாலித்தனம் காவல்துறையினருக்கு இருந்தால் மட்டுமே டிஎன்ஏவை  வைத்து கொலையாளியைப் பிடிக்க முடியும். 

பாட் ப்ரௌன்

image shutterstock


கருத்துகள்