இடுகைகள்

எள்ளு உருண்டை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

5 ட்ரில்லியன் பொருளாதாரத்தை இந்தியா எட்டிப்பிடிக்க வழிகள்! - சேட்டன் பகத்

படம்
  ரேஷன்கார்டில் வழங்கும் இருபது பொங்கல் பொருட்களை வாங்க அடிதடி நடக்கும் நேரம். தடுப்பூசி சான்றிதழை காட்டினால்தான் பொருட்கள் கிடைக்கும் என அரசு மக்களை மிரட்டிக்கொண்டிருக்கிறது.  இதே நேரத்தில்தான் போரம் மால், எக்ஸ்பிரஸ் அவென்யூ என நாடு முழுக்க உள்ள பல்வேறு மால்களில் தடுப்பூசி சான்றிதழ்களை கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். கூட்டமும் இரண்டு வருஷம் அடைச்சு வெச்சீங்களேடா என மால் முழுக்க சுற்றி வருகிறது. புத்தகங்களை படிக்க இல்லாமல் அடுக்கி வைக்க கூட வாங்குவார்கள் அல்லவா அதுபோல, குலாப் ஜாமூன், பஜ்ஜிமாவு மிக்ஸ் என மயிலை மாமா அள்ளிக்கொண்டு இருக்கிறார். உலகம் அழியப் போகிறதா இல்லை அடுத்த வைரஸ் வந்துவிட்டது. அதற்குள் எல்லாவற்றையும் செய்துவிடலாம் என மக்கள் நினைக்கிறார்கள். இதை அரசு லாபமாக பார்க்கிறது. அதாவது பொருளாதாரம் வளர்ந்துகொண்டிருக்கிறது ப்ரோ? வேலைக்கு போகிறார்களா அல்லது இந்தியாவை விட்டு தப்பி யோடுகிறார்களா என்று தெரியாதபடி கூட்டம் விமானங்களில் அள்ளுகிறது. அங்கேயும் ஃபுட்போர்டு அடிக்கும், ஸ்டேண்டிங்கில் நிற்கும் சீட்டுகள் விற்றால் கல்லா கட்டலாம் போல. ஆப்கானிஸ்தானில் தாலிபன் ஆட்சிக்கு வந்ததும் நடந