தேனீ மனிதர்களை கடித்தவுடன் இறப்பது ஏன்?



Image result for honeybee





சக்கரத்திற்கு முன்பு..

மது (கி.மு. 7000)

விவசாயம் தொடங்கியபோதே களைப்பை போக்க மதுவை பருகத்தொடங்கியதாக அகழ்வராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மதுவை காக்டெய்லாக குடித்திருக்கிறார்கள் சீனாவின் ஜியாஹூ பகுதியைச் சேர்ந்த மக்கள்.

ஆடை (கி.மு. 1,00,000)

தூங்கும்போதும்கூட சட்டையைக் கழற்றாமல் இருக்கும் நாம் ஆடையின்றி திரிந்தவர்கள் என்பதை நம்ப சிரமமாகவே இருக்கும். எகிப்தில் கண்டறியப்பட்ட உடை ஐயாயிரம் ஆண்டுகள் தொன்மையானது. ஜெர்மனியில் கிடைத்த விலங்குதோலிலான ஆடை நியான்டர்தால் மனிதர்கள் அணிந்திருந்தது. காலம் 1 லட்சம் ஆண்டுகள்.

காலண்டர்(கி.மு.8000)

இன்று அப்டேட்டாகி ராடோ, டிஸாட் வாட்சுகள் வரை வந்துவிட்டோம். ஸ்காட்லாந்தில் கண்டறிந்த பனிரெண்டு குழிகளின் வயது பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது. இவை சந்திரனின் சுழற்சியை கணக்கிட உதவியவை என்பதை அகழ்வராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.    

2

ஏன்?எதற்கு?எப்படி? Mr.ரோனி

உலகில் பாதுகாப்பாக வாழ்வதற்கான இடம் உள்ளதா?

எந்தப்பிரச்னையும் இல்லாமல் நிம்மதியாக வாழ அமெரிக்காவின் புளோரிடாவிலுள்ள ADX Florence ‘supermax’ என்ற ஜெயிலுக்குத்தான் நீங்கள் போகவேண்டியிருக்கும். கைதிகளின் பிரச்னை கூட இன்றி செம சேஃபாக இருக்கலாம். ஆனால் மனநலன் பூஜ்யமாகிவிடும். எனவே சிங்கப்பூரை நீங்கள் தைரியமாக தேர்ந்தெடுக்கலாம். 2016 ஆம் ஆண்டில் சிறந்த நாடாக லாகடம் இன்ஸ்டிடியூட்டினால் சிங்கப்பூர் தேர்ந்தெடுக்கப்பட்டது. நோய்கள் பற்றிய கவலை இல்லாமல் வாழ, லக்‌ஸம்பர்க் உங்களுக்கு உதவும். ஆனாலும் இங்கு செக்யூரிட்டி குறைவுதான். நாம் வாழும் சூழலை ஏற்றுக்கொள்ளப் பழகுவதே நிம்மதியாக மகிழ்ச்சியாக வாழ்வதற்கான முதல்படி

3
தேனீயின் இறப்பு!

கஷ்டப்பட்டு அலைந்து திரிந்து சம்பாதித்த தேனை மனிதர்களிடம் இழந்தாலும் தேனீ அவர்களை சும்மாவிடுவதில்லை. முடிந்தவரை தேன் எடுப்பவர்களை விரட்டி கடித்து அதன் விளைவாக இறந்துபோவது வாடிக்கை. பூக்களின் மகரந்தங்களிடமிருந்து தேனை உண்டு தன் வயிற்றில் சேகரிக்கும் தேனீ, தன் வயிற்றிலிருந்து மெழுகை உருவாக்கி அதில் தேடிச்சேர்த்த செல்வமான தேனை நமக்காக அல்ல; தன் எதிர்காலத்திற்காக சேமித்து வைக்கிறது.

கடிப்பது சரி, இறப்பது ஏன்? பிற உயிரிகளை கடித்தால் தன் வயிற்றிலுள்ள கொடுக்கை மீட்டுக்கொள்ளும் தேனீ, பாலூட்டிகளை குறிப்பாக மனிதர்களைக் கடித்தால் அதனை மீட்கமுடியாமல் வயிறு கிழிந்து இறந்துபோகிறது. இது தேனீக்கு மட்டுமே பொருந்தும். தேனீக்கள் அழிந்தால் தொலைநோக்கில் மெல்ல மகரந்தசேர்க்கை குறைந்து நாம் சாப்பிடும் பருவங்களுக்கான பழங்கள், காய்கறிகள் குறைந்துபோவது எதிர்கால அபாயமாக நிகழும்

தொகுப்பு: விஜேஷ்வரன், சித்பவனா
நன்றி: முத்தாரம்  



பிரபலமான இடுகைகள்