மனதை ரிலாக்ஸ் செய்யும் ஆப்கள்!
போர்ட்டல்
இயற்கையான அழகிய காட்சிகள் எப்போதும் மனதை ரிலாக்ஸ் செய்யும். அப்படி உலகம் முழுக்க உள்ள அனைத்து அழகான அருவி, மலைத்தொடர், புல்வெளி ஆகியவற்றை இந்த ஆப்பில் பார்த்து ரசிக்கலாம். பக்கத்தில் எரிச்சலூட்டும் நண்பர்களின் பேச்சிலிருந்து கொஞ்சம் தள்ளியிருக்க முடியும்.
இந்த ஆப் ஆண்ட்ராய்ட் , ஆப்பிளிலும் இலவசமாக கிடைக்கிறது.
ஸ்மைலிங் மைண்ட்
உங்கள் குடும்பமே மன அழுத்தத்தில் தவித்தாலும் இந்த ஆப், உங்களை அதிலிருந்து மீட்கும். தியானம் செய்வதற்கான ஏராளமான விஷயங்கள் இதில் உள்ளன. அதைப் பயன்படுத்தி தினந்தோறும் ஆப்பை திறந்து வைத்து உழைத்தால் மன அமைதி கிடைக்க வாய்ப்புள்ளது.
பிக்மென்ட்
தினத்தந்தி தங்க மலரில் வரும் வண்ணமடிக்கும் பகுதிதான். ஆனாலும் மன அழுத்தத்தை சிறப்பாக போக்குகிறது. ஆப்பை திறக்கிறீர்கள். பூசணி, பப்பாளி என இஷ்டம் போல பெயிண்டை சிதறடித்து வண்ணம் பூசலாம். மெல்ல கஷ்டங்கள் குறையும் வாய்ப்பிருக்கிறது.
டோகா லைப் வேர்ல்ட்
இது ஒரு பொம்மை வீடு. இங்கு ஏராளமான கதை மாந்தர்கள் உண்டு. இங்குள்ள சில டாஸ்க்குகளை முடித்தால் சுவாரசியமாக பொழுது போக்கும். வீட்டையே இரண்டாக மாற்றும் குழந்தைகளுக்கு இந்த ஆப் பிடித்துப்போனால் பெற்றோர் கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாம்.
ஸ்டஃப் இதழ்
கருத்துகள்
கருத்துரையிடுக