ஆணா, பெண்ணா?



Image result for men or women




வரலாற்று சுவாரசியங்கள்

ஆணா, பெண்ணா?

ரா.வேங்கடசாமி

ஜேம்ஸ் பேரி என்ற பெண் வாழ்ந்த காலம் 1799-1865 வரை. அயர்லாந்தில் ஆறுவயது குழந்தையாக லண்டனுக்கு தன் தாயுடன் வந்தவள, தாயை அத்தை என அறிமுகம் செய்வதே இவளின் வழக்கம். ஐக்யூ அதிகம் கொண்ட பேரி, எடின்பர்க் பள்ளியில் சேர்ந்து படித்து பனிரெண்டு வயதில் மருத்துவப்பட்டம் பெற்றாள். டாக்டர் பேரி என்ற சர்ஜனுக்கு உதவியாக பல நாட்கள் வேலை செய்தாள். பின் பிரிட்டிஷ் ராணுவத்தில் டாக்டராக 1813 ஆம்ஆண்டு தன்னை பதிவு செய்துகொண்டாள்.
ராணுவத்தில் அவளை தென்னாப்பிரிக்காவிற்கு பணிமாற்றம் செய்தனர். ராணுவ மருத்துவமனைகளில் பல்வேறு மாறுதல்களை செய்து பெயர் பெற்றாள். பின்னர் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பின்தொடர்ந்தது பேரியின் பணிகளைத்தான். குதிரை மீதமர்ந்து ராணுவ வீரர்களை ஆளுமை செய்த பேரி, விரைவில் பிரபலமானார். 1822 ஆம் ஆண்டு பேரி, ராணுவ மெடிக்கல் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றார். அவர் தன் உடலை சரியாக மூடாமல் தூங்கியபோது இரண்டு ஆபீசர்கள் அவரை பெண் என அடையாளம் கண்டுகொண்டனர். ஆனால் அவர்களிடம் பேரி சத்தியம் வாங்கிக்கொண்டார்.

கனடா மருத்துவமனையில் அவர் கடைசியாக வேலை செய்து விடைபெற்றார். 1865 ஆம் ஆண்டு பேரி இறந்தபோது அவரை அடக்கம் செய்த பெண்கள் இந்த ஜெனரல் பெண் என அலறியபோதுதான் உலகமே அவரை பெண் என அறிந்தது.

சார்லஸ் எனும் பெண்!


பிரான்சின் டானேரியில் வக்கீலின் மகனாக பிறந்த சார்லஸூக்கு அவனின் அம்மா பெண்களின் உடையை அணிவித்து, அழகுபார்ப்பவது வழக்கம். சகோதரியின் உடைகள் சார்லஸிற்கு அப்படியே பொருந்தின. பாரிசில் மஜாரின் கல்லூரியில் படித்த சார்லஸ், நிதி இலாகா செயலாளராக பணியாற்றினார். பதினைந்தாம் லூயியின் காதலி மேடம் பம்படாரை பெண் வேடமிட்டு ஏமாற்றுகிறேன் என பெட் கட்டினார் சார்லஸ். இதில் மன்னரே அசந்துபோய், சார்லஸை ஒற்றர் படையில் சேர்த்துக்கொண்டார்.

1755 ஆம் ஆண்டு ரஷ்யாவுடன் ராஜீய உறவு பேண விரும்பிய பதினைந்தாம் லூயி, டக்ளஸ் மற்றும் சார்லஸை அனுப்பிவைத்தார். டக்ளஸின் உறவுப்பெண் என அறிமுகமான சார்லஸ் பெண் வேடமிட்டிருந்தார். பிரான்ஸ் - ரஷ்யா ஒப்பந்தம் வெற்றியடைய மகிழ்ந்த மன்னர் லூயி, சார்லஸை ராணுவப்பிரிவுக்கு தலைவனாக்கினார்.  1793 ஆம் ஆண்டு சார்லஸை பிரான்ஸ் நாட்டு தூதரகத்தில் பணிகொடுத்து இங்கிலாந்துக்கு அனுப்பினார்கள். இங்கிலாந்தை உளவறிவதே முக்கியப்பணி.  ஆனால் அங்கிருந்த மேலதிகாரியோடு சார்லசிற்கு உறவு கெட, பெண்ணாக வேடமிட்டு நடிக்கும்படி ஆயிற்று.

பின் 1777 ஆம் ஆண்டு பிரான்ஸ் திரும்பிய சார்லஸ், 1785 ஆம்ஆண்டு இங்கிலாந்துக்கு திரும்பி வாள் வீச்சுகென பள்ளி தொடங்கி பைசா பார்த்தார்