இடுகைகள்

தலைவன் இவன் ஒருவன்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சோலார் பேனலும், தாவரசெல் உணவும் உலகை மாற்றும்!

படம்
தலைவன் இவன் ஒருவன் லிஷ் பெச்ட் , ஸ்டெப் பியர்ஸ் பகதூர் ராம்ஸி விலங்குகளை உணவுக்காக வளர்ப்பது என்பது காடழிப்பு , விலங்குகளின் உடல்நலம் , மீத்தேன் உருவாக்கம் , சுவை , பாரம்பரியம் என பல காரணங்கள் உண்டு . குட்ஃபுட் இன்ஸ்டிடியூட்டில் பணிபுரியும் லிஷ் பெச்ட் , விலங்கு இறைச்சிக்கு மாற்றான உணவுகளை தேடி உருவாக்க முயற்சித்து வருகிறார் . தாவரவகைகளில் இறைச்சியின் அளவு சத்துக்கள் நிறைந்த விலை குறைந்த உணவு வகையை உருவாக்க லிஷ் பெச்ட் உழைத்து வருகிறார் . பல்வேறு கடைகளில் இறைச்சிக்கு மாற்றான தாவர உணவுகளை கவனித்து பார்த்து விளம்பர அடிப்படைகளை கற்கிறார் . " உணவுத்துறையில் இது மாபெரும் புரட்சி " என்கிறார் லிஸ் . கலிஃபோர்னியா பல்கலையிலும் , ஜான் ஹாப்கின்ஸ் பல்கலையிலும் பிஎஸ் மற்றும் பிஹெச்டி படிப்பை முடித்த லிஸ் , படிக்கும்போது விடுமுறைகளில் பல்வேறு உணவு குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டவர் . " தாவர செல்களின் திசுக்களின் மூலம் இறைச்சி , பால் , முட்டை அல்லாத உணவுகளை உருவாக்க எங்களது இன்ஸ்டிடியூட் குழு , முயற்சித்து வருகிறது " என தெம்பாக பேசுகிறார் லி

சூழல்பிரச்னைகளை தீர்க்க கடிதம் எழுதுங்கள்!- டியர் டுமாரோ கதை!

படம்
தலைவன் இவன் ஒருவன் திரிஷா ஷ்ரூம் , ஜில் குபித் பகதூர் ராம்ஸி ஹார்வர்ட் பல்கலையில் படித்தவர்களான திரிஷா ஷ்ரூம் , ஜில் குபித் இருவரும் பருவநிலை மாறுபாட்டை தங்களின் குழந்தைகளிடம் பேசுவதற்கு முயற்சித்தனர் . அதற்காக தொடங்கியதுதான் டியர் டுமாரோ திட்டம் . " சூழல் பிரச்னைகளைப் பற்றி என் மகளுக்கு புரியவைப்பது குறித்து யோசித்தபோதுதான் டியர் டுமாரோ ஐடியா கிடைத்தது . சிறந்த எதிர்காலத்தை குழந்தைகளுக்கு உருவாக்குவது நமது கடமைதானே !" என்கிறார் ஷ்ரூம் . டியர் டுமாரோ என்பது இணையதளத்தில் கடிதம் , ஒளிப்படங்கள் , வீடியோ என எதனையும் பதிவு செய்து அனுப்பி அசத்தலாம் . தற்போதுவரை 500 கடிதங்கள் இதில் எழுதி பரிமாறப்பட்டுள்ளன . " பருவச்சூழல் மாறுபாட்டை நாம் நம் குழந்தைகளின் கண்களின் வழியாக பார்ப்பது இன்றைய அவசியத்தேவை " என புன்னகையுடன் பேசுகிறார் குபித் . எதிர்காலத்தில் குழந்தைகளுக்கு பத்தாயிரம் கடிதங்களை அனுப்புவதோடு 2 கோடி மக்களை டியர் டுமாரோவில் சேர்ப்பதே ஷ்ரூம் மற்றும் குபித்தின் இலக்கு . நிறுவனத்தின் நிகழ்ச்சிகள் , நிதி திரட்டுவது , ஐடியாக்கள் எழு

வணிகத்திலும் சூழல் காப்பாற்றும் சூழலியலாளர்!

படம்
தலைவன் இவன் ஒருவன் ஆன்டனி டோரஸ் பகதூர் ராம்ஸி அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த ஆன்டனி டோரஸ் , சுற்றுச்சூழலுக்கு ஆதரவான தன்னார்வலர் . நிகரகுவாலிருந்து அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்த பெற்றோர் மூலம் வறுமை , வெப்பநிலை உயர்வினால் கடல்நீர் மட்டம் உயர்தல் ஆகியவை ஒன்றிணைந்த ஒரே தீர்வினை எதிர்நோக்கும் பிரச்னைகளை என்பதை விரைவிலேய அடையாளம் கண்டு கொண்டார் ஆன்டனி . சியரா கிளப் மூலம் அச்சுறுத்தலுக்குள்ளாகும் இனக்குழு சார்பாக பல்வேறு பேரணிகளை நடத்தி அரசுக்கு தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்க முயற்சித்து வருகின்றனர் .  " சூழல் செயல்பாட்டாளர்கள் தம் பிரச்னைகளை எளிய கதைகளாக்கி மக்களுக்கு புரியும்படி விளக்குவது அவசியம் . தடுமாறாத லட்சியமும் நோக்கமும் இச்செயல்பாட்டுக்கு தேவை " என்கிறார் ஆன்டனி . அனைத்து பிரச்னைகளிலும் வர்க்கம் , பாலினம் , நிறம் ஆகியவை அமெரிக்காவில் இணைந்தே நிற்கின்றன என்பதை ஆன்டனி உணர்ந்துள்ளார் . சியரா கிளப்பின் வழியே வணிகத்தில் மக்கள் , ஊழியர்கள் , சுற்றுச்சூழல் ஆகியவை பாதிக்கப்படாமல் இருக்க போராடி வருகின்றனர் . 1892 ஆம் ஆண்டு சூழலியலாளர் ஜான் ம்ய

கிறிஸ் காஸ்ட்ரோ - பசுமை பொருளாதார சூழலியலாளர்

படம்
தலைவன் இவன் ஒருவன் 8 கிறிஸ் காஸ்ட்ரோ பகதூர் ராம்ஸி  அமெரிக்காவின் ஆர்லாண்டோ நகரைச்சேர்ந்த கிறிஸ் காஸ்ட்ரோ பசுமை ஆற்றல் சார்ந்த பொருளாதாரத்தை நகரங்களில் பரப்பிவரும் சூழலியலாளர் . அமெரிக்காவின ஃப்ளோரிடாவில் பிறந்த கிறிஸ் காஸ்ட்ரோ பனைமர விவசாயிகளின் குடும்பத்தில் பிறந்தவர் . பின்னாளில் சூழலியல் அறிவியலில் பட்டம் பெற்ற காஸ்ட்ரோ , இயற்கை விவசாயமுறையை தன்னார்வமாக மக்களுக்கு பிரசாரம் செய்யும் பசுமை ஒருங்கிணைப்பாளர் . ஆர்லாண்டோ நகரின் பசுமை திட்டங்களுக்கான இயக்குநர் .    நேர்மையான சூழலியல் என்பது பேச்சைக் கடந்து செயலுக்கு மடைமாற்றியதில் கிறிஸ் காஸ்ட்ரோவின் பங்கு முக்கியமானது . IDEAS for us எனும் தன்னார்வ அமைப்பை 2008 ஆம் ஆண்டு   தொடங்கி வீட்டில் தோட்டம் அமைக்கும் Fleet Farm இயற்கை விவசாய முறைகளை பயிற்றுவித்து மக்களுக்கு வழிகாட்டி வருகிறார் . " அரசோடு இணைந்து தன்னார்வ அமைப்புகள் சமூக அமைப்புகள் இணைந்தால் மட்டுமே சமூகத்தில் மாற்றங்களை சாத்தியப்படுத்த முடியும் " என்று உற்சாகமாக பேசுகிறார் கிறிஸ் காஸ்ட்ரோ . ஆர்லாண்டோ நகர கவுன்சிலில் பணிபுரியும் கிறிஸ