வெள்ளையர்களுக்கு உதவிய அடிமையின் கதை!
அடிமையின் வாழ்க்கை!
அமெரிக்காவின்
வர்ஜீனியாவிலுள்ள லீஸ்பர்க்கைச் சேர்ந்த ஜான் டபிள்யூ ஜோன்ஸ், 1844 ஆம்
ஆண்டு தன் அம்மாவிடம் பார்ட்டிக்கு போவதாக சொல்லி வீட்டைவிட்டு பிஸ்டலுடன் வெளியேறினார்.
பிளான்- அடிமை முறையில்லாத வடக்கிலுள்ள பென்சில்வேனியா
செல்வது. துணைக்கு நான்கு நண்பர்கள். தினசரி
20 மைல்கள் பயணம் செய்த ஜோன்ஸ், ஹாரிஸ்பர்க்,
வில்லியம்ஸ்போர்ட் ஆகிய இடங்களை மிகவும் விழிப்பாக உறங்கி கடந்தார்.
நடந்து களைத்துப்போனவர்களுக்கு
நாதெனியல் ஸ்மித் என்ற வெள்ளையர் உணவு கொடுத்து உபசரித்தார். பின் நியூயார்க்கின்
எல்மிராவில் தங்கியவர், கல்லறைகளை பராமரிக்கும் வேலையைச் செய்து
பணம் சேர்த்தார். உள்ளூர் நீதிபதியின் அனுசரணையைப் பெற்று கல்வி
கற்ற ஜோன்ஸ் சிறிய வீடு வாங்குமளவு பணம் சேர்த்தார். 1850 ஆம்
ஆண்டு தப்பி ஓடும் அடிமைகளை பிடித்து அவர்களுக்கு உதவுபவர்களுக்கு அபராதம் விதிக்கும்
சட்டம் அமுலானது. அதனை தீவிரமாக எதிர்த்த ஜோன்ஸின் பேட்டிகளும்
பத்திரிகைகளில் வெளியானது. அதோடு தன் வீட்டில் 800 க்கும் மேற்பட்ட அடிமைகளை தங்கவைத்து தப்பிக்க வைத்தார். உள்நாட்டுப்போரின் கடைசி கட்டத்தில் எல்மிரா கைதிகளின் கூடாரமாக மாறியது.
போரில் இறந்த 2973 வீரர்களை ஆவணங்களை தொகுத்து
அடக்கம் செய்த ஆளுமை ஜோன்ஸ். வீரர்கள் தலைக்கு 2.50 டாலர்களை அரசு அளிக்க பனிரெண்டு ஏக்கர்கள் நிலம் வாங்கி வசித்த ஜோன்ஸ் அங்கேயே
காலமானார்.