டேக் இட் ஈஸி எய்ட்ஸ்!




Related image


எய்ட்ஸை குணப்படுத்துவது ஈஸி!

ஹெச்ஐவி வைரஸ் தாக்கிவிட்டால், நோயாளியின் உயிரைக் காப்பாற்றுவது என்பது சாத்தியமே கிடையாது. கடந்த 35 ஆண்டுகளாக மருத்துவ வட்டாரத்தில் இதே நிலைமைதான். என்ன காரணம், நோய் எதிர்ப்பு செல்களை அழித்துவிட்டு தன்னை அடையாளம் கண்டுபிடிக்க முடியாதபடி ஒளித்துக்கொள்வதுதான்.

தற்போது உலகெங்கும் தோராயமாக 37 மில்லியன் மக்கள் ஹெச்ஐவி வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேஷ்னல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த்(NIH) ஆகிய அமைப்புகள், ஹெச்ஐவி வைரஸைக் கண்டறிவதற்கான வழியையும் அதனை முற்றாக குணப்படுத்தவும் முயற்சித்து வருகின்றன. ARV(Antiretroviral) மருந்துகள் கண்டறியப்பட்டிருப்பதால் ஹெச்ஐவி வைரஸ் ஒருவரின் உடலில் புகுந்து தன்னை மேலும் பெருக்கிக்கொள்ளாமல் இருக்க உதவுகின்றன. இதன் விளைவாக, ஹெச்ஐவி நோயாளி நீண்டநாட்கள் வாழ வாய்ப்பு உள்ளது. ஹார்வர்ட் ஆய்வுமையத்தைச்சேர்ந்த மருத்துவர் டான் பாரூச் குழுவினர் குரங்குகளுக்கு ஏஆர்வி மருந்துகளைக் கொடுத்து செய்த சோதனையில் மருந்துகளை நிறுத்தியபின்பும் ஹெச்ஐவி வைரஸ் திரும்ப தாக்காதது உறுதிசெய்யப்பட்டுள்ளது.மனிதர்களிடம் சோதனை செய்யாதபோதும் இக்கண்டுபிடிப்பு பலருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது  
    


பிரபலமான இடுகைகள்