தகவல்கொள்ளையின் வரலாறு!
தகவல்கொள்ளைக்கு பூட்டு!- விக்டர் காமெஸி
ஃபேஸ்புக் தன் நம்பிக்கையை கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா
என்ற நிறுவனத்திற்கு உதவியதன் மூலம் கெடுத்துக்கொண்டது. தற்போது இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளில் சாரி கேட்டுள்ளார்
மார்க். லைக்ஸ்தான் இன்னும் கிடைக்கவில்லை.
அமெரிக்கா
ஒவ்வொரு துறையைப் பொறுத்தும் தகவல் தொடர்பான விதிகள்
மாறும்.
எனவே எளிதாக அரசை ஏமாற்றி இணையதள உரிமையாளர்கள் கரன்சியை அள்ளுகின்றனர்.
இங்கிலாந்து
ஐரோப்பிய யூனியனில் இருந்தபோது உருவாக்கிய
95/46EC என்னும் சட்டத்தை யூனியன் 2000 ஆம் ஆண்டு
உருவாக்கியது. ஆனால் இனி இங்கிலாந்து ரஷ்யா, ஃபேஸ்புக், கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா ஆகியோருக்கு எதிராக
மிக வலுவான விதிகளை உருவாக்கியே தீரவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
சீனா
தனிநபருக்கான பாதுகாப்பு விதிகள்தான் இங்கு அமுலில்
உள்ளது.
கடந்தாண்டு இணையத்திற்கான தகவல் பாதுகாப்பு விதிகள் இயற்றப்பட்டுள்ளன.
பாகிஸ்தானில் தைவான், நகோர்னோ, சோமாலிலேண்ட் உள்ளிட்ட நாடுகளுக்கு தகவல் அனுப்ப தடை உள்ளது. பிரான்சில் 1978 ஆம் ஆண்டு முதலாக தகவல் பாதுகாப்பு சட்டமும்
அமுலில் உள்ளது.
உலகெங்கும் தினசரி
50.9 லட்சம் தகவல்களும், ஒருமணி நேரத்திற்கு
2.12 லட்சம் தகவல்களும், ஒரு நிமிடத்திற்கு
3,538 தகவல்களும், நொடிக்கு 59 தகவல்களும் திருடப்பட்டுவருகின்றன.
திருட்டு
யாஹூ (2013)- 3 பில்லியன்
அடல்ட் ஃப்ரெண்ட்ஃபைண்டர்(2016)
- 4.2 மில்லியன்
இக்யூஃபேக்ஸ்(2017) - 143 மில்லியன்
ஃபேஸ்புக்(2018) - 50 மில்லியன்
வரும் மே 25 அன்று அமுலாகவிருக்கும்
ஐரோப்பிய யூனியனின் GDPR எனும் தகவல் பாதுகாப்பு சட்டம் நான்கு
ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வந்தது. ஐரோப்பிய நாடாளுமன்றத்தில்
2016 ஆம் ஆண்டு ஒப்புதல் பெற்ற இச்சட்டத்தை மீறும் நிறுவனங்களுக்கு பெரும்
தொகையில் அபராதம் விதிக்கப்படும். "இந்தியாவில் பிறநாட்டு
தகவல்பாதுகாப்பு சட்டத்தை அப்படியே பின்பற்றுவது உதவாது. ஏனெனில்
ஆதார் தகவல்களை பாதுகாப்பதிலேயே அரசு தடுமாறிவருகிறது. இந்திய
மக்களைப் பற்றிய தகவல்கள் இந்தியாவிற்கு வெளியில் சேமிப்பதை அரசு அனுமதிக்க கூடாது"
என்கிறார் உயர்நீதிமன்ற வழக்குரைஞரான துக்கல். எதிர்கட்சிகளுக்கு பதிலடி தர யோசிப்பதை விடுத்து சிறிதேனும் களநிலவரத்தை உணர்ந்து
செயல்பட்டால் நம் அந்தரங்கம் மட்டுமல்லாது சொத்துக்களும் பறிபோகாமல் இருக்கும்.