அமெரிக்க மக்களை பயமுறுத்தும் குப்பைக்கடிதங்கள்! - டேட்டா கார்னர்

 






குப்பைக் கடிதங்கள் 

மின்னஞ்சல் சேவைகள் உருவாகத் தொடங்கியதிலிருந்தே குப்பைக் கடிதங்கள் அனைவரின் மின்னஞ்சல் முகவரிகளுக்கும் வரத் தொடங்கிவிட்டது. பல்வேறு இணையத்தளங்களில் கொடுத்த மின்னஞ்சல் முகவரிகளிலிருந்து செய்தி மடல்களும் வருகின்றன. கூடுதலாக திடீரென வங்கி, தங்கநகைக்கடன், இ வணிக தளங்களிலிருந்து மின்னஞ்சல்கள் வரும். இவை எல்லாம் வணிகம் இணையம் சார்ந்து மாறிவிட்டதையே உணர்த்துகிறது.

மேற்கு நாடுகளில்  அஞ்சலகங்கள் மூலமாகவே விளம்பரக் கடிதங்கள்  நிறைய அனுப்பப்படுகின்றன. இதில் விளம்பர கடிதங்களை யார் கொண்டு வந்து கொடுக்கிறாரோ அவருக்கு காசு கிடைக்கும். 

நாளிதழில் நேரடியாக விளம்பரம் கொடுத்தால் நாளிதழ் நிறுவனத்திற்கு விளம்பரக் காசு கிடைக்கும். ஆனால் அதை விட எளிமையாக குறைந்த காசில் பேப்பர் ஏஜெண்டிற்கு காசு கொடுத்து விடலாம்.  அவர் தான் பேப்பர் போடும் வீடுகளுக்கு விளம்பரங்களை நாளிதழின் இடையில் இணைத்துவிடுவார். இப்படிக் கொண்டு செல்லும்படி செய்தால் யாருக்கு லாபம்?  பேப்பர் ஏஜெண்டிற்கு காசு கிடைக்கும். விளம்பர நோட்டீசை கொடுக்கும் நிறுவனத்திற்கு காசு மிச்சம். மேற்குநாடுகளில் கூட அதேபோல்தான் நடைபெறுகிறது.  

இப்போது குப்பைக் கடிதங்கள் தொடர்பான டேட்டாவைப் பார்ப்போம். 

1972ஆம் ஆண்டு அமெரிக்காவில் அனுப்பப்பட்ட கடிதங்களில் 25 சதவீதம் குப்பைதான். 

2019ஆம்  ஆண்டு அமெரிக்காவில் அனுப்ப ப்பட்ட கடிதங்களில் 63 சதவீதம் குப்பைதான். 

அமெரிக்காவில் கடிதங்கள் வழியாக நடைபெறும் மார்க்கெட்டிங் சந்தை மதிப்பு 13.9 பில்லியன்கள்

அமெரிக்காவில் 50 சதவீத குப்பை கடிதங்கள் படிக்கும் முன்னரே குப்பைத் தொட்டிக்கு சென்று விடுகிறது. 

ஐந்து ஆண்டுகளில் ஐயாயிரத்திற்கும் குறைவான குப்பைக் கடிதங்களை அஞ்சலக ஊழியர்கள் மக்களுக்கு கொண்டு செல்லும் கடிதங்களில் ஒளித்து வைக்கின்றனர். 

தவறு செய்யும் அஞ்சல்கார ருக்கு தவறுக்கு தண்டனையாக 300 மணிநேரங்கள் சம்பளமில்லாமல் வேலை செய்ய பணிக்கப்படுகிறார். 

2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஸ்காட்லாந்தில் குப்பைக் கடிதங்களை வீடுகளுக்கு கொண்டுபோய் சேர்க்க முடியாது என மறுத்து 80 அஞ்சல்கார ர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். 

2020ஆம்ஆண்டு மே மாத ஆய்வுப்படி, ஜெர்மனியைச் சேர்ந்த மக்கள் கடிதங்களுடன் வரும் விளம்பரங்களை தடுக்கவேண்டுமென கருத்து தெரிவித்துள்ளனர். 

அமெரிக்க அஞ்சல் துறையும், ராயல் மெயில் சேவையும் தொழில்நிறுவனங்களுக்கு உதவவே குப்பைக் கடிதங்களை மக்களுக்கு விநியோகிக்க தொடங்கின. தொழில்நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்வதன் மூலம் தபால்துறைக்கு நிறைய பணம் கிடைத்தது. இப்போதும் கிடைத்து வருகிறது. 

அமெரிக்க அஞ்சல்துறை தொழில்நிறுவனங்களுக்கு நிறைய தள்ளுபடி திட்டங்களை வழங்கி வருகிறது. இதனால், தொழில்நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கான கடிதங்களை விளம்பரத்திற்காக மக்களுக்கு அனுப்பி வைத்து வருகிறது. 

க்வார்ட்ஸ் 




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்