காவல்துறையோடு பூனை - எலி விளையாட்டு!
காவல்துறையோடு பூனை - எலி விளையாட்டு என்பது எளிதானது கிடையாது. அதற்கு மனதளவில் சிறப்பாக தயார் செய்திருக்க வேண்டும். இலையெனில் காவல்துறை சும்மா இருக்குமா? சென்னை போலீஸ் போல கையில் மாவுக்கட்டு போடும் வாய்ப்பு அதிகம். ஆனாலும் கூட இதிலும் செம சவாலான ஆட்கள் உண்டு.
ஜேக் தி ரிப்பர், ஸோடியாக் கில்லர், பெர்க்கோவிட்ஸ் ஆகியோர் தான் செய்கிறோம் என்று தெரியாமலேயே காவல்துறைக்கு பல துப்புகளை கொடுத்து குழப்பினார்கள். இதேபோல இன்னொருவர் இல்லாமல் கொஞ்சமேனும் புத்திசாலித்தனமாக யோசித்தார் என்றால் அது ஜான் முகமது, ஜான் மால்வோ என்ற இருவர்தான். இவர்கள் கொலைகளை பல்வேறு மாகாணங்களில் செய்துவிட்டு தப்பிச்சென்றார்கள். ஆனாலும் காவல்துறையை பிடிக்க முடியுமா என சவால்விட்டதால் அவர்கள் சூடானார்கள். முகமதின் அழைப்பு ஒன்றை பின்தொடர்ந்து சென்று கொலைகாரர்கள் இருவரையும் பிடித்தனர். அதோடு அவர்களின் ஃபன் பண்றோம் திட்டம் நின்றுபோனது.
இவர்களை சாதாரணமாக நினைத்து விட முடியாது. இவர்களை என்று இங்கு கூறியது, சீரியல் கொலைகாரர்களைத்தான். காவல்துறை விசாரணையில் கூட தகவல்களை மாற்றிக் கூறி விசாரணையை மாற்றும் முயற்சியையும் செய்வார்கள். ஆனால் ஒருமுறை காவல்துறையினர் சந்தேகப்பட்டியலில் வந்துவிட்டால், சீரியல் கொலைகார ர்கள் அதற்குப் பிறகு கொலை செய்யும் மகிழ்ச்சியை இழப்பார்கள். எனவே, பெரும்பாலும் கொலைகளை செய்தாலும் கூட காவல்துறை கண்களில் படாமல் தப்பிப்பதே இவர்களின் சாமர்த்தியம்.
pat brown
கருத்துகள்
கருத்துரையிடுக