இடுகைகள்

பிச்சைக்காரர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆதரவற்றோருக்கும், பிச்சைக்காரர்களுக்கும் உணவளிக்கும் கோவை முருகன்! - நிழல் மையத்தின் அன்னதான சேவை

படம்
  1992ஆம் ஆண்டு பனிரெண்டாம் வகுப்பில் தோற்றுப்போன சோகத்தில் மூன்றுமுறை தற்கொலைக்கு முயற்சி செய்தார் அந்த மாணவர். அனைத்தும் தோற்றுப்போன சோகத்தில் அப்படியே சாலைகளில் திரிந்தார். கோவையின் சிறுமுகைப் பகுதயில் பிச்சைக்காரர்களோடு  உட்கார்ந்திருந்தார். படிப்பில் தோற்றாகிவிட்டது. இனி என்ன எதிர்காலம் கண்ணில் உள்ளது என்றும் அவருக்கு தெரியவில்லை.  மனதில் துக்கம் இருப்பதால் வயிறு பசிக்காமல் இருக்குமா? வயிறு கபகபவென எரியத் தொடங்கியது. அங்கு வீடில்லாமல் பிச்சை எடுத்துக்கொண்டு இருப்பவர்கள் அனைவருமே சோறு கிடைக்காமல் அதற்காக அங்கு வருபவர்களிடம் கை நீட்டிக்கொண்டிருப்பவர்கள்தான். அப்போது மாணவரைப் பார்த்த கருப்பன் என்ற பெரியவர் அருகிலுள்ள ஹோட்டல் ஒன்றில் வேலைக்கு சேர்த்துவிட்டார். பிறகு அங்கிருந்து சில ஆண்டுகளில் லாரி க்ளீனராக மாறினார். 1998இல் ஆட்டோவை வாடகைக்கு வாங்கி ஓட்டத் தொடங்கினார்.   மனம் வாடி பிச்சைக்காரர்களோடு உட்கார்ந்து சோற்றுக்கு ஏங்கியபோது அந்த மாணவரின் மனதில் இருந்தது ஒன்றுதான். நாம் நல்ல நிலைக்கு வந்தால் இதுபோல வீடில்லாதவர்களுக்கு, மனநிலை தவறியவர்களுக்கு சோறு போட வேண்டும். நம்மால் முடிந்தவர

நியூஸ் பிட்ஸ்! - மும்பையில் இறந்த சேமிப்பு மன்னர்!

படம்
சேமிப்பு மன்னர்! மும்பையில் ரயில் பாதையில் இறந்துகிடந்த பிச்சைக்காரரிடம் 11.5 லட்சம் ரூபாய் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. ராஜஸ்தானைப் பூர்விகமாக கொண்ட பிராடிசந்த் பன்னாராம்ஜி  என்று பெயர் அறியப்பட்டுள்ளார். இவர்,  நாணயங்களாக 1.75 லட்சமும், வைப்புத் தொகையாக 8.77 லட்சரூபாயும், சேமிப்புக்கணக்கில் 96 ஆயிரம் ரூபாயும் சேமித்த தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. சூழல் போராட்டம்! உலகமெங்கும் அரசுகளுக்கு எதிரான சூழல் போராட்டம் வெடித்துள்ளது. ஆஸ்திரேலியா, பிரான்ஸ், நியூசிலாந்து ஆகிய நாடுகளில் சட்டமறுப்புஇயக்கமாக சூழலியலாளர்கள் தெருக்களில் அமைதியாகக் கூடி போராடி வருகின்றனர். லண்டனில் இருநூறுக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை காவல்துறை கைது செய்துள்ளது. தூய்மையான கங்கை! 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தூய்மையான கங்கை திட்டத்தொகை ஐந்து ஆண்டுகளில் 15 மடங்கு உயர்ந்துள்ளது. மத்தியஅரசு 2015-2020 காலகட்டத்தில் தூய்மைப்பணிக்காக 20 ஆயிரம் கோடியை ஒதுக்கியுள்ளது. தற்போது நமாமி கங்கா திட்டத்தொகை 3 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது என்றார் தூய்மை கங்கை திட்ட இயக்குநரான ராஜீவ் ரஞ்சன் மிஷ்ரா.