ஐடியாக்களை குறித்து வைக்க, ஓவியங்களை வரைய உதவும் ஆப் 2021! - சிறந்த ஆப்கள்

 





லூமாஃபியூஷன் lumafusion

ஐஓஎஸ்ஸில் இயங்கும் ஆப். இது வீடியோ எடிட்டிங் செய்வதற்கான மென்பொருள். இதில் எடிட்டிங், ஆடியோ மிக்ஸ் என பல்வேறு விஷயங்களை செய்ய முடியும். நீங்கள் இருக்குமிடத்தில் இதனை செய்து பிறகு  மேலும் விஷயங்களைச் சேர்க்க ஃபைனல் கட் புரோ மென்பொருளுக்கு கூட மாற்றிக்கொள்ளலாம். ஏகப்பட்ட ஃபைல் பார்மேட்டுகளுக்கு இதனை மாற்றுவது சிறந்த வசதி

மைண்ட் நோட் Mind node

12 பி பஸ்ஸில் நெருக்கியடித்துக் கொண்டு வடபழனி செல்கிறீர்கள். அந்த நேரம் பார்த்து மூளைக்குள்ளும் டிராபிக் ஆகும்படி யோசனைகள் வரலாம். அதனை எல்லாம் மைண்ட் நோட்டில் பதிவு செய்து வைத்தால் பின்னாளில் உங்களுக்கு உதவும். படம். எழுத்து, இணைய முகவரி, ஐகான் என பல்வேறு வகையில் உங்களது குறிப்புகளை சேர்த்து வைக்கலாம். ஐஓஎஸ்ஸில் இயங்கும் ஆப் இது.

ஸ்பார்க் spark 

ஆப்பிளில் மெயில் வசதியைப் பயன்படுத்தியிருப்பீர்கள். ஸ்பார்க் அந்த லெவலுக்கு கிடையாது என்றாலும் எது முக்கியமான மெயில் என்று செட் செய்தால் அழகாக அரேஞ்ச் செய்து வைக்கிறது. இதனால் மெயில்களை கையாள்வது எளிதாகிறது. ஆண்ட்ராய்ட், ஐஓஎஸ்ஸில் இதனை இலவசமாக பயன்படுத்தலாம். 

Netnews wire

ஐஓஎஸ்ஸில் இலவசமாக கிடைக்கும் ஆப் இது. ஆர்எஸ்எஸ் ரீடரான இது, பல்வேறு வலைத்தளங்களிலிருந்து வரும் செய்திகளை எளிதாக தொகுத்து தருகிறது. நெகிழ்வான தன்மை கொண்ட ஆப் இது. எனவே, சமூக வலைத்தளங்களை பார்த்து செய்திகளை தெரிந்துகொள்ளும் பிரச்னை இனி இருக்காது. 

Textastic

கோடிங் எழுதுவதில் சகலகலா வல்லவரா? உங்களுக்காகத்தான் இந்த ஆப். இதில் 80 மொழிகளைப் பயன்படுத்தலாம். வேகமாக பயன்படுத்த முடிகிறது. வலைத்தளம் அல்லது ஆப்களை உருவாக்கவேண்டும் என ஆசை இருந்தால் இந்த ஆப்பை காசு கொடுத்து வாங்கலாம். ஐஓஎஸ்ஸில் மட்டும் இயங்கும். 

procreate

இந்த ஆப், சாதாரணமாக கேன்வாஸில் ஒருவர் எப்படி வரைகிறாரோ அதைப்போலத்தான். ஆனால் இதில் டிஜிட்டலாக செய்யப்போகிறீர்கள். ஏராளமான பிரஷ், மாஸ்க் விஷயங்கள் உள்ளன. புதிதாக ஓவியம் கற்பவர்களுக்கு புரோகிரியேட்டில் வரைவது எளிதாக இருக்கும். 

ஸ்டஃப் இதழ்







கருத்துகள்