உங்கள் இதயம் நலமா?

Image result for heart

உங்கள் இதயம் நலமா?

இன்றைக்கு வரும் அனைத்து ஸ்மார்ட் போன்களிலும், ஆப்ஸ்களிலும் இதயத்துடிப்பை கண்டறிவதற்கான வசதிகள் வந்துவிட்டன. உடம்பில் எத்தனையோ பாகங்கள் இருக்க ஏன் இதயத்திற்கு மட்டும் இவ்வளவு முக்கியத்துவம்?

பெரும்பாலானோர்க்கு மரணம் இதயநோய்களால் ஏற்படுகிறது என உலகசுகாதார நிறுவனம் எச்சரித்ததால் சுதாரித்த டெக் நிறுவனங்கள் தற்போது இதயத்தை காக்க புறப்பட்டுள்ளன. ஆப்பிளின் வாட்ச் இதற்கு ஒரு உதாரணம். பொதுவாக இக்கருவிகள் இதயம் துடிக்கும் ரிதத்தில் மாறுபாடு ஏற்பட்டால் உடனே எச்சரித்து மருத்துவசிகிச்சைக்கு உதவுகின்றன. "இதயத்தின் துடிப்பில் மாறுதல் ஏற்பட்டால் வாதம் ஏற்படும் வாய்ப்பு அதிகம்" என பகீர் தகவல் தருகிறார் ட்யூக் பல்கலையைச் சேர்ந்த மருத்துவ பேராசிரியர் எரிக் பீட்டர்ஸன். ஆப்பிள் வாட்ச் ஆப்பான கார்டியோகிராம், இதயத்துடிப்பு தொடர்பான டிப்ஸ்கள் மற்றும் முடிவுகளை அறிய ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்படுகிறது.

அதேசமயம் நாடித்துடிப்பு சரியாக இருக்கும்போதே மாரடைப்பு ஏற்பட்டால் அவற்றை இச்சாதனங்கள் கண்டுபிடிக்க எந்த கேரண்டியும் இல்லை.

உயர் ரத்த அழுத்தம், மன அழுத்தம், சிறுநீரக குறைபாடுகள் ஆகியவற்றில் ரத்த அழுத்தத்தை கணக்கிடுவது சுலபமல்ல.

 பணியைப் பொறுத்து ரத்த அழுத்தத்தின் அளவு மாறும். எக்ஸாம், டெட்லைன் வேலைகள், ஒரே நேரத்தில் தசாவதானியாக பல்வேறு வேலைகளை செய்வது ஆகியவை இதற்கு காரணம்."ரத்த அழுத்தத்தை துல்லியமாக கணக்கிடுவதற்கான சென்சார்கள் இன்னும் போன்களில் வரவில்லை" என்கிறார் குழந்தைகள் இதயநல வல்லுநரான ப்ரூஸ் ஆல்பர்ட். 3டி பிரிண்ட் ஸ்மார்ட்போன்களிலுள்ள ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர்களில் ரத்த அழுத்தத்தை கணிக்கலாம். ஆனால் முடிவுகள் அவ்வளவு துல்லியமில்லை. பத்தில் எட்டு நோயாளிகளுக்கு ரத்த அழுத்தம் தவறிப்போனது. மருத்துவமனைகளில் சேரில் உட்காரவைத்து இதயத்துக்கு சமநிலையில் கைகளை நீட்டி ரத்த அழுத்தத்தை அளப்பார்கள். இதுவும் மோனோரயிலை பிடிக்க ஓடும்போது எடுக்கும் அளவுகளும் எப்படி துல்லியமாக இருக்கும்?

நீரிழிவை கண்டறிவதிலும் ரத்தத்தை சோதிக்காமல் கூகுளின் லென்ஸ், சென்சார் மூலம் கண்டறிவதிலும் துல்லியம் கிடைக்காது. ஏனெனில் குளுக்கோஸை எளிதாக கருவிகளால் கண்டறிய முடியாது. ரத்தத்தை வேதிப்பொருளை பயன்படுத்தி சர்க்கரையை கண்டறிவது எளிதான ஒன்று. ஆப்பிளின் கார்டியாபேண்ட்டை எஃப்டிஏ அங்கீகரிக்கவில்லையென்றாலும் நிறுவனம் ரத்தத்திலுள்ள பொட்டாசிய அளவை திறம்பட கண்டறிகிறது என  கூறுகிறது. அங்கீகாரம் பெற்ற பொருட்களை வாங்கி உடல்நலனை காப்பது நமது ஆரோக்கியத்திற்கு நல்லது.

-கோமாளிமேடை டீம்
நன்றி: முத்தாரம்