மறைமுகமாக மாசுபாடுகளை ஊக்குவிக்கும் நைட்ரஜன்!
மாசுபாடுகளின் தலைமகன்!
மாசுபாடு என்றதும் பலருக்கும் நினைவுக்கு வருவது கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன் ஆகிய அனைவருக்கும் தெரிந்த வாயுக்கள்தான். ஆனால் சத்தமே இல்லாமல் நீர், காற்று ஆகிய மனிதர்கள் அடிப்பதை வாழ்வாதாரங்களில் பெரும் பாதிப்பை நைட்ரஜன் வாயு ஏற்படுத்தி வருகிறது.
பொதுவாக ஆபத்தற்றது என கருதப்படும் இந்த வாயு, வளிமண்டலத்தில் 78 சதவீதம் காணப்படுகிறது. காற்றிலுள்ள நைட்ரஜனை மண்ணில் இழுத்து வளமடையும் நிறைய பயிர்கள் மண்ணில் உண்டு. இப்படி நடைபெறும் செயல்பாடு சுழற்சியானது. இதில குளறுபடி நடக்கும்போது அனைத்துமே தலைகீழாகி பிரச்னை தொடங்கிவிடுகிறது.. எளிதாக நாம் பார்க்கும் பிரச்னை, நீர்நிலையில் பிற உயிரினங்கள் வாழ முடியாதபடி பாசிகளின் ஆக்கிரமிப்பு. இது வளிமண்டலத்தில் நைட்ரஜன் வாயுவின் அளவு அதிகரிப்பதால் ஏற்படும் முக்கியமான பாதிப்பாகும்.
காற்றிலுள்ள நைட்ரேட்டுகளை மழை கரைத்து நீர்நிலைகளில் சேர்க்கிறது. அங்கு பாசிகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நைட்ரஜன், நீரிலுள்ள ஆக்சிஜனை உறிஞ்சுகிறது. இதனால் அதிலுள்ள உயிரினங்கள் மெல்ல அழிவைச் சந்திக்கின்றன. இந்த வகையில் உலகில் 400க்கும் மேற்பட்ட நீர்நிலைப்பகுதிகள் பாதிக்க்ப்பட்டுள்ளன. இதில் முக்கியமானது மெக்சிகோ வளைகுடா. மனிதர்களின் செயல்பாடுகளாக, கார்கள் மற்றும் மின்நிலையங்களிலிருந்து வெளியேற்றப்படும் நைட்ரஜன் காற்றுமாசை ஏற்படுத்துகிறது. காற்றில் நச்சுத் துகள்களாக மாறி மனிதர்களின் நுரையீரலைப் பாதித்து நோய்களை ஏற்படுத்துகிறது.
இருவழிகளில் நைட்ரஜனை மண்ணில் பெறலாம். முதல் வழி, தாவரங்களின் வளர்ச்சிக்கு தேவையான நைட்ரஜனை நுண்ணுயிரிகள் காற்றிலிருந்து பெற்றுத் தருகின்றன. இதனால், நைட்ரஜன், ஹைட்ரஜனுடன் வினைபுரிந்து அம்மோனியாவாகிறது. . பின்னர், அம்மோனியா நைட்ரஜன் அயனிகளாக மாறிய பிறகே பயிர்கள் நைட்ரஜனை உள்வாங்குகின்றன. இரண்டாவது வழியாக, மின்னல், இடி விழுவது மூலம் நைட்ரஜன் மண்ணில் சேகரமாகி பயிர்களுக்கு உதவுகிறது. காற்றிலுள்ள நைட்ரஜனின் அளவு அதிகமாக இருந்தால் மழையில் கரைந்து மண்ணுக்கு வரும்போது, அங்குள்ள கால்சியம், மெக்னீசியம் சத்துகளை வெளியேற்றிவிடும். இதனால் அமிலத்தன்மை கூடி பயிர்களின் வளர்ச்சி கெடும்..
தொண்ணூறுகளில் ஜெர்மன் விஞ்ஞானிகளான ஃபிரிட்ஸ் ஹேபர், கார்ல் போச் ஆகியோரின் மூலம் அம்மோனியா உரம் தயாரிக்கும் முறை கண்டறிப்பட்டது. உரத் தயாரிப்பு அதிகரித்த பிறகு, சூழலில் நைட்ரஜனின் சதவீதம் கட்டுக்கடங்காமல் உயரத். தொடங்கிவிட்டது. 2011ஆம் ஆண்டு ஐ.நா அமைப்பு இதனை அடையாளம் கண்டு இதுபற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த ஆராய்ச்சியாளர் மார்க் சட்டனின் உதவியுடன் இதற்கான அறிக்கையைத் தயாரித்தது. ஆனாலும் கார்பன் அளவுக்கு இந்தப்பிரச்னை முக்கியத்துவம் பெறவில்லை.
2019இல் சட்டன் தலைமையிலான 150 ஆராய்ச்சியாளர்கள் நைட்ரஜன் விளைவுகள் பற்றிய அறிக்கையை ஐ..நா.வுக்கு அனுப்பினர். இதன் விளைவாக 2030க்குள் நைட்ரஜனை கட்டுப்படுத்தும் ஒப்பந்தம் உருவானது. இதில் 14 நாடுகள் மட்டுமே கையெழுத்திட்டுள்ளன. மனிதர்களின் உரங்கள் தயாரிப்பு மற்றும் பிற செயல்பாடுகளால் வளிமண்டலத்தில் அதிகரிக்கும் அமோனியா, நைட்ரஸ் ஆக்சைடாக மாறினால் வளிமண்டலத்தை பாதிக்கும்.
புற ஊதாக்கதிர்களை பாதுகாக்கும் ஓசோன் படலத்தை சிதைக்கும் இந்த வாயுவின் ஆயுள் 120 ஆண்டுகள் ஆகும். நைட்ரஜனைப் பயன்படுத்தும் பயிர் பயிரிடுதலை கண்காணிப்பது், உர உற்பத்தியை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும்தான் நைட்ரஜன் பாதிப்பை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரே வழி.
தகவல்
New scientist
Godfather of pollution
andrew zaleski
கருத்துகள்
கருத்துரையிடுக