சோலார் பேனலும், தாவரசெல் உணவும் உலகை மாற்றும்!









தலைவன் இவன் ஒருவன்

லிஷ் பெச்ட், ஸ்டெப் பியர்ஸ்

பகதூர் ராம்ஸி

விலங்குகளை உணவுக்காக வளர்ப்பது என்பது காடழிப்பு, விலங்குகளின் உடல்நலம், மீத்தேன் உருவாக்கம், சுவை, பாரம்பரியம் என பல காரணங்கள் உண்டு. குட்ஃபுட் இன்ஸ்டிடியூட்டில் பணிபுரியும் லிஷ் பெச்ட், விலங்கு இறைச்சிக்கு மாற்றான உணவுகளை தேடி உருவாக்க முயற்சித்து வருகிறார்.
தாவரவகைகளில் இறைச்சியின் அளவு சத்துக்கள் நிறைந்த விலை குறைந்த உணவு வகையை உருவாக்க லிஷ் பெச்ட் உழைத்து வருகிறார். பல்வேறு கடைகளில் இறைச்சிக்கு மாற்றான தாவர உணவுகளை கவனித்து பார்த்து விளம்பர அடிப்படைகளை கற்கிறார். "உணவுத்துறையில் இது மாபெரும் புரட்சி" என்கிறார் லிஸ். கலிஃபோர்னியா பல்கலையிலும், ஜான் ஹாப்கின்ஸ் பல்கலையிலும் பிஎஸ் மற்றும் பிஹெச்டி படிப்பை முடித்த லிஸ், படிக்கும்போது விடுமுறைகளில் பல்வேறு உணவு குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டவர்.

"தாவர செல்களின் திசுக்களின் மூலம் இறைச்சி, பால், முட்டை அல்லாத உணவுகளை உருவாக்க எங்களது இன்ஸ்டிடியூட் குழு, முயற்சித்து வருகிறது" என தெம்பாக பேசுகிறார் லிஸ் பெச்ட்.

ஸ்டெப் பியர்ஸ்

அமெரிக்காவின் போஸ்டனைச் சேர்ந்த ஸ்டெப் பியர்ஸ், சோலார் தோட்டத்தை உருவாக்கிவருகிறார். சோலார் பேனல்களை நமது வீட்டில் வைத்திருப்பதை விட அனைவரும் குழுவாக இணைந்து பயன்படுத்தினால் எப்படியிருக்கும்? என்ற ஐடியாதான் சோலார் தோட்டத்தின் அடிப்படை. இதனை சாத்தியப்படுத்த ஸ்டெப் பியர்ஸ் உருவாக்கியதே சோல்ஸ்டிஸ் நிறுவனம். சோலார் பேனல்களை வைக்க இடமும், வீட்டில் நிறுவ வேண்டாம் என நினைப்பவர்கள் சோலார்டிஸ் நிறுவனத்தை அணுகி இணையலாம். இதன் மூலம் வீட்டுக்கு தேவையான மின்சாரத்தையும் பெறலாம். ஒவ்வொரு அமெரிக்கருக்கும் பசுமை மின்சக்தி என்பதே சோல்ஸ்டிஸ் நிறுவனத்தின் லட்சியம்.
உள்ளூர் இனக்குழுவுக்கு உதவும்படி அமைக்கப்படும் சோலார் தோட்டங்களில் சந்தாதாரர்களாக இணைபவர்களுக்கு மின்சாரம் கிடைப்பதோடு அதனால் சூழல் பாதிக்கப்படுவதில்லை."சோலார் பேனல்கள் ஜனநாயகப்படுத்தாதவரை அது மக்களிடையே பரவலாகாது" என்கிறார் ஸ்டெப் பியர்ஸ். மசாசூசெட்சிலுள்ள பிரிட்ஜ்வாட்டர் தேவாலயத்தில் சோலார் பேனல்களை நிறுவிசோல்ஸ்டிஸ் பத்து சதவிகிதம் மின்சாரத்தை சேமித்துள்ளது.


பிரபலமான இடுகைகள்