உலகமயமாக்கலை பேரரசு மூலம் சாதித்தவர்!
உலகமயமாக்கலின்
தந்தை!
மங்கோலியாவில்
எங்கு சுற்றினாலும் தேசிய பிம்பத்தை மட்டும் தவிர்க்கமுடியாது. உலகமயமாக்கலின்
தந்தையாக கூறப்படும் செங்கிஸ்கான்தான்தான் அந்த அடையாளம். தலைநகரம்,
உலன்பாடரிலுள்ள ஏர்போர்ட், வங்கி, தெரு, சதுக்கம், ஏன் வோட்கா கூட
செங்கிஸதான் பெயரில் உண்டு. நகருக்கு 30 கி.மீ வெளியே 130 அடியில் செங்கிஸ்தானின்
சிலையும் கம்பீரமாக வீற்றிருக்கிறது. நவீனத்திற்கு பொருந்திப்போகும்
செங்கிஸ்தான் தன் ஆட்சிக்காலத்தில் மதச்சுதந்திரம், அரசு பள்ளிகள்,
தாராள வர்த்தகம் ஆகியவற்றை பழங்குடிகளை ஒன்றாக்கி பேரரசாக மாற்றி தன்
நண்பன் ஜமுக்காவின் கனவை சாதித்த வல்லவர். ஆசியா, மத்திய கிழக்கு நாடுகள், மைய ஐரோப்பா, இந்தோனேஷியா வரை கைப்பிடியில் வைத்திருந்த செங்கிஸ்கான்(இயற்பெயர் டெமுஜின்) தான் இறக்கும்வரை தன் வாழ்க்கை பற்றி
எழுதவும், தன் உருவங்களை வரையவும் அனுமதிக்கவில்லை.
அச்சு எந்திரம், துப்பாக்கி
மருந்து, திசைகாட்டும் காம்பஸ் ஆகியவை ஐரோப்பாவுக்கு மங்கோலியர்களின்
வணிகம் மூலம் கிடைத்த பொக்கிஷங்கள். இப்போது தலைப்பை மீண்டும்
படியுங்கள்; உண்மையை உணருவீர்கள்.