இடுகைகள்

மருத்துவம்- இத்தாலி டாக்டர்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உலகை மிஞ்சும் இத்தாலி டாக்டர்கள்!

இத்தாலி டாக்டர்களின் கெட்டபழக்கம் ! ரோமிலுள்ள சபியென்சா பல்கலைக்கழகத்தில் புகைப்பிடிப்பதன் தீமைகளை விளக்கிய பேராசிரியர் கியுஸெப்பெ லாடொரி , இப்பிரச்னைக்கு தீர்வுகாண பிராக்டிக்கலாக முயற்சித்து வருகிறார் . இத்தாலியில் 50 சதவிகித மருத்துவர்கள் புகையிலைக்கு அடிமையாக உள்ளனர் . இந்த அளவு பொதுமக்களின் அளவை விட அதிகம் . " மாணவர்களின் புகைப்பிடிக்கும் பழக்கம் விரக்தி தருகிறது . வகுப்பு முடிந்தவுடன் புகைப்பிடிக்க தொடங்கிவிடுகிறார்கள் " என்கிறார் லா டொரி வருத்தம் தோய்ந்த குரலில் . மருத்துவ உடை அணிந்தபடியே நர்ஸ் (50%), மருத்துவர்கள் (34%) சிகரெட் புகைத்தபடி நிற்கும் காட்சியை இத்தாலியில் சாதாரணமாக பார்க்கமுடியும் ." பொதுமக்களின் 22% என்ற விகிதத்தை விட இது அதிகரித்து செல்வது ஆபத்து " என்கிறார் புகையிலை ஆராய்ச்சியாளர் கியுஸெப்பெ கொரினி . அமெரிக்காவில் 12 சதவிகித நர்சுகளும் , 2 சதவிகித மருத்துவர்களும் புகைக்கின்றனர் . மருத்துவ படிப்பு தரும் மன அழுத்தமே புகைப்பிடிக்கும் பழக்கம் தொற்ற முக்கியக்காரணம் . ஐரோப்பாவிலேயே இத்தாலியில் டீன்ஏஜ் பருவத்தினர் அத