டிவி பார்ப்பதால் கார்பன் அளவு அதிகரிக்குமா?







பதில் சொல்லுங்க ப்ரோ?

அருங்காட்சியகங்களில் ஃபிளாஷ் போட்டு போட்டோ எடுப்பதை எதற்கு தடை செய்திருக்கிறார்கள்?

இந்தியாவில் எப்படியோ, வெளிநாடுகளில் ஃபிளாஷ் போட்டு புகைப்படம் எடுக்க கூடாது என்பதை உறுதியான விதியாக வைத்திருக்கிறார்கள். இதன்மூலம்,  அருங்காட்சியகங்களிலுள்ள தொன்மையான ஓவியங்கள் பாதுகாக்கப்படுகின்றன. ஒவியங்களிலுள்ள வண்ணங்கள் வெளிச்சத்துடன் வினைபுரியும் வேதிப்பொருட்களை கொண்டுள்ளன. இவை ஃபிளாஷில் வரும் ஒளியோடு சேர்ந்து வினைபுரிவதால் ஓவியம் அழிய வாய்ப்புள்ளது. எனவே, புகைப்படம் எடுக்காதீர்கள். அதற்கு பதிலாக ஓவியம் அச்சிடப்பட்ட அஞ்சல் அட்டை, புகைப்படங்களை வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொல்லுகிறார்கள். 



டிவி பார்ப்பதால் கார்பன் அளவு அதிகமாகுமா?

இன்று டிவி மட்டுமல்லாது இணையம் கூட வேகமாக ஸ்ட்ரீமிங் சேவைகளை தந்து வருகிறது. சன்டிவி, விஜய், கலர்ஸ், நெட்பிளிக்ஸ் ஆகியவற்றை ப் பார்த்தால் ஒரு மணிநேரத்திற்கு 56 கிராம் கார்பன் உருவாகிறது என பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இப்படியே தினசரி பார்த்தால் ஆண்டுக்கு 41 கி.கி அளவுக்கு கார்பன் வெளியாகிறது என கொள்ளலாம். 


சயின்ஸ் போகஸ்



 

கருத்துகள்