காமெடி பிட்ஸ்!
பிட்ஸ்!
ஆணியை பிடுங்குங்க
பாஸ்!
மும்பையில் துறைமுகம்
அருகேயுள்ள தனியார் வங்கியான HDFC கொள்ளை சம்பவங்களை தடுக்க கதவருகில் ஆணிகளை
பதித்து வைத்தது இணையத்தில் கடும் கண்டனங்களை கிளப்பியுள்ளது. உடனே இதற்கு பதிலளித்த வங்கி அதிகாரி நீரஜ் ஜா, ஆணிகள்
அகற்றப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார்.
காளைச்சண்டைக்கு
ரெஃப்ரீ
சத்தீஸ்கரின் கோர்பாவில்
இரண்டு காளைகள் வீரதீரமாய் தங்கள் ஆண்மையை நிரூபிக்க முட்டி சாலையில் மோதிக்கொண்டிருந்தன. அதைப்பார்த்த குடிமகன் ஒருவர் சண்டையை
நிறுத்த ரெஃப்ரீயாய் குறுக்கே போனார். காளை முட்டி தூக்கியதில்
சுண்டிவிட்ட காயின் போல விண்ணில் டைவ் அடித்து மண்ணில் செட்டிலானார் நம் ரெஃப்ரீ.
இப்போது இணையத்தில் செம ட்ரெண்டிங் இந்த வீடியோதான்.
திருநங்கை செய்தி
வாசிக்கிறார்!
பாகிஸ்தானிலுள்ள
கோஹினூர் நியூஸ் எனும் டிவி, திருநங்கையான மாவியா மாலிக்குக்கு செய்தி வாசிக்க
வாய்ப்பளித்து அசத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் திருநங்கைக்கு
முதல்முறையாக கிடைக்கும் கௌரவம் இது. இந்தியாவில் லோட்டஸ் டிவி
பத்மினி பிரகாஷ், பிபிசி அப்சரா ரெட்டி, பிரிட்டனின் பாரிஸ் லீஸ் ஆகியோர் திருநங்கையாக இருந்து சாதித்தவர்கள்.
ஏமனில் கலைஞன்!
ஏமன் நாட்டைச்
சேர்ந்தவர் டீசல் கேன் ஒன்றை இசைக்கருவியாக பயன்படுத்தி இசைக்கும் வீடியோ பலரையும்
ஆச்சரியப்பட வைத்துள்ளது.
டீசல் கேனில் ஓட்டை போட்டு கிடார் போல இவர் வாசிக்கும் இசை,
Yemeni Oud எனும் கருவியின் இசையை நினைவுபடுத்துகிறது என பலரும் பாராட்ட
வீடியோ வைரல் ்ஹிட்.
தாறுமாறு ட்ரைவிங்
தேர்வு!
அமெரிக்காவின்
மின்னசோட்டாவைச் சேர்ந்த பதினேழு வயதுப் பெண்ணுக்கு அன்று ஓட்டுநர் உரிமத்திற்கான தேர்வு. பாஸ் செஞ்சுடு
என உறவுகள் பலரும் பிரஷர் கொடுக்க, காரை ரிவர்ஸ் எடுக்க நினைத்து
டாப் கியரைப் போட்டு ஆக்சிலேட்டரை உதைத்தார். ரிசல்ட்?
எக்ஸாம் சென்டரே நொறுங்கிவிட்டது. தேர்வு அதிகாரிக்கு
காயம் ஏற்பட்டாலும் விபத்துக்கு காரணமான பெண்ணின் மீது கேஸ் கிடையாதாம்.