ஸ்மார்ட் வாட்சுகளுடன் இணையும் ஆப்கள் 2021

 






இன்ஃபினிட்டி லூப்

ஸ்மார்ட் வாட்ச்ச்சில் இந்த விளையாட்டை இணைத்து விளையாடலாம்.. பொழுதுபோகாமல், மீட்டிங்கில் சோர்வாகி உட்கார்ந்திருக்கும்போது கூட விளையாட்டை விளையாடலாம். 

பிஎஃப்டி

இதில் வாட்சின் வடிவத்தை விதம் விதமாக மாற்றி அமைத்துக்கொள்ளலாம். பார்க்கவும் அழகாக இருக்கிறது. நேரம் தொடர்பான பல்வேறு மாறுதல்களை ஆப் அனுமதிகிறது. 

சாம்சங் பே

காசை பிறருக்கு அனுப்பும் வசதி,  அனைத்து போன்களிலும் உள்ளது. சாம்சங்கும் தொடங்கியுள்ளது. இதில் சொல்ல என்ன இருக்கிறது?

பிபி லாஸ்ட் போன் அலர்ட்

ஐபோனை எங்கோ வைத்துவிட்டீர்கள். அதனை எப்படி பெறுவது என தெரியவில்லை. இந்த ஆப் இருந்தால் குரல்வழிச்செய்தி, அலாரம் ஒலிக்கச்செய்து போனைப் பெறலாம். வீட்டிலுள்ள வை ஃபையில் போனை இணைக்கவேண்டுஃ.

லைஃப்சம்

உணவு, அதன் கலோரி பற்றி கவலைப்பட்டு தொப்பையை தட்டிக்கொண்டிருக்கும் நபர் என்றால் உங்களுக்காகவே இந்த ஆப். பயன்படுத்தி கலோரியை அளவிட்டு ஆரோக்கியம் காக்கலாம். 




கருத்துகள்