பொருளாதாரத்தை அடித்து நொறுக்கும் ஊழல்!









பொருளாதார வளர்ச்சியை சிதைக்கும் ஊழல்! 



இந்தியா, சீனா என இரண்டு நாடுகளிலும் ஊழல் பிரச்னை உள்ளது. ஆனால் சீனா ஊழலையும் மிஞ்சி பொருளாதார வளர்ச்சியில் சாதனை செய்து வருகிறது. 


2019ஆம் ஆண்டில் வெளியான ஊழல் பட்டியலில் சீனா, இந்தியா ஆகிய இரு நாடுகளும் 80ஆவது இடத்தில் உள்ளன. சீனாவில் ஊழல் பிரச்னை இந்தியாவைப் போலவே இருந்தாலும் 1961ஆம் ஆண்டு தொடங்கி அங்கு பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தில் வளர்ந்து வருகிறது. 1971 தொடங்கி 22 ஆண்டுகளாக 27 சதவீத பொருளாதார வளர்ச்சியை சீனா கொண்டுள்ளது. உலகளவிலான ஏற்றுமதிச் சந்தையில் இதன் பங்களிப்பு 1948இல் 0.3 இருந்து 2019இல் 13.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. 


ஐக்கிய நாடுகளின் புள்ளியியல் ஆய்வுப்படி உலகளவில் உற்பத்திச்சந்தையில் சீனா, 28.4 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளது. இந்தியாவின் பங்கு அதேகாலகட்டத்தில் 3% ஆகும்.  இரண்டரை லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்பில் ஏற்றுமதியை சீனா செய்து வருகிறது. இந்தவகையில் கடந்த பத்தாண்டுகளாக இந்தியாவின் ஏற்றுமதி பங்களிப்பு 1.7 சதவீதமாக உள்ளது. 


இந்தியாவில் ஊழல் என்பது தேர்தல் மூலமாக நாடெங்கும் பரவலாக்கப்பட்டது. இதற்கு எதிராக 1974இல் ஜெயப்பிரகாஷ் நாராயணன் போராட்டங்களை அறிவித்தார். இதைத்தொடர்ந்து நாட்டில் அவசரநிலை உருவானது. இச்சூழல் மாறிய பிறகும்,  பல்வேறு ஊழல் வழக்குகளில் அரசியல் தலைவர்கள் சிக்குவது தினசரி செய்தியாகிவிட்டது. 2011இல் அன்னா ஹசாரே செய்து ஊழல் போராட்டமும் முக்கியமானது. 


இந்தியாவில் தற்போது மத்திய அரசு பணப்பரிமாற்றங்களில் வெளிப்படைத்தன்மையை உருவாக்க டிஜிட்டல் தொழில்நுட்பங்களை நாடுகிறது. அரசு தனது நிதியுதவிகளை நேரடியாக பயனரின் வங்கிக்கணக்கில் செலுத்துகிறது. ஆதார் எண் மூலம் ஒருவரை அடையாளப்படுத்துவது, அரசு சேவைகளை இணையம் மூலம் பயனர் பெறமுடிவது, ஜன்தன் வங்கிக்கணக்கு ஆகிய ஊழல் பிரச்னையை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இதன் காரணமாக முன்னர் ஊழல் பரவலில் 85ஆம் இடத்தில் இருந்த இந்தியா இப்போது 80ஆவது இடத்திற்கு நகர்ந்துள்ளது. 


சீனாவில் க்வான்ஸி (quanxi) என்ற நடைமுறை தொழில்வட்டாரத்தில் உள்ளது. அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆகியோருக்கு பல்வேறு அன்பளிப்புகளை வழங்கி அவர்களின் நட்பை பெறுவதுதான் இதன் பொருள். உள்நாட்டு வழக்கத்தை வெளிநாட்டு நிறுவனங்கள் புரிந்துகொள்ளாததால்தான் சீனாவில் தொழில்தொடங்குவதில் தடுமாறுகின்றனர். லஞ்சத்திற்கு க்வான்ஸிக்கும் மெல்லிய கோடுதான் உள்ளது. அங்கு இதனை இயல்பானதாக கருதுகிறார்கள். சீனாவில் அமைப்புரீதியாக ஊழல் பரவியதால் அரசு, 2012ஆம் ஆண்டு தொடங்கி 30 லட்சம் அரசு ஊழியர்களை பணியிலிருந்து விலக்கியுள்ளது. 


சீன அரசு ஊழல், நிர்வாக அமைப்பில் லஞ்சம் பெறுவதைத் தடுப்பதற்கான விரிவான சட்டங்களை உருவாக்கத் தொடங்கியுள்ளனர். மேலும் அதிகாரிகளிடம் தொழில் தொடங்குவதற்கு, புதிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கான தடை, புதிய சட்டங்களை உருவாக்க அல்லது தடுக்க பணம் கொடுக்கும் வழக்கம் உள்ளது. இதனால் சாதாரண மக்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படுவதில்லை. இந்தியா்வில் லஞ்சம், ஊழல் பரவலாக காணப்படுவதால், எளிய மக்களும் பாதிக்கப்படுவது ஊடகச்செய்தியாகிறது. ஊழல், லஞ்சம் விவகாரங்களைத் தண்டிக்கும் அதேசமயம் தொழில்வளர்ச்சியை அதிகரிப்பதில் வேகம் குறையாமல் பார்த்துக்கொள்வதில் இந்தியாவின் எதிர்கால வளர்ச்சி உள்ளது. 


தகவல்

FE


Learning from the Dragon 

rajesh mohan joshi    

Financial express


 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்