இடுகைகள்

வெனிசுலா - மதுரோ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வெனிசுலாவில் என்ன நடக்கிறது?

படம்
வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை அபகரிக்க அமெரிக்க போட்டி அதிபரை உருவாக்கியுள்ளது. இதை தீவிரமாக எதிர்த்துள்ள மதுரோ, “நீங்கள் அதிபர் மாளிகையை விட்டு வெளியேறும்போது, ரத்தக்கறையுடன் வெளியேறுவீர்கள்” என்று எச்சரித்துள்ளார். வியட்நாம் முடிவை அமெரிக்கா எதிர்கொள்ளப்போகிறது என்று ஸ்பானிய பத்திரிகையாளர் ஜோர்டி எவோலிடம் பேட்டி அளித்துள்ளார். ஐரோப்பிய நாடுகள் தேர்தல் நடத்தக்கூறிய கோரிக்கையை மதுரோ நிராகரித்துவிட்டார்.  இனி தேர்தல் 2024இல்தான். ஐரோப்பிய நாடுகளின் கோரிக்கைகளை நான் ஏற்கவேண்டியதில்லை என்று திடமாக கூறிவிட்டார் மதுரோ. "உலக அரசியல் என்பது இன்றோடு முடிந்துவிடப் போவதில்லை. அமெரிக்கா செய்வது காலனிய ஆட்சியை நினைவுபடுத்துகிறது" என்றார் மதுரோ. தற்போது ஆயிரக்கணக்கிலான வெனிசுலா மக்கள் அதிபரை நாட்டை விட்டு வெளியேறக்கூறி காரகாஸில் போராடி வருகின்றனர். முப்பது லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அதிகளவு பணவீக்கம் அதிகரித்ததால் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர். இந்த எண்ணிக்கை 50 லட்சமாக அதிகரித்துள்ளது. ஆனால் எட்டு லட்சம் பேர்தான் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என சாதிக்கிறார் மதுரோ.